முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரியோரே சிறியோருக்கு உதவுங்கள் !

கட்டுரை :        பெரியோரே சிறியோருக்கு உதவுங்கள்!        18.5.2020                                                        வே.ம.அருச்சுணன்                     இன்றைய இளையோரின் வாழ்வில் பல்வேறு சவால்கள் உள்ளடக்கிருப்பதை   நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். நமது இந்திய இளைஞர்கள் பலர் திக்குத்தெரியாதக் காட்டில் விடப்பட்டவர்கள் போல்   செய்வதறியாது பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாழ்வை நரகமாக்கிக் கொள்கின்றவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்து வருவது அதர்ச்சியைத் தருகிறது. இதை கருத்தில கொண்டு பல நல்லுங்கள் மனமுவந்து அவர்களுக்கு உதவிக்கரங்களை நீட்டிவருகின்றனர்.இதனால் நமது இளைஞர்கள் பலர் பல்வேறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டு , இன்று பலதுறைகளில் சாதனைகள் புரிந்து வருவது கண்டு சற்று ஆறுதலாக இருக்கிறது. இளையோரின் வளர்ச்சியில் பெரியவர்களின் பங்கு அளப்பெரியது.இந்நாட்டில் வாழும் பிற இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாழ்வில் சிறந்த விளங்குவதற்கு முக்கியக் காரணம் அவர்களின் தேவையறிந்து பெரியோர்கள் வழங்கும் உதவிகளாகும். அவ்வாறு நாமும் நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பதுடன்   தேவைப்படும

பன்முகப் படைப்பாளர் அதிகைமணி

                              பன்முகப் படைப்பாளர் அதிகைமணி         26.4.2020                                                  வே.ம.அருச்சுணன் கவிதையுலகில் தன்னிரில்லா கவிதைகளால் தனி முத்திரைப் பதித்து பன்முகப் படைப்பாளர் வெ.ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட அதிகைமணி அவர்கள் 17.4.2019 ஆம் நாள் மறைந்து ஓராண்டு நிறையொட்டி , அவரை நினைவும் வகையில் பல அரிய தகவல்களோடு   ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் குணசீலன் சுப்பிரமணியம் அவர்கள் விரிவான கட்டுரை எழுதிய அன்னாருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிள்ளான் வாசியான அவரை நான் பல வேளைகளில் சந்திப்பது வழக்கம்.தமிழ் மொழிச்சம்பத்தமான எனது சந்தேகங்களுக்குத் அவர் விளக்கம் தரும் பேராசானாகத் திகழ்ந்தவர்.எதையும் மிகத்தெளிவாகக் கூறுவார்.அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் விரும்பி வாசிப்பேன்.பணி ஓவ்வுக்குப் பின் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.எனினும் நண்பர் ஒருவரின் மூலம்2013 ஆம் ஆண்டு அவரை மீண்டும் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன் எனினும் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டார்.அவரது மறைவு மலேசிய   இலக

நூற்றாண்டு கடந்தாலும்

கவிதை:       நூற்றாண்டுகள் கடந்தாலும்       19.3.2020                                        வே.ம.அருச்சுணன்- இந்நாடு என்நாடு பொன்னாடு நன்னாடு நலம் பெற்று வாழ்ந்த திருநாடு....! மூவினமும் பெற்ற சுதந்திரம் இன்றும் கொடி கட்டி பறக்குது உலகச்சாதனையாய்ப் பெரிய கொடி , சுதந்திரக் கொடி தலை நகரில் பெருமையுடன் சுதந்திரமாய்ப் பறக்குது மூவினத்தின் முகத்திலே வெற்றிக் களிப்பும் தெரியுது...! சூதும் வாதும் மக்கள் மனம் ஏற்காது இந்நாடு பல்லினமும் , பலமதமும் , கலையும் பண்பாடும் கலவையில் கொண்டாடும் பொன்னாடு     மக்கள் மனம் ஒருபோதும் மாறுவதுமில்லை நன்றி மறப்பதுமில்லை....! இந்த உண்மை என்றுமே மறைவதுமில்லை மறைக்க நினைப்போருக்கு மரண அடியும் தவறுதுமில்லை...!      அன்பும் அமைதியும் நிலவும் நாட்டில் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் தீவிரம் ஒருபோது நிலைக்காது சூழ்ச்சிகள் என்றும் வெல்லாது....!

தொடரும் அதிசயங்கள்

கவிதை:               தொடரும் அதிசயங்கள்           9.3.2020                        வே.ம.அருச்சுணன் ஒவ்வொரு   விடியலும்      ஓங்கிவரும் விசித்திரங்கள் கௌவ்விடும் மர்மங்கள்      கலக்கிடும்   தந்திரங்கள் எவ்விடம்   சென்றாலும்      ஏப்பமிடும் ஜாலங்கள் தௌவ்விடும் திறத்தாலே       தப்பிடும் தலையுமே....! மனிதரில் மாணிக்கமும்     மாசற்ற தங்கமும் கனிவான ஏர்மனமும்     கூடிவாழ் கூர்மனமும் தனியாத நல்லுறவும்      தாழ்விலா கூட்டுறவும் குனிவிலா பெருவாழ்வும்      கவனத்தாலே கூடிவரும்.....! பிறர்வாழ கைகொடுப்பீர்    பௌவியமாய்க் கையெடுப்பீர் மறவாமல் நம்பிடுவீர்       மமதைகள் கலைத்திடுவீர் துறவுநிலை ஏற்றிடுவீர்        தூயமனம் வாழ்த்திடுவீர் இறவாதப் புகழேற்பீர்      இனவாதம் துறப்பினிலே...!   

இல்லார் நல்லார்

கவிதை :                  இல்லார் நல்லார்                3.3.2020                                      வே.ம.அருச்சுணன்  மக்களை அவமதிக்கும் அரசியலால்        மாண்புகள் காத்திடவே இயலாதாம் வக்கில்லா வாழ்வே   நிலையானால்         வாழ்விலே திண்ணமாய் அழிவாராம் நக்கலில் வலம்வரும் அற்பர்களால்         நம்பியோர்   வாழ்வும் நாசமாகும் மக்களிதை உணர்ந்தால்   மட்டுமே       மானமுடன் வாழ்வது   உறுதியாகும்...! குள்ளநரிக் கூட்டமாகக் கூடிவந்தே        கூடிபேசிக் குடியைக் கெடுத்திடுமே தள்ளாத   வயதென்றும் எண்ணாதே        தாழ்மையுடன் பேசுதலும் மறைத்திடுமே துள்ளாது மனங்களும் துடித்திடுதே         தூயமனமும் தேய்ந்தே போயிடுமே வள்ளலாய்க் களவுமனம் கொள்ளுமே         மடுவளவும்   வஞ்சகம் மறவாதே...! எல்லாரும் நலம்காண எண்ணுவோம்         ஏக்கங்கள் மறைந்திட வேண்டுவோம் மல்லுக்கு   நிற்போரை விலக்கிடுவோம்          மனதாரப்   பிறநலம்   காத்தே சொல்லுக்கு   உயர்வினைத் தந்தாலே         சோர்விலா வாழ்வும் வந்திடுமே இல்லாரை நேசித்தலே வாழ்வென்றே         ஈன்றவர் மகிழவே வாழ்த்திடுவ