முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேரம்

:          நேரம்                          
                         வே.ம.அருச்சுணன்- மலேசியா

நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்”
ஏதும் முக்கியமான விசியமாண்ணே?”
“ம்......முக்கியமான விசியம்தான் மாறன்”
“அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ”
“அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ”
அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ”
அங்கப்பன்....இருக்கான்ல.....”
“அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்......?”
“அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!”
“அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க....? எதையும் சுற்றி வளைக்காமா சீக்கிரம் விசியத்துக்கு வாங்க......!”
“பதறாதத்காரியம் சிதறாதுன்னு சொல்லுவாங்க.....நான் சொல்றதப் பொறுமையாக் கேட்கனும்....!”
“...................”
“உன் உயிர் நண்பன், சில வாலிபப் பசங்களோடு  அடிக்கடி ரெஸ்டோரன்ல, குடியும் கும்மாளமா மதுபோதையில இருக்கிறதப்  பார்க்கிறேன்! அவர்கள் எல்லாம் நல்லவங்க இல்ல...!”
“ஓ.....அவர்களைச் சொல்றீங்களா.....அவர்களெல்லாம் அவனோட பிசினஸ்பார்ட்னர்ஸ்.....!”
“அவர்களோடு......அப்படி என்னதான் பிசினஸ் செய்றான்.....?”
“லேபர்ஸ் சப்லை செய்யிறது.....”
“அப்படின்னா.....? விளக்கமா சொல்லுப்பா...”
“உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு ஆட்களைக் கொண்டு வர்றது....கடந்த பத்து வருசமா இதைத்தான் அங்கப்பன் செய்துக்கிட்டு இருக்கான்.....”
“பணம்...அவனிடம் கரைபுரண்டு ஓடுதாக்கும்.....”
“நல்ல வசதியாதான் இருக்கிறான்...”
“ வசதியா இருக்கிறது தப்பில்ல.ஆனா..... தேடினப் பணத்தை நல்ல வழியில செலவு செய்யனும் இல்லையா?”
“அண்ணே,அங்கப்பன்மிகவும்நல்லவன்.அவன்எந்தவிதத்தப்புத்தண்டாவுக்கும் போகாதவன்.அவனைப் பற்றி நீங்க தப்பா புரிஞ்சி வெச்சிரிக்கிறீங்க.....”
“நான் தப்பா புரிஞ்சி வெச்சிருக்கிறது இருக்கட்டும்.நீ எதையும் நல்லா புரிஞ்சிக்காம அவனோடு சேர்ந்து ஆபத்தில மாட்டிக்காதப்பா.....காலம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு”
“அவன் கூட சேர்ரதால....நான் எப்படி ஆபத்துல மாட்டிக்கப்போறேனு சொல்றீங்க?”
“தென்னை மரத்துக்கீழே உட்கார்ந்து, பாலைக் குடித்தாலும் பார்க்கிறவங்களுக்கு நீ கள்ளைக் குடிக்கிறதாதான் நினைப்பாங்க.பார்த்து நடந்துக்கப்பா....!”
நண்பனைப் பற்றி வேறு யாரும் கருத்து சொல்லியிருந்தால்,மாறன் நிச்சயமா ஏற்றுக் கொண்டிருக்கமாட்டான். ஆனால்,சொன்னது.... ஒரே வயிற்றில்  பிறந்த கூடப் பிறந்த அண்ணன் ஆயிற்றே....!
தயக்கமுடன், “சரிங்கண்ணே... நான் பார்த்து நடந்துக்கிறேன்!” இருப்பிலுள்ள இலட்ச வெள்ளியை யாரோ கலவாடிச் சென்றது போல மனமுடைந்து போகிறான்.
“ஹலோ.....அங்கப்பன் இப்ப நீ எங்க இருக்கே.....?”
“மாறன்....என்ன விசியம்? ஆபிஸ்லதான் இருக்கேன்
“மணி எட்டாவப்போவுது.இன்னும் ஆபிஸ்ல என்ன வேலை? உன் கூட யார்  இருக்கா?”
“ வியட்னாம்ல இருந்து வேலைக்கு ஆள் வர்றாங்க. அவங்களக் கூட்டிவர தனபால் ஏர்போட்டுக்குப் போயிருக்கிறான்”
“தனபாலா....?
“மாறன்....ஏன் தனபால்னு சொன்னவுடன் ஆச்சரியமாக் கேட்கிற? அவனுக்கும் உனக்கும் ஏதும் பிரச்னையா...? எதையும் மறைக்காம என்னிடம் சொல்லு மாறன்...”
“அவனப்பத்தி உன்னோட கொஞ்சம் தனியா பேசனும். வழக்கமா நாம  சந்திக்கிற செந்தாமரை உணவகத்துக்கு இரவு பத்து மணிக்கு வா எல்லா விவரத்தையும் சொல்றேன்”
     மாறனின் கைபேசி அழைப்பிற்குப் பின் அங்கப்பன் மிகவும் குழம்பிப் போகிறான்.பால்ய நண்பனின் கருத்தை அறிந்து கொள்ளத் துடிக்கிறான்.அவன் யாரைப் பற்றியும் அவதூறு பேசும் வழக்கத்தைக் கொண்டவனல்ல. அவனது கருத்துகள் யாவும் அறிவு பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும்ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும்இருக்கும்.வரட்டும்,அவன்கூறும்கருத்துகளைக் கேட்போமே.
“வந்து.....நேரம் ஆயிடுச்சா அங்கப்பன்....?”
“அரை மணி நேரம் ஆவுது....”
       உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.இருவர் முகத்திலும் இளம் புன்னகை தவல்கிறது. தூயநிலவாய் அவர்களிடையே இனிய நட்பு கடந்த நாற்பது ஆண்டுகளாய்ப் பூத்துக்குலுங்கும் நட்பல்லவா....!
“ஏதோ.....தனபாலனைப் பற்றிப் பேசனுன்னு சொன்னியே உடனே சொல்லு மாறன் என் மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு....!”
“தனபால்....கள்ளக்கடத்தல்,கொலை,கொள்ளைகளில் சம்பத்தப்பட்டுள்ளதா எனக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கு. பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவனோடு உனக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டதுன்னுதான் தெரியல...அங்கப்பன்”
“என்னைப் பொருத்தமட்டில்,அவனும் நானும் தொழில் பாட்னர்ஸ்.தொழில் ரீதியில கடந்த ஐந்தாண்டுகளா மற்ற பார்ட்னஸ் போல அவனும் தன்னுடையப் பங்கச் சரியாகவவே இதுநாள் வரையிலும் செய்யிறான்”
“உன்னோட தொழில் நடவடிக்கைகளில் மூக்கை நுழைக்கிறேனு என்னைத் தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா....?”
“உனக்கு இல்லாத உரிமையா மாறன். தாராளமா உன் சந்தேகத்தைக் கேளு”
“உன்னோட நிறுவனத்தில எத்தனப் பார்ட்னர்ஸ் இருக்காங்க...?”
“ஐந்து பார்ட்னர்ஸ். நான் மேனேஜிங் டைரக்டர். ஐவரும் சேர்ந்து செய்யும் முடிவுகளுக்கு ஏற்பவே தொழில் சீராப் போயிட்டிருக்கு”
“தனபாலனைப் பற்றி உன்னோட கருத்து...?”
“போர்டில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப  கொடுக்கும் வேலைகளை அவன் ஒழுங்காக செஞ்சிடுறான். சில நண்பர்களோடு சேர்ந்து மது அருந்துவான். மற்றபடி வேறெந்த குறையும் அவனிடம் இல்லை”
      அவர்கள் இருவரும் நீண்ட நேரம் உரையாடுகின்றனர்.மனத்தாங்கல் ஏதுமின்றி இருவரும் இல்லம் திரும்புகின்றனர்.
      இல்லம் திரும்பியபின்னரும், மாறனுக்கு மனம் மகிழ்ச்சியாக இல்லை.தனபால் மீது அவனுக்கு நல்லெண்ணம் இல்லாமல் இருந்தது.நண்பன் கூறிய சமாதானமெல்லாம் திருப்தியில்லாமல் இருந்தது.நடப்பது யாவும் நல்லதாக இருந்தால் சரி.
   இந்த முறை நூற்றுக்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் சீனாவிலிருந்து அழைத்துவர கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தனபாலன் உதவியாளர்கள் சிலருடன் காத்துக் கொண்டிருக்கிறான்.
    தனி உலகம் ஒன்று அங்கே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.உலகத்தின் பல பாகங்களிலிருந்து குறிப்பாக அமெரிக்க, பிரிட்டன் போன்ற பெரிய வல்லரசுநாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை மக்கள் வெள்ளம் மலேசிய மண்ணில் மகிழ்வுடன் கால் பதித்த பன்னாட்டு மக்களில்  சுற்றுப் பயணிகளாக வந்தவர்கள் போக,நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு துறைகளில் பணிபுரியவும்,இங்குள்ள தொழிலதிபர்களோடு சேர்ந்து கூட்டாகத் தொழில் ஈடுபட விழைவோரும் நாள்தோறும் இலட்சக் கணக்கில் இங்கு வந்து போகும் மக்களைக்காணும் இந்தப் பூமியில் வாழும் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்!           
      இலட்சக் கணக்கில் அந்நியத்தொழிலாளர்கள் இங்கு வேலை செய்யும் வேளையில், சொந்த நாட்டிலேயே வேலை இல்லாமல் வெறுமனமே இருக்கும் இளைஞர்களும்,தினமும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டு சிறைக்கைதிகளாக இருக்கும் அகோரக் காட்சியைக் காணும் போது தவறு யாரிடமுள்ளது?
      நாட்டைக் காக்க வேண்டிய இளைஞர்களின் சிந்தனையிலா.? அல்லது இன்னும்  அரசின்  கண்ணுக்கு  எட்டாதக் காரணத்தின்   விளைவா....? ‘ஒரே மலேசியா எனும் அரசாங்கத்தின் புதிய கொள்கையின் மூலமாக நாடு சுதந்திரம் அடைந்த ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னராவது நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் ஒரு தாய் மக்களாக வாழ்வார்களா.....? 
     எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சீன நாட்டிலிருந்து தொழிலாளர்கள் வழக்கமான சோதனை நடவடிக்கைகளுக்குப் பின் வெளியேறி தனபால் காத்துக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி வருகின்றனர்.
     தனபாலின் இதயம் வேகமாக அடித்துக் கொள்கிறது. அவனது நடவடிக்கைகள் சற்று பதற்றமாக இருப்பதை அவனது உதவியாளர்கள் காணத்தவறவில்லை. விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் வரும்போதெல்லாம் அங்கப்பன் பதற்றமடைவதும்  பின்னர் அவர்கள் விமான நிலையத்தைவிட்டு யாதொரு பிரச்னையுமின்றி வெளியேறிய பின்னரே அவரது முகங்களில் மலர்ச்சியைக் காணலாம்.
      வருகை தந்த தொழிலாளர்களில் ஓர் அழகிய சீனப்பெண் இருபது வயது மதிக்கத்தக்க நன்கு ஒப்பனை செய்யப்பட்டவள்  புன்முறுவலுடன் ஏஜண்டு ஒருவரின் வழிகாட்டியுடன் தனபாலை நோக்கி வருகிறாள்.         
      வந்தவள்,தன்னுடன் கொண்டுவரப்பட்ட ஒரு பெட்டியை தனபாலனிடம் கொடுக்கிறாள்.அதனைஆவலுடன்பெற்றுக்கொள்கிறான்.உதவியாளர்கள்தொழிலாளர்களை விமான நிலையத்தின் வெளியே வாளாகத்தில் காத்துக் கொண்டிருக்கும் பேருந்துகளில் ஏற்றுவதற்காக அழைத்துச் செல்கின்றனர்.அவசர அவசரமாக தான் வைத்திருந்த சிறிய பெட்டியுடன் நடந்து சென்று கொண்டிருந்த தனபாலை சிலர் தடுத்தி நிறுத்தினர்.அவர்கள் சாதாரண உடையணிந்திருந்த போதைப் பொருள் கடத்துபவர்களைப் பிடிக்கும் போதைப் பொருள் ஒழிப்பு நிறுவன  அதிகாரிகள் என்பதை அறிந்த போது விழிபிதுங்கி நின்றான்.
        பல முறை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவிவந்த தனபாலன் கொண்டு வந்த பெட்டியிலிருந்த பல இலட்சம் பெறுமானமுள்ள போதைப் பொருளைக் கைப்பற்றியதில் வெற்றி காண்கின்றனர்.
        இரண்டு மணி நேரத்தில், நிர்வாகத் தலைவர் என்ற முறையில் அங்கப்பன் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக  லாக்காப்பில் அடைக்கப்படுகிறான்.
       கடந்த ஐந்து ஆண்டுகளாக தனக்குத் தெரியாமல் நிறுவனத்தின் பெயரைப் பயன் படுத்தி இரகசியமாகப் போதைப்பொருள் கடத்திவந்த, தனபாலின் நடவடிக்கைகளை நிர்வாகத்தலைவர் என்ற
முறையில்  கவனிக்காமல் விட்டது பெரும் தவறு என்பதை எண்ணி வருந்துகிறான்.

       நாட்டுத் துரோதிக்குத்  தூக்கு உறுதியான போது ஓர் அப்பாவியின் உயிர் தப்பியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை