புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு 2 7 .12.2014 வே.ம.அருச்சுணன் பூத்துக்குலுங்கும் புத்தாண்டே வருகவே புதுமைகள் சூழந்தே புண்ணிய பூமியில் புனித வாழ்வைத் தருகவே........! 2014 ஆம் ஆண்டு மனங்கள் குலுக்கின கண்கள் குளமாகி இதயங்கள் சிதறின அந்தக் கணங்கள் மறக்க முடியுமா ? மாயமாகிப்போன விமானம் பீரங்கித் தாக்குதல் வானில் சிதறிய செல்வங்கள் மீண்டும் வருவார்களா நம்மோடு மகிழ்வோடு உறவாடுவார்களா ? அந்த மரணத்துளிகள் கனவிலும் வேண்டாம் ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........! நம்பிக்கை ஒளிதரும் 2015 ஆம் ஆண்டே நலம் சேர்க்க வாரீர் நாடும் மக்களும் வளம் பெற மலர் தூவி வாழ்த்துக........! தமிழர்கள் இங்கே ஒற்றுமையில் தலைதூக்கி சோதனைகளைப் பொடியாக்கி தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு தமிழ் காக்கும் மொழியினராய் சமயம் வாழ்விக்கும் நல்லோராய் பொருளியலில் காலூண்றி வாழ்தல் வே...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்