கவிதை: செம்மொழியும் சேமமும் 21.1.2020 வே.ம.அருச்சுணன் செம்மொழிப்பாடல் பாடுவதால் சேமமாகுமே– இங்கே சேதாரமின்றி வாழ்ந்திடலும் உண்மையாகுமே...! வம்பிலாவாழ் வுதனையேற்றலில் உன்னதமாகுமே– இங்கே வான்முட்டும் சீரியவாழ்வும் நிலையாகுமே....! தும்பியல்வாழ் விங்கேநீக்கின் செழுமையாகுமே- இங்கே தூற்றலில்லா ஒருமைவாழ்வும் உறுதியாகுமே....! எம்மொழியாலே ஒளியேற்றிநல் வாழ்வும்வந்திடுமே- இங்கே ஏளப்பேச்சினைத் துறப்பின்வாழ்வு பொன்னாகுமே...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்