முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2014 ஆம் ஆண்டில் தமிழ் பேராசியர் மறைமலை இலக்குவனார் மற்றும் ஓவியக்கவி கோவி.பெருமாள் அவர்களுடன் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன்

                                        2014 ஆம் ஆண்டில் மலேசியாவின்  கிள்ளான் நகரத்தில்  தமிழ் பேராசியர் மறைமலை இலக்குவனார் மற்றும்  ஓவியக்கவி கோவி.பெருமாள் அவர்களுடன் எழுத்தாளர் திரு.வே.ம.அருச்சுணன் 

ஏங்கும் சுதந்திரம்

கவிதை:     ஏங்கும் சுதந்திரம்       வே.ம.அருச்சுணன் – கிள்ளான் ஐம்பத்தேழு ஆண்டுகள் மறைந்த மாயம் தெரியவில்லை மூன்று இனங்களின் தொலை நோக்கு நிரந்திரமாய் அன்னியரின் தொல்லைகள் மாய்தன………..! ஆகஸ்டு 1957 31 கதிரவன் கண் விழிக்க அரங்கத்தில் மக்கள் கடலாய்  நிறைந்திருக்க பெருமிதம் நெஞ்சில் சுமந்திருக்க   சுதந்திரத்தந்தை துங்கு மெர்டேக்கா……..மெர்டேக்கா ஏழுமுறை சீரிய சிங்கமாய் உணர்ச்சியின் உச்சத்தில் சங்கநாதமாய் முழங்கிட மக்கள் இடியாய்த் தொடர்ந்தனர்.......! அன்றுதான் மக்கள் முதல் முறையாக சுதந்திரக்காற்றை ஆழமாய்ச் சுவாசிக்கத் தொடங்கினர்………! இனி ஏழேழு தலைமுறையும் பிழைத்துக் கொள்ளும் நம்பிக்கை…..நம்பிக்கை மக்கள் முகங்கள் பூத்த மலர்களாய் மணம் வீசின தெருவெல்லாம் வண்ண மயிலாய் நர்த்தனம்…………! அடிமை வாழ்வு துறந்துவிட்டோம் மூவினமும் சமநிகராய் உய்வதற்கு மண்ணின் மைந்தன் பிறப்புரிமை போதுமென்றே இறுமார்ந்தே 57 ஆண்டுகள் கண்மூடி ஒட்டளித்தே மண்டூகமாய் வாழ்ந்துவிட்டோம்……! 2020 நோக்கி நாடு வெற்றிப் பயணம் வானலாவிய கட்டிடங்கள் ஒரு

ஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ

கவிதை :  ஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ 21.8.14                  வே.ம.அருச்சுணன் - மலேசியா ஆளாய்ச் சென்று மக்கள் ஆவியாய் பிறந்த மண் திரும்புவது என்ன கொடுமை? உலகில்   இப்படியும் நடப்பது மனம் ஏற்குமா? பச்சைப் பாலகன் முதலாய் இளையோர் முதியோர்   வாழ்வில் வசந்தம் இனிய கீதம் இசைக்க வானில் பயணிக்கும் வேளை பாவிகளின் அடாவடியால் நொடியில் தூளாகிப்போனது இறைவா உன்னதாட்சியில் நீதி கள்ளத் தோணியில்ஏறிக்கொண்டதே! இறந்த பின்னும் பிறந்த மண் தேடியவரும் எங்கள் அன்புச்செல்வங்களே நாட்டு மக்கள் இனம்,மதம்,மொழி கடந்து வரவேற்க நீங்கள் சென்ற நுழைவாயில் ஆராத்துயரடன் அகன்ற விழிகளோடு மடைதிறந்த வெள்ளம் கண்களில் கொப்பளிக்க வரவேற்கிறோம்………..! நீங்கள் நாட்டின் தேசிய வீரர்கள் இன்னுயிரைத் தந்து நாட்டுப்புகழை உயரத்தில் உயர்த்திப் பிடித்தவர்கள்……! நாடே உங்களுக்காக ஒரு நிமிடம் மௌனம் கொள்கிறது புனிதமான உங்கள் ஆத்மா சொர்கத்தில் நிச்சயம்………..! அறியாமல் தவறுகள் செய்திருந்தால் பெருமனதுடன் எங்களை மன்னிப்பீர் நாடு மீண்டும் அமைதி பெற மக்க

இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!

                இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!         7.8.2014                                               வே.ம.அருச்சுணன்  - மலேசியா இனிய பேச்சும் நுண்ணிய கருத்தும் தொலை நோக்குப் பார்வையும் வலுவான கருத்தாலும் பிறவிக் கவிஞராய் மனித மனங்களில் தடம் பதித்த மாமணியே திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ? கவியுலகின் கலங்கரை விளக்கே கவியால் வான்புகழ் பெற்றவரே உனது பிரிவால் கவியுலகம் கலையிழந்து போனதே கானக் குயில் குரல் இழந்தே வாடுதல்  பொறுக்கலையே கைபிடித்த வளர்ந்த குழந்தை திசை இழந்து துடிக்குதே கவிமழை பொழிந்த வானம் காரிருளில் பொசுங்குதே.........! உன் தொல்காப்பிய உரைக்கு மனம் குளிந்த மனங்கள் நாட்டில் பலருண்டு தேனுண்ட வண்டாய் களிப்புற்ற உள்ளங்கள் தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட   இறைவனிடம் மண்டியிட்டார் தொல்காப்பிய விருதும் தந்து உங்கள் மனம் குளிரவைத்தார்.............! உந்தன் கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு நாங்கள் தளமிழந்தோம் சந்தேகம் கேட்க இனி யாரிடம் செல்வோம்? கவிக்கோமானே எங்களை விட்டு வெகு தூரம் சென்றதன் நீதி என்ன?