முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்காலம் மண்ணாகலாமா

:          எதிர்காலம் மண்ணாகலாமா           8.5.2013
                            வே.ம. அருச்சுணன் – கிள்ளான்

நடந்து முடிந்த
பதின்மூன்றாவது தேர்தலில்
மூவினத்தின்
அடையாளம் தெரிந்தது.....!

மூன்று வந்தேறிகளுக்கும்
நிலைமை தெரியவில்லை
ஆட்டத்தை நிறுத்தவில்லை
வயிற்றுக்காக வாடிய மக்கள்
வந்த இடத்தில்
வகை தெரியாமல் வாழ்கின்றன.....!

இங்கே
ஏற்றம் தராது மந்திரத்தை
துணிவாய் முழங்குவதும்
ஒருவரைவொருவர்
தின்று ஏப்பமிட எண்ணுவதும்
வீண் வம்பு
சொன்னால் நம்பு.....!

எடுப்பது பிச்சை
பேசுவதோ கொச்சை
பேச்சில் ஒற்றுமை
நடப்பில் வேற்றுமை
அகம்பாவம்
தனக்கே எல்லாமென்ற
குறுகிய உள்ளம்
சிறக்குமா இந்த பெருநிலம்....?

கேடு கெட்ட  உள்ளமே
துன்மார்க்கனே
சுனாமி
எந்த உருவில்
வருமென்று தெரியுமா....?

முதுகொடிந்த
தமிழனுக்கு இன்னுமா
சோதனைகளும்....வேதனைகளும்......?

ஒரு சொல் கேளீர்
சீன சமூகம்
அவர்களோடு கூடிப்பழகு
ஒற்றுமையின் உச்சம் தெரியும்
போராடும் வல்லமை புரியும்
அவர்கள்
மொழி....பண்பாடு
கணமும் மறந்ததில்லை
எழிச்சியைக் கிஞ்சிற்றும்
துறந்ததில்லை.......!

யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
யாரையும் ஏற்பதும் இல்லை
சுயமாய் சிந்திப்பதும்
செயல்படுவதும்
அவர்களின் வெற்றிக் கவசங்கள்......!

உண்மை உணர்வீர்
இனிய வாழ்வு
மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்.....!

இளையோரே முன்வருவீர்
தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
அடிமை வாழ்வைத் துறந்தே
சுயமாய் வாழ்வு சிறக்க
சொந்த தொழில் புரிவோம்
அடிமைத்தொழிலை மறந்து
செல்வச் சீமானாகத் திகழ்வோம்......!

கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
உறக்கக்கூறுவோம்
ஒரே குரலில்......!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

இந்தியர்களைக் காப்பவர்களுக்கே நமது ஓட்டு!

கட்டுரை:                இந்தியர்களைக்  காப்பவர்களுக்கே                                                            நமது ஓட்டு!                                       வே.ம.அருச்சுணன்         ‘ ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் ’ என்பது போல் அண்மையில்  பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதைக் கண்டு இந்திய சமுதாயம் அதிச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.56 ஆண்டுகளாக ஆட்சி புரியும் பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் வாழ்க்கை உயரவில்லை.2008 ஆம் ஆண்டு இந்தியர்க...