முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்

:    நீதி நிலைக்கட்டும் அநீதிகள் மறையட்டும்  
                      வே.ம.அருச்சுணன்

வாழ்வும்  வளமும்  தந்தவளே
நலம்  காத்த  மகிழ்ந்தவளே
என்னைப்  பெற்றவளே  உன்னை
வணங்குவதில் தயக்கமில்லை
பூச்சூடத்  தவறியதுமில்லை
தீபத்திருநாளில் ஒளியேற்ற மறந்ததில்லை.....!

நூற்றாண்டுகள் பல கடந்தும்
தமிழர் வாழ்வில் வசந்தம்
எட்டாகக் கனியாகிப் போனதேனோ?
முதுகொடிய உழைத்தவன் வாழ்வு  
கானல் நீர்தானா?

நேற்று கால் பதித்தோர்
குறிஞ்சி நில மன்னர்களாய்ப் பயணிக்க
பாலை நிலத்து அகதிகளாய்  நாம்
அவதிகளின் உச்சியில் புதையுண்டு
நாளும் மூச்சுவிட தினறுவதேன்?

நல்வழிகாட்ட  நாட்டிலே
ஆள்வோர்  முனைவதில்லை
பிறந்த பூமியிலே
தென்றலைக் கட்டிக் கொள்ள
அடுக்கடுக்கான தடைகள்
பேரலையாய்ச் சீறுவதேன்?

நன்னாளில்
என் குறையைக் கொட்டிவிட்டேன்
காயமுற்ற மனதுக்கு மருந்திட
குட்டித்தீவில் தனியனாய்ப் புலம்புகின்றேன்
நம் வாழ்வும்  சிறக்குமென்றே
இரண்டு கோடி மக்களில் ஒருவனாய்
நம்பிக்கை ஒளியுடன் உன்னை
அன்னாந்து பார்க்கிறேன்
தன்மானச் சிங்கமாய்
ஒளிபடைத்த கண்களாய்
தீப ஒளி ஏற்றுகிறேன்....!

வணங்கிடும் இனமாக இங்கே
வழிகாண இறைஞ்சுகிறேன்
நீதிகள் நிலை பெறவே
அநீதிகள் அடியோடு மறையவே
தமிழர்கள் அனைவரும்
ஒற்றுமை ஒளியை ஏற்றிவைப்போம்
தமிழரினம் ஒன்றென்று
புரிய வைப்போம் தவறாமல்
தீபத்திருநாளைக்  கொண்டாடி
மகிழ்ந்திடுவோம்…….!



                                  முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...