முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரத்தமிழனுக்கு வீரவணக்கங்கள்

“வீரத்தமிழனுக்கு வீரவணக்கங்கள்!”         
                     வே.ம.அருச்சுணன்


இன்றைய பத்திரிகையுலகில்
சமுதாய உயர்வுக்கும் உண்மைக்கும் தினம்
உச்சத்தில் குரல் கொடுக்கும் 
தலைமை ஆசிரியர் பி.ஆர்.இராஜனே.........!

நீங்கள் ஒரு துருவ நட்சத்திரம்
வீரமும் விவேகமும் தரித்து தமிழ்
உள்ளங்களில் புத்தாக்கம் கொழுந்துவிட்டெரிய
நாளைய விடியலுக்கு நம்பிக்கை ஒளிதந்த
முடிசூடா மன்னரே உங்களுக்கு
எங்களின் வீரவணக்கங்கள்............!

மறத்தமிழனின் மாண்பும்
செம்மொழியின் சிறப்பும்
சொந்த இனத்தை துறக்கும்
தடம் பிறழும் தமிழனக்கு
அறைந்து சொல்ல எழுதுகோல்
எடுத்த உத்தமரே உங்கள் உண்மை
வாதத்தால் கற்சிலையும் தலைவணங்கும்
உத்தமர் மனம் இறங்கும்
குற்றம் சொல்வோர் தலை வெடிக்கும்.........!

அரசன் அன்றே கொல்வான்
இறைவன் நின்றே கொல்வான் என்பது நீதி
ஆற்றாமையால் உங்களை இகழ்வது அநீதி
தன்னினம் காப்பதில் என்றும் இராஜாதான்
போராட்டம் வெல்வது உறுதி என்போம்
வாடியத் தமிழனுக்கும் நம்பிக் கெட்டவனுக்கும்
வெற்றிக்கனியைத் தருவதில் நீங்கள்
கலங்கரை விளக்கம்..........!

பேச்சாலும் நிகரில்லா எழுத்தாலும்
உணர்வையும் தன்மானத்தையும்
தட்டி எழுப்பும் வித்தவனே
நம்மைக் கூறுபோடும் கொடும் மனத்தார்
இல்லாமை செய்திடுவீர்
உற்றதுணை நாங்கள் என்போம்
சாகாவரம் பெற்ற உங்கள் எழுத்துக்கள்
எதிரியைத் தவடுபொடியாக்கிவிடும்   
தமிழனை வீழ்த்த நினைப்போர் இங்கே
தரைமட்டமாக்கிடுவீர்..........!

எழுதை மெருகூட்டி எங்கள்
எழுத்துக்கள் உலகில் பவணிவரச் செய்யும்
தலைமை ஆசிரியரே எந்நாளும்
நன்றி மறவோம்; தாயன்பைப் புகழ்ந்திடுவ்வோம்
எங்கள் மனம் குளிரப் புதிது புதிதாய்
அங்கங்கள் அலங்கரிக்க நாளும்
கண்குளிரக் காண்கின்றோம்
வாசகர் வட்டம் மனங்கவரும்
தினக்குரலுக்கு தங்கள் தலைமை
மேன்மை என்போம் என்றும்
உடன் பிறப்புகளாய் உதவிடும்
பணியாளர்கள் அருமையிலும் அருமை
துணிவே துணை தினக்குரலின் பாசுக்கு
தவறாமல் நன்றி சொல்வோம்
ஒற்றுமையால் உலகை ஆள்வதற்கு மகிழ்ந்தே
உவமை சொல்வோம்..........!
                      
                            முடிவு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...