முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியோரே சிறியோருக்கு உதவுங்கள் !


கட்டுரை:      பெரியோரே சிறியோருக்கு உதவுங்கள்!       18.5.2020            
                                         வே.ம.அருச்சுணன்  

                
இன்றைய இளையோரின் வாழ்வில் பல்வேறு சவால்கள் உள்ளடக்கிருப்பதை  நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். நமது இந்திய இளைஞர்கள் பலர் திக்குத்தெரியாதக் காட்டில் விடப்பட்டவர்கள் போல்  செய்வதறியாது பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வாழ்வை நரகமாக்கிக் கொள்கின்றவர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்து வருவது அதர்ச்சியைத் தருகிறது. இதை கருத்தில கொண்டு பல நல்லுங்கள் மனமுவந்து அவர்களுக்கு உதவிக்கரங்களை நீட்டிவருகின்றனர்.இதனால் நமது இளைஞர்கள் பலர் பல்வேறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்பட்டு, இன்று பலதுறைகளில் சாதனைகள் புரிந்து வருவது கண்டு சற்று ஆறுதலாக இருக்கிறது.
இளையோரின் வளர்ச்சியில் பெரியவர்களின் பங்கு அளப்பெரியது.இந்நாட்டில் வாழும் பிற இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாழ்வில் சிறந்த விளங்குவதற்கு முக்கியக் காரணம் அவர்களின் தேவையறிந்து பெரியோர்கள் வழங்கும் உதவிகளாகும். அவ்வாறு நாமும் நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பதுடன்  தேவைப்படும் உதவிகளைச் செய்தால் நமது இளைஞர்களும் பெரியளவில் சாதிக்கும் வல்லமை பெறுவார்கள். நமது இளைஞர்களின் மாபெரும் சக்தி பயனுள்ள வழிகளில் முன்னெடுப்பதன் வழி சமுதாயம் உயர்வு காண்பதுடன், நமது சமுதாயத்தின் நற்பெயரும் மேலோங்கும்.
நமது இளைஞர்களின் வாழ்வைத் திட்டமிட்டே சீர்குழைக்கும் தீயசக்திகள் மீது நமது  இளைஞர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் அவசியமாகும். இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைப் பற்றிய தீவிர சிந்தனைகள் ஏதுமின்றி அற்ப விசியங்களுக் கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு வீணான விவாதங்களில் ஈடுபடுவதும், கைகலப்பு முற்றி, ஆயிதமேந்தி  உயிர் பலியில் சிக்குகின்றனர். பின்னர் வழக்கு,நீதிமன்றம், தண்டனை என வாழ்நாளையெல்லாம் சிறைவாசத்தில் வாழ்வை அழித்துக்கொள்வது எத்தகைய கொடியது என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். உலகில் சாதிக்கப் பிறந்த நமது இளைஞர்கள் செல்லாக் காசாக அழிந்து போவது சரியா? இன்றைய நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனித்து, இளைஞர்கள் நம் கையைக் கொண்டே நாம்தான் கரணம் போட வேண்டும்.இந்த உண்மையை இளைஞர்களுக்கு உணர்த்தும் கடமையைப் பெரியோர்கள் கொண்டுள்ளனர்.
கல்வியை முழுமையாகப் பெற்ற இளைஞர்களே இன்றைய சவால்களை எதிர்கொள்ள முடியும். எனவே,பெற்றோர் தமது பிள்ளைகள் முழுமையான கல்வியைத் தருவதில் உறுதியுடன் செயல்பட வேண்டும். இன்று நமது பிள்ளைகள் தாங்கள் விரும்பும் கல்வியைப் பெறுவதற்கு எல்லாவித வாய்ப்புகளும் இருப்பதால் அதனைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் நமது பிள்ளைகள் கல்வி சிறந்த அடைவுகளோடு நமக்குரிய கோட்டாவை நிறப்பக் கடும் முயற்சியில் இறங்குவதற்குப் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.சிறப்பு வகுப்புகளுக்குத் தவறாமல் பிள்ளைகளை அனுப்பி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்குப் பெற்றோர்கள் பொருளாதாரத்திலும் உயர்ந்திருக்க வேண்டும் என்பதைப் படித்தப் பலர் உணர்ந்து செயல்படுவதால் சாதனைப் படைக்கும் மாணவர்கள் பலரை அவர்களால் உருவாக்க முடிகிறது.
குறைந்த வருமானம் பெறுகின்ற பெற்றோர்களும்  அரசாங்கம் வழங்கும் உதவிகளைப் பெற்று தமது பிள்ளைகளின் கல்விக்கு உதவ வேண்டும். பெற்ற குழந்தைகளைக் கரை சேர்ப்பது பெற்றோரின் தலையாய கடமை என்பதை ஒருபோதும் மறக்கலாகாது. பெற்றோரின் தளராத முயற்சிகளால்  ஏழ்மையில் வாழும் பிள்ளைகள் அடிப்படைக் கல்வியயைக் கொண்டு இலவசமாக அரசு வழங்கும் தொழில் நுட்பக் கல்வியில் பட்டதாரிகளாகத் திகழ்வதுடன், சுயத்தொழிலில் ஈடுபட்டு தொழிலதிபர்களாக உயர்வதைக் கண்டு மகிழ்கிறோம்.இவர்களின் போராட்ட உணர்வை நாம் பாராட்ட வேண்டும்.
பிறர் புகழ வேண்டும் என்பதற்காகப்  பெரிய வீடு, கார், பங்களா என்றும், ஆடம்பர உடுத்தலும், உல்லாசப் பயணங்களும்,பெருநாட்காலங்களில் தட புடலான விருந்துபசரிப்புகள்,பிறந்தநாள்,திருமணம், போன்று அடுக்கடுக்காய் வந்து செல்லும் குடும்ப நிகழ்வுகளைப் பெரிய மண்டபங்களில் சுவைமிகுந்த பல்வேறு உணவுகள், ஆடல் பாடல்கள் நிகழ்ச்சிகள்,உயர்தர  மதுபானங்கள் பரிமாறுதல் ஆகிய நடவடிக்கைகளுக்குத் தாராளமாகச்  செலவு செய்துவிட்டு, பெற்ற பிள்ளைகள் முறையான கல்வியைத் தராமல் அநீதி செய்யும் பெற்றோர்கள் பொறுப்பற்றவர்களாவர்.
இவர்களின் பொறுப்பற்றப் போக்கினால் பின்னாளில் பிள்ளைகள் குறைந்த வருமானத்தில் மிகச்சாதாரண வேலையில் ஈடுபடும் சூழல் ஏற்படும். இது அவர்களின்  வாழ்வில் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்துவதுடன்,பல்வேறு இன்னலுக்கும் ஆளாக நேரிடும். எனவே, பெற்றோர்கள் சிந்தித்துச் சிறப்புடன் செயல்பட்டு, பிள்ளைகளின் கல்வியைக் குறையின்றித்தருகின்ற பெற்றோர்களே பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள். அத்தகையப்  பெற்றோர்களே தங்களது கடமையைத் தவறாமல் செய்த முடித்த சிறந்த  பெற்றோர்கள் ஆவர்.
நமது மாணவர்களுக்கு உதவும் மனம் படைத்தவர்கள் கல்விமான்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பலர் ஏழை மாணவர்களுக்குப்  பிரத்தியேக வகுப்புகள் ஆங்காங்கே நடத்துகின்றனர்.ஏழை மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் மற்றும் பிற கல்விக்கான உதவிநிதிகளைப் பெறுவதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகின்றனர்.
நமது இளைஞர்களிடையே சமயத்தை வளர்ப்பதில் இந்துசங்கள் தற்போது மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நமது இளைஞர்கள் நற்போதனைகள் வழி சிறப்புடன் வாழ்கின்றனர். இவர்களிடையே மதமாற்றம் பிரச்னை சிறிதும்  எழவில்லை.மேலும், இவர்கள் நமது சமயம்,கலை பண்பாடு ஆகியவற்றை  போற்றி வருகின்றனர். இத்தகையோர், மறவாமல் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சென்று முறையாகத் தமிழ்மொழியைக் கற்பதோடு, தமிழ்ப்பள்ளிகள் இந்நாட்டில் நிலை பெறுவதற்கு இவர்களின் பங்களிப்பு  பெரிதும் போற்றப்படுகின்றது.இன்றைய தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகளவில்  நடைபெறும் அறிவியல் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் கலந்து வெற்றி பெற்று சாதனைப் படைத்து தமிழர்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர்!
ஒரு சமயத்தில் நமது இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் அழுத்தமாகக் கால்பதித்து வெற்றிகளைக் குவித்தனர்.அன்று விளையாட்டுத் துறையில் பங்கேற்பாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதில்லை.வெற்றியாளர்களுக்குக் கணிசமாகப் பரிசு தொகைகள் வழங்கப்பட்டதில்லை. என்றாலும், நமது இளைஞர்கள் சுயமாகச் செலவு செய்து திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடினார்கள்.மீண்டும் நமது இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் மிளிர்வதற்கு பெற்றோர்கள் ஆரம்பப்பள்ளிகள் முதலே பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் உதவியாகவும்  இருக்க வேண்டும். இத்துறையில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நமது இளைஞர்கள் சிறந்து விளங்கவும் கணிசமான வருமானத்தையும் ஈட்டவும் இயலும்.
அறுபதாம் ஆண்டு தொடக்கம்,நமது இந்திய விளையாட்டாளர்கள் பல ஆண்டுகள் தேசிய விளையாட்டாளர்களாகத் திகழ்ந்தவர்கள் இன்றும் நமது உள்ளங்களில் வீற்றிருக்கும் பலரைக் குறிப்பிடலாம். குறிப்பாக தனபாலன், எம்.சந்திரன் ஆர்.ஆறுமுகம்,சந்தோஷ்சிங் போன்றோரைக் குறிப்பிடலாம்.  இந்நாட்டில்  காற்பந்து துறையில் நெடுங்காலமாக இயங்கிவரும்   பரதன் கிண்ணம்  போட்டியில்  இளைஞர்கள் திறமைகளைக் காட்டிவருகின்றனர்.தொடர்ந்து 2004 ஆண்டு முதல் மலேசிய இந்திய காற்பந்து சங்கம் (மீபா) இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிவருவது பாராட்டுக்குரியது. தற்போது இச்சங்கத்தை வழிநடத்தும்  தலைவர் டத்தோஸ்ரீ மோகன் தங்கராஜு அவர்கள் பாராட்டும் வகையில் சிறந்த முறையில் போட்டிகளை  ஏற்பாடு  செய்துவருகிறார்.அவரது சேவை தொடர வேண்டும்.
ஹாக்கியில் சிறந்து விளங்கிய ஸ்ரீ சண்முகநாதன்,ஓட்டப்பந்தயத்தில் சிறந்த விளங்கிய எம்.மணிஜெகதீசன்,எம்,இராஜாமணி போன்றோர் நமது உள்ளம் கவர்ந்த விளையாட்டாளர்கள்.இவர்கள் போன்று இளைய தலைமுறையினர் சாதனைகள் படைக்க முன்னாள் விளையாட்டாளர்கள் உதவுவதன் மூலம் நமது இளைஞர்கள் விலைமதிப்பில்லா மாணிக்கங்களாகத் திகழ்வதற்குப் பெரியோர்கள் உதவ வேண்டும். அந்தப் பொற்காலத்தை நாம் அனைவரும் கண்டு மகிழவேண்டும்!


   






 
                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை