முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்த்தீங்களா நம்ம பிழைப்ப..


கவிதை:          பார்த்திங்களா நம்ம பிழைப்ப        
                    வே.ம.அருச்சுணன் 
சஞ்சியில வந்து
கஞ்சிக்காகப் போராடி
பந்தபாசம் துறந்து
சொந்த நலன் மறந்து
மண்ணுக்காக
உழைச்சவங்க.....!

நாட்டு விசுவாசம்
கடுகளவும் குறையாமல்
மக்களோடு கலந்து
இன்னுயிரைத் தந்து
உருவாக்கிய பூமி
இன்றும் நமக்கு
உயிர் போராட்டம்தான்....!

நம்மீது எவருக்கும்
இரக்கம் இல்லை
உதவுவோரும் இல்லை
இளையோரே
ஊருக்கு உழைத்தது போதும்
சமுதாயம் உயர
நீ என்ன செய்யலாம்
ஆழ்ந்து நோக்கு
வன்முறை வேண்டாம்
நெருப்பாய் உழை....!

முதற்பணி
கல்வியில் கரைசேர்
இரண்டாம் பணி
சுயதொழில்......!

பொருளியல் பலம்
பெருமை தரும்
சமூகம் ஒன்றாகும்
தாய்மொழி நிமிரும்
கலைகள் வளரும்
பண்பாடு ஓங்கும்
உன்னை
உலகம் விமர்சிக்கும்......!

அரசியல்
உன்னை ஆராதிக்கும்
நாட்டின் விதியை முடிவு செய்
எல்லா தகுதிகளும்
பிறப்பிலே உண்டு......!
அம்பிகா
ஒரு விவேகமணி
ஒலித்தார் வெற்றிமணி
சரித்திரம் படைப்பார்
நம்பு வீரமணி.....!

உன்
வீரம், விவேகம்
உச்சம் எட்டும்
பிரித்தாளும் எத்தனம்
திரிந்து போகும்
கிரீடம் வந்தே தீரும்
விதியை மாற்ற
எத்தனுக்கு வலுவில்லை....!
 
ஒன்றாய்ப் பயணிக்க
ஒன்றுகூடும் இளையோரே
இறையருள், நன்மக்கள்
ஆவலில் சேர்ந்திருக்க
அருகில் இருக்கும்
தவறிய வெற்றியைத் தடுமாறாமல்
கொண்டு வந்திடு....!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...