கவிதை : உயிர்க் கொல்லி கொரோனாவே வே.ம.அருச்சுணன் உயிர்க்கொல்லி கொரோனாவே ஏன்வந்தாய் ? ஊரையழிப் பதுனக்கு சுகம்தருமா மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால் மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ ? பொறுப்பற்ற அற்பர்களின் செயல்தனிலே போர்தனில் வீழ்வதுபோல் அழிகின்றாரே மறுப்பேதும் கூறாமலே மாள்கின்றாரே மாமணியாய்ப் பிறந்ததன் பயன்யாது ? உன்பொல்லா குணத்தாலே உலகமினி உருப்படியாய் இருக்காதென மனிதகுலமும் நன்றேயினி வாழ்தலும் இயலாதென்றே ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்