முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                                      எழுத்தாளர் மா.சே.மாயதேவேனுடன்....                                         மின்னல் எப்.எம்.புனிதா,இரா.தங்கமணி யுடன்....

நெஞ்சுப் பொறுக்குவதில்லையே...

:       நெஞ்சுப் பொறுக்குதில்லையே                                         வே.ம.அருச்சுணன் இம்மண்ணில் பிறந்த டெங்கில் , பெர்மாதா குடியிருப்போர் நூறு நாட்களாய் வீதியிலே பணக்காரர் வீட்டு நாய்கள் குளிர்சாதன அறையிலே.....! நாட்டை வளமாக்கி உருகுழைந்து  அப்பாவிகள் உறங்க நிதம் தவிப்பது தலைவர்களுக்கு கண்ணாமூச்சா ? எங்கோ பிறந்தவர்கள் புத்திரா ஜெயா சொர்கபூமியில் உல்லாசம் சகுனியின் வஞ்சனையால் விரட்டப்பட்டோர் நடுவீதியில் கண்காணாத நாட்டில் குளிருக்குக் கம்பளி   சொந்த நாட்டில் மக்கள் கொசுக்கடியில்...! ஏனோ , தமிழனின் கதறுல்கள் யாருக்கும் கேட்பதில்லை மற்றவருக்கு வெண்ணெய் நமக்குச்  சுண்ணாம்பு...! மனித நேயத்தை மறந்தான் இறைவனும் பெர்மாத்தா மக்களை மறந்தான் மனிதன் வஞ்சித்தது போதென்று துன்பங்களை மறந்து கண்ணயரும் நடு இரவு என்றும் பாராமல் இடியாய் , மின்னலாய் , புயலாய் , மழையாய் அல்லாட வைத்து விட்டாயே ?  மனிதனால் பட்டது போதாதென்று இறைவா நீயுமா எங்களைச் சோதிப்பது ? எங்கே போவோம் இது நாங்கள் பிறந்த பூமி....! நம்பிக்கையில்  உயிரைப்  பி

அழித்தது யார்?

சிறுகதை                 அழித்தது யார் ?                                                                     வே.ம.அருச்சுணன்  “ மணி.....! நீ என்னடா சொல்ற... ?” “ஜீவா அண்ணே......நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க.....! நீங்க மெத்த படிச்சவங்க......யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய  பட்டங்கள வாங்கினவங்க.....நான் போய் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல முடியுமா ?” இருவரும் பேசிக் கொள்வதைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழரசு  பால்ய நண்பன் மணியைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கின்றான்.  பிரளயம் வெடிக்கும் சூழல்.ஏற்கனவே ஒருமுறை இது போன்று அவர்கள் இருவரும் பேசியது அவன் நினைவுக்கு வருகிறது. ம்......இன்று சிறிது வேடிக்கைப் பார்க்கலாம்.களுக்கென்று சிரித்துக்கொள்கிறான்.பல அர்த்தங்களை உள்ளடக்கி ஆருயிர் நண்பனை நோக்கி மீண்டும் ஒரு புன்முறுவல்.    “அதாண்டா சொல்றேன்......பேசாம என் பிள்ளைப் படிக்கிற அதே பள்ளியில உன் பிள்ளையையும் சேர்த்திடு.....!” “நடக்கிற தூரத்தில தமிழ்ப்பள்ளி இருக்கிறப்போ , பத்து கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற வேற்று மொழிப் பள்ளியில பிள்ளையைச் சேர்க்கச் சொல்றீங்களே.....

அன்பு ஒளி வீசட்டும்

:              அன்பு  ஒளி  வீசட்டும்                                             வே.ம.அருச்சுணன்  தீபங்கள்              இல்லங்களில்               ஏற்றட்டும்      தீமைகள்        இன்றோடு                   விலகட்டும் சமுதாயம்             நேர்வழி                      செல்லட்டும்       சாபங்கள்       நமைவிட்டு                  அகலட்டும் தலைவர்கள்         மக்களை                     நினைக்கட்டும்       தன்மூப்பு        செயல்கள்                    மறையட்டும் தமிழர்கள்            ஒன்றாய்க்                    கூடட்டும்       தலைநிமிர      வாழ்க்கை                   சிறக்கட்டும் உயர்வினை          மூச்சாய்                       எண்ணட்டும்       ஊக்கம்          பெரிதாய்                     ஏற்கட்டும் பற்பல                  முயற்சிகள்                   பெருகட்டும்       பயன்மிகு        நிகழ்வுகள்                   ஓங்கட்டும் இனங்கள்             அன்புஒளி                    வீசட்டும்       ஈடில்லா         செழிக்கவே                  உழைக்கட்டும்  இன்றுபோல்        

நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்

:    நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்                         வே.ம.அருச்சுணன் வாழ்வும்  வளமும்  தந்தவளே நலம்  காத்த  மகிழ்ந்தவளே என்னைப்  பெற்றவளே  உன்னை வணங்குவதில் தயக்கமில்லை பூச்சூடத்  தவறியதுமில்லை தீபத்திருநாளில் ஒளியேற்ற மறந்ததில்லை.....! நூற்றாண்டுகள் பல கடந்தும் தமிழர் வாழ்வில் வசந்தம் எட்டாகக் கனியாகிப் போனதேனோ ? முதுகொடிய உழைத்தவன் வாழ்வு   கானல் நீர்தானா ? நேற்று கால் பதித்தோர் குறிஞ்சி நில மன்னர்களாய்ப் பயணிக்க பாலை நிலத்து அகதிகளாய்  நாம் அவதிகளின் உச்சியில் புதையுண்டு நாளும் மூச்சுவிட தினறுவதேன் ? நல்வழிகாட்ட  நாட்டிலே ஆள்வோர்  முனைவதில்லை பிறந்த பூமியிலே தென்றலைக் கட்டிக் கொள்ள அடுக்கடுக்கான தடைகள் பேரலையாய்ச் சீறுவதேன் ? நன்னாளில் என் குறையைக் கொட்டிவிட்டேன் காயமுற்ற மனதுக்கு மருந்திட குட்டித்தீவில் தனியனாய்ப் புலம்புகின்றேன் நம் வாழ்வும்  சிறக்குமென்றே இரண்டு கோடி மக்களில் ஒருவனாய் நம்பிக்கை ஒளியுடன் உன்னை அன்னாந்து பார்க்கிறேன் தன்மானச் சிங்கமாய் ஒளிபடைத்த கண்களாய் தீப ஒளி ஏற்றுகிறே

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025     மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது. பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல் , அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப ,   அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.         நாட்டின் அடுத்த பிரதமராகும் தகுதியைக்

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை