முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கயவர் வீழ்வது நிச்சயம்

         கயவர் வீழ்வது நிச்சயம்   
                              வே.ம.அருச்சுணன் 
எத்தனைக் காலம்தான்
எத்தர்கள் உலகை ஏமாற்றுவர்
உண்மை உரைக்க
தீ குளிக்க களம்
இறங்கிவிட்ட தினகுரல்
மிரட்டலுக்கு அஞ்சி
ஒடுங்கிவிடும் என்ற
எண்ணத்தில் மஞ்சள் குளிக்கும்
சமுக விரோதிகளுக்கு
சிவப்புமணி ஒலிக்கத்தான்
தினம் ஓங்கி எழுகிறது
தினகுரல்....!

மக்களின்  போராட்டம்
நிச்சயம் வெல்லும்
கொடிய மனங்களுக்கு
மறவாமல் தயங்காமல்
உண்மை விளம்பியால்
பீடுநடை போடும்
சிம்மக்குரலை வலிந்து
ஒடுக்க நினைப்போர்
தீயில் அழிவார் திண்ணம்...!

ஏழைச்சமுதாயத்தை மேலும்
போண்டியாக்க நினைபோர்
கொட்டம் பொடியாக்க
சூரியனாய்த் தினம் எழுந்து
நிற்கும் தினகுரலை
அழிக்க நினைப்போர் உண்மையாய்
அழிந்து போவது நிதர்சனம்.....!

சமுதாயம் விழிக்கத் தொடங்கி
நாட்கள் பல கடந்து விட்டன
அறிவிலிகள் மாறாமலிருப்பது
விந்தை.....விந்தை...!

தீயவர் தீயில் அழியும்
காலம் விரைகிறது
தினக்குரல் வலுவும்  நிறைகிறது.
தாயின் குரல் வெட்டும்
கயவர் வீழ்வது நிச்சயம்.....!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...