கவிதை : ஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ 21.8.14 வே.ம.அருச்சுணன் - மலேசியா ஆளாய்ச் சென்று மக்கள் ஆவியாய் பிறந்த மண் திரும்புவது என்ன கொடுமை? உலகில் இப்படியும் நடப்பது மனம் ஏற்குமா? பச்சைப் பாலகன் முதலாய் இளையோர் முதியோர் வாழ்வில் வசந்தம் இனிய கீதம் இசைக்க வானில் பயணிக்கும் வேளை பாவிகளின் அடாவடியால் நொடியில் தூளாகிப்போனது இறைவா உன்னதாட்சியில் நீதி கள்ளத் தோணியில்ஏறிக்கொண்டதே! இறந்த பின்னும் பிறந்த மண் தேடியவரும் எங்கள் அன்புச்செல்வங்களே நாட்டு மக்கள் இனம்,மதம்,மொழி கடந்து வரவேற்க நீங்கள் சென்ற நுழைவாயில் ஆராத்துயரடன் அகன்ற விழிகளோடு மடைதிறந்த வெள்ளம் கண்களில் கொப்பளிக்க வரவேற்கிறோம்………..! நீங்கள் நாட்டின் தேசிய வீரர்கள் இன்னுயிரைத் தந்து நாட்டுப்புகழை உயரத்தில் உயர்த்திப் பிடித்தவர்கள்……! நாடே உங்களுக்காக ஒரு நிமிடம் மௌனம் கொள்கிறது புனிதமான உங்கள் ஆத்மா சொர்கத்தில் நிச்சயம்………..! அறியாமல் ...