கவிதை: தீப்பொறி கவிஞரே நீங்களுமா வே.ம.அருச்சுணன் நாளும் கவிமழை பொழிந்த தீப்பொறியே நீங்களுமா தீடீரென எங்களை விட்டு மறைந்து விட்டீர்.........! என்ன கொடுமை மண்ணின் மணம் பரப்பிய இலக்கிய ஜாம்பவான்களின் மரணித்தல் தொடர்கதை தானோ.........! சிறுகதை மன்னன் மு.அன்புச்செல்வன் நாவலாசிரியர் ப.சந்திரகாந்தம் தேன்சுவைக் கவிஞர் சீனி நைனா புதுமைக்கவிஞர் பொன்.நாவலன் தீப்பொறியாரே மனம் வலிக்கிறது மறைவை ஏற்க மறுக்கிறது.....! மரபுக்காகவே பிறப்பெடுத்து நற்கவி பல புனைந்தீர் மரபை மீறும் கவிஞரைச் சுட்டெரிக்கும் தீப்பொறியே மரபுக்கவிதை தள்ளாடும் வேளையிலே மண்ணை மறந்து விண்ணை நோக்கி நெடும் பயணம் சென்றதேனோ........! தீப்பொறியாய் சொற்கள் வெடித்தாளும் யாருக்கும் தீங்கிழைக்கா பிள்ளை மனம் உனக்கு மணிக்கவிஞர் படைதனை நாட்டில் திரட்டிவிட்டாய் உன் பணிதனைத் தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர் ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்