முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய ஆய்வியல் துறை காக்கப்பட வேண்டும்


கட்டுரை:    இந்திய ஆய்வியல் துறை காக்கப்பட வேண்டும்    1
                                    வே.ம.அருச்சுணன் 
புதிய வெளிச்சம் வழி தலைமையாசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் அவர்கள் இந்திய ஆய்வியல் துறையைக் காக்கும் பொருட்டு தமது சக்திக்கும் மீறிய நிலையில் பல ஆய்வுகளையும்,தற்கரீதியாகப் பல்வேறு கருத்துக்களையும் வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில்  மிகவும் தெளிவாகவும் தைரியமாகவும் பல வாரங்களாகத் தொடராக எழுதிவந்தார்.
பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க, இந்திய சமுதாயம்,அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புகள்,அரசு சார இயக்கங்கள் களமிறங்கி  இன அழிவிற்கு வித்திடும் இந்தியல் ஆய்வியல் துறை இயற்கை மரணத்தை அடையும் துர்பாக்கிய நிலையைத் தடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்பிற்குச் சாதகமான நிலை ஏற்படாத நிலையில் வருத்தமுடன் தாம் இனியும் அப்பிரச்சனையைத் தொட்டு எழுதப் போவதில்லை எனும் ஆசிரியரின் நிலைப்பாடு வாசகர்களிடையே மிகுந்த வேதனையும் அதர்ச்சியையும் தந்துள்ளது!
மொழிப்போராட்டத்திற்காக, ஒரு வீரத்தமிழனின் கர்ஜனைகள் மிகவும் பாராட்டுக்குரியது. அவரின் வீரப்போராட்டம் வரலாற்று பதிவில் முத்திரைப் பதிக்கத்தக்கதாகும்.வால் முனையை விட பேனா முனை சிறந்தது என்பது வரலாற்று பதிவாகும்.அன்புள்ள ஆசிரியரே,தங்களின் சமுதாயப் பணி அளவிடற்கரியது.சமுதாயம் ஓரளவு விழிப்புற்றதில் தங்களின் பங்களிப்பு அளப்பரியது.தொடர வேண்டும் தங்களின் அறப்பணி. வாசகர்கள் என்றும் தங்கள் பக்கம்!   
இந்நாட்டுத் தமிழர்களின் தலைவிதியைத் நிர்ணயம் செய்யும் ம.இ.கா.1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அரசாங்கத்திலும்,அமைச்சரவையிலும் இன்று வரை பங்கு பெற்று வந்துள்ளது.
சகோதர இனமான சீனர்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும் போது,பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.அதே சமயத்தில் இந்தியர்களின் ஒட்டு மொத்த வளர்சியை ஒப்பிடும் போது மிகவும் வருத்தப்படும்நிலையில் உள்ளது.சீனத்தலைவர்கள், இனத்தின் உயர்வுக்காகத் தொலைநோக்குடன் செயல் பட்டதால் இன்று பொருளாதாரப் பலம் பொருந்திய இனமாக உயர்வுடன் போற்றப்படுகிறது.சுயநலமிக்க இந்திய தலைவர்கள் சுயநலமாகச் செயல் பட்டதால் நமது உரிமைகள் பலவற்றைத் தொடர்ந்து தாரைவார்க்க வேண்டிய நிலைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது.
சமுதாயம் இழக்கக்கூடாத ஒன்றாகத் திகழும்,மலாயப் பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறை மிகவிரைவில் இயற்கை மரணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில், நம்பிக்கைத் தரும் நடவடிக்கையில் அமைச்சரவையில் வீற்றிருக்கும் ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களும்,துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ.எஸ்.சுப்பிரமணியம்,துணைக்கல்வி அமைச்சர் ப.கமலநாதன்,துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் மற்றும் ஹிண்ட்ராப் தலைவர் வி.வேதமூர்த்தி அவர்களும் இறங்காமல் இருப்பது அதர்ச்சியளிக்கிறது. பிரதமரின்தலையீடு மட்டுமே இப்பிரச்சனைக்குத் நிரந்திரத் தீர்வாக அமையும் என்பதை உணர்ந்து இவர்கள் உடனே செயல் படுவார்கள் என்று சமுதாயம் பெரிதும் நம்புகிறது.மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது நம்பிக்கை வை பிரதமர் நஷிப் அவர்களின் கடமையாகும்.

உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் போல் இந்நாட்டுத் தமிழர்களும் மொழி இழந்து வாழும் நிலைக்கு இன்றையத் தலைவர்கள் கொண்டு செல்லமாட்டார்கள் என்று இந்திய சமுதாயம் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது! மொழி இனத்தின்உயிர்! தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்,எனும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்து மனதில் இருக்கட்டும்!  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...