தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள் வே.ம.அருச்சுணன் நினைக்கும் போதே இனிக்கும் தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை உள்ளத்தைக் கிள்ளிச் செல்கிறது............! உலகில் இந்துகளை ஒன்றிணைக்கும் மந்திரச் சொல் தீபாவளி ஏழையும் பணக்காரனும் துயர் மறந்து உற்றார் உறவினர் மனம் திறந்து பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து மங்களத் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்............! அன்று தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம் இன்று பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம் நன்னாளிலும் சிதறுண்டு போனோம் வேற்றுமையில் தொடராய்த் தமிழினம் கண்மூடிச் செல்வது பல்லின நாட்டில் நமக்கு இழப்புகள் மிகுதியாய்க் கைகோர்க்கும்............! இருள் மறைந்து ஒளிதரும் சீர்மிகு திருநாளில் தமிழினம் எழுச்சிக் கொள்ளட்டு...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்