கவிதை: வலுவான உறவு வற்றாத கண்ணீர் வே.ம.அருச்சுணன் – மலேசியா விடியா காலைப் பொழுதில் இடியாய் வந்தே இதயத்தைத் துளைத்தே மக்களைத் துடிக்க வைத்தே கண்ணீர் கடலில் மிதக்கவைத்தாய்............! இறைவா இதுவென்ன அடுக்கான சோதனைகள் ? மாதங்கள் நான்கு நகருவதற்குள் மற்றுமொரு சோதனையா............... ? வண்ணச்சிறகுகள் பூட்டி சிங்காரமாய் வானில் கம்பீரமாய் வலம் வரும் மாஸ்சே நீ கயவர்களின் சதியால் தூளாகி மண்ணில் சிதறியக் காட்சிக் கண்டு மனம் இனம் , மதம் , மொழி பாராமல் பதறாத மலேசியர் யாருமுண்டோ........... ? உலக மக்கள் பலரை வாஞ்சையோடு இரண்டு சிறகால் மலேசிய மண்ணின் ம ணம் நுகர்ந்திட ஆவலாய்ப் பறந்து வந்தாய் வஞ்சகரின் கணைகள் உன் சிறகொன்றை நடுவானில் சிதைத்தார் சிற்சில வினாடிக்குள் 295 ஆத்மாக்கள் வயல் காட்டில் அனாதைகளாய்ப் பிணங்களாய்...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்