முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொங்குகவி நெடுமாறன்

பொங்குகவி நெடுமாறன்
************************************
பாப்பாவின் பாவலராம்
பைந்தமிழ்க் காவலராம்
தீப்பார்வை பாராத
தெள்ளுதமிழ் நாவலராம் !
மூப்பிலும் குழந்தைகள்
முன்னேறப் பாடிடுவார்!
யாப்பறிந்தே மலையத்தில்
பாப்புனையும் முரசவராம் !
பூப்போன்ற உளங்கொண்டார்
பொங்குகவி நெடுமாறன் !
காப்பியமாய்க் களஞ்சியத்தை
கனிவோடு வழங்கியவர் !
நாப்பொழியும் தமிழெல்லாம்
நயம்மிக்கப் பண்ணாகும் !
கோப்பையின் மதுநாணும்
கோமகனார் கவிகண்டே !
********************************
எழுத்தாளர் வே.ம.அருச்சுணன்
14.1.2021.
(14.1.2021 "பாப்பாவின் பாவலர் "முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளாகும்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...