முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாக்கம்



 கவிதை:                          தாக்கம்                   27.6.2020                                                                            

தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                         
    தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை
தமிழரும் முயன்றும் எழுந்திட  வில்லை   
     தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை
அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை 
     ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்    
இமயம்போல் வெற்றிதனை உறுதி  செய்வீர்    
      ஈடற்ற அறிவாலே  அகிலம் வெல்வீர்....!

முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்      
      மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும்
அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு
        ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து
இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்
         இமயம்போல் வெற்றியினை இனம் பெறக  
உயர்வினை நோக்கியே  ஊக்கம்  கொள்க
        உலகத்தார் வணங்கிடும் நன்னாள் கூட்டு....!

துயரமின்றி வாழ்வதற்குத் முயற்சி செய்க      
        தூற்றலில்லா பெருவாழ்வு தளராது தருக    
உயர்வான பொருளியலே வாழ்வின் உச்சம் 
       உழைப்பின் தாக்கத்தால் உன்னதம் அமைத்திடு
அயலவரும் முனைப்புடன் இனம்  காப்பாய்
        அயராமல் உழைத்தே எளிதில்  வென்றிடு  
இயலுமட்டும் உழைத்தாலே கனவும் கைக்கூடும்
      ஈயும்குணத்தால் துன்பங்கள் தூளா கிடுமே!

பல்லினம் மக்களால் பலம் சேர்த்திடு
     பார்புகழைப் பெற்றிடவே நாளும்  முந்திடு
எல்லையிலா வாழ்வுதனில் தமிழரும் உயர்த்திடு  
      ஏக்கங்கள் போக்கிடவே உழைத்து  முனைந்திடு   
இல்லாமை போக்கிடவே துணிவாய்  இயங்கிடு
      இனிதாக வாழ்வதற்குப் பாசம் காட்டு  
 நில்லாபெரு வாழ்வும் நீங்காமல்  உழைத்திடு
      நீக்கமற புதுவாழ்வும் உணர்வில் புகுத்தி விடுக...!

தொல்லைகள் மறந்திடவே அறவழி செல்வீர்  
        தோற்றிடும் வரலாற்றை வேருடன் பிடுங்கிடு
வெல்லும் வழிதனில் நயமுடன் சென்றிடு  
       வெற்றிகள் குவிந்திடவே  உள்ளம் வளர்த்திடு
எல்லையற்ற அன்பாலே இணைந்து வாழ்ந்திடு  
       ஏங்கிடும் உள்ளங்கள் அமைதிக்கு உதவிடு 
வல்லமை மிகுந்திட்ட இனமாக நிலை பெறுக
       வாடியமுகமும் வடிந்தோடும் கண்ணீர் தடுத்திடு...! 

இனத்தால் ஒற்றுபட்டு நாடு வளர்திடு    
    இணைந்திடும் பண்பாலே பல்லினம் காத்திடு  
தன்னிகரில்லா இனத்தைப் பெறவே இயங்கிடு      
    தானங்களால் தர்மங்களால்  ஏழைகள் காத்திடு  
மனத்தாலே ஓரினமாய் வாழவே ஊக்கமளி
     மாசற்ற குணத்தாலே குவலயம் போற்று   
தினம்பூக்கும் புதுமலராகப் பூரிப்பு பெருக்கு
     தீபச்சுடராய் ஒளிபடைத்த  இனமாய்  நிமிர்த்திடு...!

துயரத்தின் தாக்கத்தால் கோவிட்-19  வந்தது  
      தொலைநோக்கில் மருத்துவம் மதியில்  கண்டோம் 
அயர்விலா உழைப்பாலே உயிர் காத்தோம்
      ஆண்டவன்  துணையுடன் மனிதரை மீட்டோம்    
 நயமுடன் நன்மைகள் பெருகிட முயன்றோம்
       நலமுடனே  வெற்றிதனைக் குவித்து மகிழ்ந்தோம்      
கயவரின் கொட்டங்கள் தகர்த்து விட்டோம்
      காலமினி நமதென்றே  பாடி மகிழ்திடு...!

மங்கிடா தாக்கத்தாலே வாழ்வில் நிமிர்ந்திடு
      மண்ணுயிரும் மகிழ்ந்திடவே  மனிதம் காட்டு    
எங்குமே நம்மினமும்  எளிமையில் தொடர்க
      எத்துயரும் தாக்கினாலும் எழுச்சி தூக்கிடு
சிங்கங்கமென வீரமுடனே  தர்மம் தொடர்க
       சீர்பெற்றே இனமாகவே சரித்திரம் படைத்திடு
தாங்கிடும் மக்களென்றே கீர்த்தி காட்டிடுக
       தமிழனாய்த் தரமுயர்ந்தே எழுச்சி கொள்வோம்.....!

                                          நிறைவுற்றது


            
            
 
      
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.  ...

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:          சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்                  இலக்கிய குரிசில் மா.இராமையா                                                                வே.ம.அருச்சுணன்                                        சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான்  கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும...