முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்களின் உறக்கம் கலையட்டும்

தமிழர்களின் உறக்கம் கலையட்டும்                                                                      வே.ம.அருச்சுணன் –மலேசியா  இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாதார் , குறிப்பாக இந்தியர்கள் அமைதியாக வாழ நினைக்கின்றனர்.இதற்கு முக்கியக் காரணம் , இந்நாடு நாம் பிறந்த பூமி.இந்தப்பூமி அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும்.உலகின் எந்தப் பகுதியில் இருந்து இங்கு வாழ்வு தேடி வரும் உயிரினங்களுக்கு  அடைக்கலம் தருவது நாம் கொண்டிருக்கும் மனிதநேய அடிப்படையில்தான்.மேலும் , பல்வேறு கலை கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் பல இனத்தவர்களுடன் புரிந்துணர்வுடன் அன்பு பாராட்டி ஒற்றுமையுடன் வாழ்வது அவசியமாகிறது.காட்டையழித்து நாட்டை உருவாக்கிய , இந்தியர்கள் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசாங்கத்திற்கும் , மன்னருக்கும் முழுவிசுவாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்தியர்கள் வழங்கி வருகின்ற பிளவு படாத ஆதரவை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.நாட்டையாளுகின்ற பாரிசான் அரசாங்கமும் இந்தியர்களின் விசுவாசத்தை நன்கு அறிந்தே வைத்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை. பலநிலைகளில் பின்தங்கியிருந்த , மலாய் மக்களின் உயர

வாலியின் புகழ் வாழியவே.....!

புதுக்கவிதை: வாலியின் புகழ் வாழியவே.....!     19.7.2013                         வே.ம.அருச்சுணன் தமிழைக் கற்றவருக்கு ஆயுள் நீளம் என்பார் உன் நாவில் விளையாடியது தேன் சிந்தும் தமிழ் அல்லவா.....! மனம் குளிர்ந்த தமிழன்னை உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார் 82 அகைவையிலும் இளசுகளின் உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த வாலிபக் கவிஞன் நீ...........! அற்புதக் கவிகளால் கவியரசு கண்ணதாசன் மனம் கவர்ந்த கவிஞனே கலைஞர் காவியம் பாடியக் காவியக் கவிஞனே உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு காவையத்தைச் செதுக்கி இருக்க முடியாது..............! பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன் தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி பாடல்களின் பிரம்மனே வாலியின் பெயரே உனை சிகரத்தில் நிறுத்தியது மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது.........! நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை பத்தாயிரம் பாடல்கள் தந்து தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய் கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்............! இரவும் பகலும் உன் கடும் உழைப்பை கண்டு உன்னிடம் இயற்கை உன்னிடம் தலை வணங்கியது உழைப்பே மனிதனை உயர்த

இந்த வார வல்லமையாளர்

இந்த வார வல்லமையாளர் வெ.திவாகர் மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான். மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம். இயந்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தன