: அன்பு
ஒளி வீசட்டும்
வே.ம.அருச்சுணன்
தீபங்கள் இல்லங்களில் ஏற்றட்டும்
தீமைகள் இன்றோடு விலகட்டும்
சமுதாயம் நேர்வழி செல்லட்டும்
சாபங்கள் நமைவிட்டு அகலட்டும்
தலைவர்கள் மக்களை நினைக்கட்டும்
தன்மூப்பு செயல்கள் மறையட்டும்
தமிழர்கள் ஒன்றாய்க் கூடட்டும்
தலைநிமிர வாழ்க்கை சிறக்கட்டும்
உயர்வினை மூச்சாய் எண்ணட்டும்
ஊக்கம் பெரிதாய் ஏற்கட்டும்
பற்பல முயற்சிகள் பெருகட்டும்
பயன்மிகு நிகழ்வுகள் ஓங்கட்டும்
இனங்கள் அன்புஒளி வீசட்டும்
ஈடில்லா செழிக்கவே உழைக்கட்டும்
இன்றுபோல் மனங்கள் மகிழட்டும்
இணையற்ற ஒற்றுமை வளரட்டும்!
-----------------------
கருத்துகள்
கருத்துரையிடுக