முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிங்க நகர சிங்கமே

:            சிங்க நகரின் சிங்கமே              24.6.2013
                       வே.ம. அருச்சுணன் - மலேசியா
சிங்க நகரை
தங்க நகராக்கிய  சிங்கமே
உன் கர்ஜனைகள்
உருமாற்றத்தின் உச்சமாகின
கடுகுத்தீவை உலகம் மொய்க்க வைத்தாய்
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதென்பார்
உனது தொலைநோக்கு
உலகக்கண்களை விழிபிதுங்க வைத்தாய்
உன்னை மட்டுமே பார்க்காமல்
உலகம் ஓங்கவைத்தாய்
இறை தேடும் பறவைகளை வாழவைத்தாய்........!

தூய்மையான நாடு, மாசற்ற ஆட்சி 
ஜனநாயகத்தின்  உலகக் கோப்பையை
நீ ஒருவனே தனித்து வென்றாய்.....!

உயர்வான கல்வி,மருத்துவம்
காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை
பறந்து செல்ல சாங்கி
சட்டம் போற்றும் மக்கள்
உனது வெற்றியின் விழுதுகள்......!

தொன்னூரைக் கடந்தாலும்
நாட்டு நலம் போற்றும்
கர்மவீரனே நீர் ஓர் அதிசயம்
நடை தளர்ந்தாலும் உன் கர்ஜனை தீவெங்கும் கேட்கும்.....!

வாழும்போதே நாட்டுக்கு நல்லதைச் செய்யும் மனதை
மக்கள் பெற்றனர்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை யதார்த்தத்தில் கண்டனர்
உழைப்பின் தத்துவத்தை அழுத்தமாய்க் கூறியவனே
கணம் உனை மறந்தால் தோல்வி என்றும் தப்பாது
வாழ்கவே பல்லாண்டு
சிங்க நகர் சிங்கமே............!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...