புதுக்கவிதை : புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக...! வே.ம. அருச்சுணன் அதிர்வையும் அனுபவங்களையும் தந்த 2012 ஆம் ஆண்டே விடை பெறுக பூத்துக் குலுங்கப் போகும் 2013 ஆம் ஆண்டே நம்பிக்கை மலர்களை உள்ளத்தில் நிறைவாய் ஏற்றி வரவேற்பு கூறுகிறோம் வளமான வாழ்வை வஞ்சகமின்றி எனது சமுதாயத்திற்குத் தந்திடுக.....! பட்ட துன்பம் போதும் செமத்தியாய் ஏமாந்தது போதும் மரம் போல் ஏணியாய் நின்றது போதும் துணிவாய் ஏணியில் திடமாய் ஏறி வெற்றி வானில் பயணிக்க வந்திடுக புத்தாண்டே....! வாழ்வு தந்த பொன் நாடும் தாய் தந்த செம்மொழியும் உள்ளத்தில் வைரமாய் மின்னிட ஒற்றுமை மக்கள் மனதிலே தேனாய்த் பாய்ந்திட விரைந்து வந்திடுகப் புத்தாண்டே....! நாட்டில் நல்லவைப் பிறந்திட வல்லமை தாராய்ப் பிணக்குகள் இன்றி ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்