கவிதை: எழுச்சிக் கவிஞன் பொன்.நாவலன் 29.9.2014 வே.ம.அருச்சுணன் தன்மானக் கவிஞருள் பொன்னான கவிஞன் பொன்.நாவலன் சொந்தங்களைவிட சந்தங்களை அதிகம் நேசித்தவன் சந்தக்கவிஞராய் முகம் காட்டியவன் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் தொய்வில்லாமல் தெளித்தவன்.................! சுரதாவை வாசித்தவன் பாரதிதாசனாய் உருவெடுத்தவன் இனமானக் கவிஞனாய் ஒற்றுமையில் மக்கள் வாழ்ந்திட நெருப்பாய்க் கவிதைகள் தந்தவன்...............! நோய் வந்த போதும் உந்தன் எழுத்துப் பயணம் ஒருபோதும் நின்றதில்லை மேடையில் கவிமுழக்கம் கடுகளவும் குறைந்ததில்லை ஏடுகளில் எழுதுவதும் வானொலியில் கவி பாடுவதும் நிற்கவில்லை............! கிழவனையும் வாலிபனாக்கும் உந்தன் கவிதைகள் சமூகத்தை வழிநடத்தும் எதிர்காலம் சிறக்கும் வரை போராடச் செய்யும்................! இனிய சொல்லும் அடக்கமும் மனித...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்