புதுக்கவிதை: தமிழைப் படி பக்தனே 27.1.2013 வே.ம.அருச்சுணன் நாட்டின் தொலைதூரத்திலிருந்து என்னைப் பக்தியோடு காண வந்த பக்தனே உன்னை ஒன்று கேட்பேன் தெளிவாகப் பதில் கூறு......! தமிழ்க்கடவுளே......! பத்துமலை முருகனே அன்பின் பிறப்பிடமே என் தெய்வமே உண்மைப் பக்தனான என்னிடம் கேள்வியா...... ? என்ன சொல்கிறாய் முருகா... ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே என் பக்திமீது சந்தேகமா முருகா.... ? விளக்கமாகக் கூறுங்கள் பக்தனே......! நான் சொல்லப் போவதைக் கவனமுடன் கேள் நீ பேசும் தமிழைக் கேட்டேன் தமிழை நீ உச்சரிக்கும் முறையக் கேட்டேன் காதில்.......! ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்