முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேரம் வந்துவிட்டது

புதுக்கவிதை:                 நேரம் வந்துவிட்டது                    
                                       வே.ம.அருச்சுணன்

பிள்ளைக் குட்டி  நல்லா இருக்க
ஓட்டுப்போடுவோம்
சிந்தித்து ஓட்டுப்போடுவோம்.....!

ஐந்தாண்டுக் கொரு முறை
மறவாமல் வந்து போகும்
அதிசய ஊற்று இது
பலருக்குப் பால் வார்க்கும்
சிலருக்கு நஞ்சூட்டும்.....!

மொத்தத்தில் தேர்தல்
மனிதர்களின் மனதை
வெளிச்சம் போட்டுக் காட்டும்.....!

மக்களின் முற்போக்கு
நல்ல தலைவர்களை உருவாக்கும்
மக்களின் பிற்போக்கு
கொடுங்கோலர்களைப் பெருக்கும்
நல்ல தலைவர்கள் நாட்டுக்குழைப்பர்
தீயத்தலைவர்கள் வீட்டுக்குழைப்பவர்.!


சுயநலம் போற்றும்
இவர்கள் மக்கள் தலைவர் என்பர்
முகமூடிகளுடன் அலையும் இவர்கள்
சொத்துக்கும் சுகத்துக்கும்
பட்டத்துக்கும் பதவிக்கும்
ஆளாய்ப்பறக்கும் இந்த மனிதர்கள்
பசுத்தோல் போற்றிய புலிகள்.....!

மக்களை அடித்து தின்று
ஏப்பமிடும் சிங்கக்குட்டிகள்
தங்களின் தேவைக்கு
மக்களின் குடிநீரைக் குறைத்திட
குழாய் நீரை அடைத்து
'சபாஸ்'  வாங்குவதில் பலே கில்லாடிகள்....!

ஒரே நாளில் ஓட்டு வாங்கி
ஐந்து ஆண்டுகள்
மண்டைக்குக் குடைச்சலைத் தரும்
அரசியல் கலைஞர்களின்
பசப்பு வார்த்தைகளில்
மயக்கம் கொள்ளாமல்
தீர்க்கமாய் முடிவெடுப்பீர்
கண்ணீரைத் துடைக்க
கைக்குட்டை தேவையை விலக்கிடுவோம்....!

சன்மார்க்கத் தலைவர்கள் போய்
துன்மார்க்கத் தலைகள்
பெருகிய இந்நாளில்
ஒரு கணம் கண்ணயர்ந்தால்
ஓராயிரம் துன்பத்தில்
குடிமூழ்கிப்போயிடுவோம்.....!

அரை நூற்றாண்டாய்
பாலைவனத்தில் பயணித்தவர்கள்
பசுஞ்சோலையில் பயணம் செய்ய வேண்டாமா.....?
வீழ்ந்தவர்கள் மீண்டும் எழவேண்டாமா......?
கற்காலம் போய் ; பொற்காலம் பிறந்திடுச்சு
நற்காலம் தரும் சுகத்தை அனுபவிக்க வேண்டாமா....?

ஒற்றுமைக்கு வெடிவைக்கும்
மகா தலைவர்களை
ஓட்டால் ஓரம்கட்ட வேண்டாமா....?

எங்கோ பிறந்து பிழைப்புக்காக
இங்கு வந்தவர்கள்
கண்கட்டி வித்தையால்
வயிற்றைக்கழுவும் இவர்கள்
இவர்களின்  சகாக்கள் மட்டுமே
இந்தப் பூமிக்குச் சொந்தமென்றால்
இந்தப் பூமியில் அவதரித்த ஆத்மாக்கள்
வேற்றுலகவாசிகளா.....?
இந்தப் புண்ணிய பூமிக்கு
அவர்கள் அன்னியர்களா....?
நாட்டின் வளப்பத்தை அனுபவிக்க
தகுதி அற்றவர்களா......?
கேள்விகள்    கேட்கும் நேரமிது
உரிமைகள் கேட்போம் இன்றே
துணிவாய் வாக்களிப்போம் நன்றே.....!

                                                     முற்றும்
         




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...