முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும் புகைமூட்டக் கண்ணாமூச்சுகள் காற்றாய்ப் பறந்து போகும்!   இயற்கைதனை அழிப்போர் இறைவனின் எதிரியென்போம் படைத்தவன் நமக்களித்த வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும் அரக்கனை அழிப்போம் பண

இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரல்வோம்

கட்டுரை:      இந்திய ஆய்வியல் துறையைக்                       காப்பாற்ற அணிதிரல்வோம்                        ( வே.ம.அருச்சுணன் – மலேசியா) நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘ சுடும் உண்மைகள் ’ பகுதியில் மனதைத் தைக்கும் விசியங்களை ஆதாரத்துடன்  ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாதத் தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா ? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா ? என்று வியக்காதவர்கள் யார் ? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்காப்பில் இந்திய இளைஞர்களின்  தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே , கல்விமான்களும் , நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதும் , தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது , இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டா

என்ன அவசரம் சிவம் ....?

புதுக்கவிதை :   என்ன அவசரம் சிவம்..... ?     புதிதாய் மலர்ந்த மலரே உன் மணம் தென்றலில் கலக்குமுன்னே நீ மறைந்து போனது ஏனோ ? என்ன அவசரம் சிவா ? இறைவன் உனக்கு அழகைத் தந்தான் மறக்காமல் ஆற்றலையும் தந்தான் சுமைகள் அதிகம் என்றே மின்னலாய்ப் பறந்து போனாயோ ? இந்த வயதில் செல்வதற்குத்தான் அளவுடன் பேசினாயோ ? அன்புடன் பழகினாயோ ? புன்முறுவலுடன் அமைதியுடன்  இருந்தாயோ ? நிறைகுடம் தளும்பாது என்றே எண்ணிக்கொண்டேன்....! ஏமாந்து விட்டேன் சிவம் உன் எழுத்தால் உலகம் நிமிரும் என்றே என்னுள் பெரிய கணக்கு ஆனால் , உன் மறைவு மலேசிய இலக்கியத்தின் சிதைவு...!  இலக்கிய உலகம் பலரை இழந்திருக்கிறது ஆனால் , இன்றைய புத்தாக்க உலகில் உன்னை இழப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை பேரிழப்பு உன்னை இழந்தது பேரிழப்புதான்!

இந்தியர்களைக் காப்பவர்களுக்கே நமது ஓட்டு!

:                இந்தியர்களைக்  காப்பவர்களுக்கே                                                         நமது ஓட்டு!                                        வே.ம.அருச்சுணன்            ‘ ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் ’ என்பது போல் அண்மையில்  பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை அமைந்திருப்பதைக் கண்டு இந்திய சமுதாயம் அதிச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.56 ஆண்டுகளாக ஆட்சி புரியும் பாரிசான் ஆட்சியில் இந்தியர்களின் வாழ்க்கை உயரவில்லை.2008 ஆம் ஆண்டு இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பக்கத்தானுக்கு ஓட்டளித்த பின்பு ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியது , ஏழ்மையிலும் சமூகப்பிரச்சனைகளிலும் மூழ்கித்தவிக்கும் இந்திய சமுகத்தைக் கைதூக்கி விடுவார்கள் என்ற பெரிய நம்பிக்கையில் மண்விழுந்ததுதான் மிச்சம்.       கடந்த , 56 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பாரிசான் , 5 ஆண்டுகளாக நான்கு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாக்கத்தான் கட்சியும் நயவஞ்சகத்துடன் , இந்தியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தனர் என்பதை அறிய மிகவும் வருத்தமாக இருக்கிறது.       சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு , இந்த

ஓட்டும் வேட்டும்

:              ஓட்டும் வேட்டும்                                                                                               வே.ம.அருச்சுணன் முருகா.....! தமிழ்க்கடவுளே......! திக்குத் தெரியாமல் தவிக்கிறோமே பத்துமலையில் வீற்றிருக்கும் முருகனே விரைவில் மனமிறங்கி வாருமையா எங்களுக்கு நல்லறிவைத் தாருமையா........! ஐம்பத்தாறு ஆண்டுகள் மாற்றானை நம்பி  கெட்டதுதான் மிச்சம் நம்பிக்கை.....நம்பிக்கை என்றார் நாட்டுப் பிரதமர்.......! இந்த தேர்தல் மூலம் இந்தியர் வாழ்வு சிறந்திடுமென்றே நம்பிக்கை வைத்தோம் இன்பமாய் அன்பளிப்புகள் பெற்றோம் வயிறு முட்ட உண்டு மகிழ்ந்தோம்.......! வேட்பாளர் பட்டியலில் சுல்கிப்லி தலை நிமிர்ந்து நிற்கிறான் அருகில் பிரதமர் முகம் மலர்ந்து நிற்கிறார் துரோகிகளுக்கு இத்தனை  முகங்களா........ ? தமிழ் இனத்தையும் சமயத்தையும் கொச்சைப் படுத்தியவனுக்குச்  சிம்மாசனம்.......! நம்பிக்கெட்டது போதும் ஓரணியில் திரண்டிடுவோம் நாம் யாரென்பதைப் புரிய வைப்போம் நல்லாட்சி மலர்வதற்கு துணிந்து நிற்போம் யாருக்கும் சோரம் போவாமல் சத்திய வாக்

13

சிறுகதை:                        “ 13 ”                                                            வே.ம.அருச்சுணன் “முனுசாமி....முனுசாமி...! ”   “அட....மாரிமுத்துவா.... ? என்னப்பா ..... சவுக்கியமா... ?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி  தன் கையில் வைத்திருந்த கூடையை மனைவியிடம் கொடுத்துவிட்டு அழைத்த நண்பனை நோக்கிச் செல்கிறார் முனுசாமி. “நல்ல சவுக்கியமா இருக்கேன் முனுசாமி.....! ” சந்தித்து பல வருடங்களாகியும் , தன்னை நினைவில் வைத்திருக்கும் நண்பனை நோக்கி ஆவலுடன் செல்கிறார் மாரிமுத்து. “சௌக்கியத்துக்கு என்னப்பா குறை மாரிமுத்து.... ? ஆண்டவன் புண்ணியத்தால நான் நல்லா இருக்கேன்...!” முனுசாமி தன் பால்ய நண்பனைக் கண்ட மகிழ்வில் அவரைக்கட்டிப் பிடித்துக் கொள்கிறார் மாரிமுத்து.நெருக்கத்தைப் பார்க்கும் போது அவர்களிடையே நிலவும் உண்மையான நட்பின் ஆழம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. “முனுசாமி....நீங்க எங்க இருக்கீங்க ?” ஆவலுடன் கேட்கிறார் மாரிமுத்து. “தாமான் செந்தோசாவில்....தொரை வீட்டுக்கருகில்தான் என் வீடு இருக்கு மாரிமுத்து....!”

எதிர்காலம் மண்ணாகலாமா

:           எதிர்காலம் மண்ணாகலாமா            8.5.2013                              வே.ம. அருச்சுணன் – கிள்ளான் நடந்து முடிந்த பதின்மூன்றாவது தேர்தலில் மூவினத்தின் அடையாளம் தெரிந்தது.....! மூன்று வந்தேறிகளுக்கும் நிலைமை தெரியவில்லை ஆட்டத்தை நிறுத்தவில்லை வயிற்றுக்காக வாடிய மக்கள் வந்த இடத்தில் வகை தெரியாமல் வாழ்கின்றன.....! இங்கே ஏற்றம் தராது மந்திரத்தை துணிவாய் முழங்குவதும் ஒருவரைவொருவர் தின்று ஏப்பமிட எண்ணுவதும் வீண் வம்பு சொன்னால் நம்பு.....! எடுப்பது பிச்சை பேசுவதோ கொச்சை பேச்சில் ஒற்றுமை நடப்பில் வேற்றுமை அகம்பாவம் தனக்கே எல்லாமென்ற குறுகிய உள்ளம் சிறக்குமா இந்த பெருநிலம்.... ? கேடு கெட்ட  உள்ளமே துன்மார்க்கனே சுனாமி எந்த உருவில் வருமென்று தெரியுமா.... ? முதுகொடிந்த தமிழனுக்கு இன்னுமா சோதனைகளும்....வேதனைகளும்...... ? ஒரு சொல் கேளீர் சீன சமூகம் அவர்களோடு கூடிப்பழகு ஒற்றுமையின் உச்சம் தெரியும் போராடும் வல்லமை புரியும் அவர்கள் மொழி....பண்பாடு கணமும் மறந்ததில்லை எழிச்சியைக் கிஞ்சிற்றும்

ஏமாளிகளா....கோமாளிகள....

கவிதை:          ஏமாளிகளா...கோமாளிகளா.... ?                                            வே.ம.அருச்சுணன்  மொத்தமாய் ஐந்து ஆண்டுகள்                      முடிந்துவிட்ட நிலையில் 5.5.2013 இல் மக்களின் மனங்களைச் செவ்வனே சுத்திகரிக்க மீண்டுமொருமுறை நல்லாட்சிக்கு வரவுகூற ஜனநாயக தீபமேற்ற நடந்தது பதின்மூன்றாவது பொதுத்தேர்தல்.....! தேர்தலுக்கு முன்னும் பின்னும் வேட்பாளர்கள் , கட்சித்தொண்டர்கள் வானவில்லையும் மிஞ்சும் மனிதர்கள் விஸ்வரூமுடன் அரங்கேற்றிய அடாவடிகள் ஜீரணிக்கவும் முடியவில்லை தடுக்கவும் வழியில்லை தப்பாட்டம் வென்றது.......! தேர்தலுக்கு மட்டுமே முகம் காட்டும் நிபுணர்கள் காட்டிய வித்தையில் அதிசயங்கள் பல்கிப் போயின அடுத்த தேர்தல் மட்டும் அவை மனத்திரையில் ஓங்கி நிற்கும் இரட்டைக் கோபுரங்கள்.....! புதிய வார்ப்புகளாய் வரலாறு காணா குளறுபடிகள் மனங்கள் ஏற்க மறுக்கும் நடமுறைகள் வெளிநாட்டார் கண்டு களிப்புற்ற காட்சிகள்.....! ஆள்வோர் வகுத்த வழி கபட நாடகங்கள் தலைப்பாகை கட்டிக் கொண்டன தர்மம் குப்புறக்கவிழ்ந்து கொள்கிறது கை