கோவிட்- 19 2019 , சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விடுகிறேன்.வாசல் கதவை ஆவலுடன் திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறேன்! ஹரிராயாவின் காலைப்பொழுது இனிமையுடன் மலர்ந்திருந்தது! விடிந்தும் விடியாததுமாகக் கருக்கலிலேயே ‘ கம்போங் புக்கிட் கூடா , ஒருமாத நோம்பிற்குப்பின் விழாக்கோலம் பூண்டிருந்தது! எனது வீட்டைச் சுற்றியுள்ள பத்து வீடுகளிலும் கழிகள் தாங்கி நிற்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் மத்தாப்புக்குக் கொளுத்தி விளையாடு கின்றனர். குழந்தைகளின் ஆடலும் பாடலும் , சிரிப்பொலிகளும் காலைப்பொழுதை மேலும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டிருந்தன.ஆனந்த கூத்தாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பெற்றோர்களும் உற்சாகமுடன் கலந்து கொள்கின்றனர். சிறிய மலை மீது அமைந்திருக்கும் அந்த மலாய் கம்பத்தில் , பல ஆண்டுகளுக்கு முன்பு , வசதி படைத்த ஒருவர் குதிரை வளர்த்து அதன் மீதேறி பயணித்திருக்கிறார். அதன் நினைவாக ‘ கம்ப...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்