முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்களின் உயிரோடு விளையாடாதீர்

பொதுமக்களின் உயிரோடு விளையாடாதீர்      
                                                வே.ம.அருச்சுணன்  
பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளின் சேவையின் மீது  மக்களின் அதிருப்தி மீண்டும் தலையெடுத்திருப்பது மிகவும் வருந்ததக்கதும் கண்டிக்கத் தக்கதுமாகும்.கெந்திங்மலைக்குப் பயணித்த  உல்லாசப் பயணப் பேருந்து விபத்தில் 37பேர் மரணத்தைத்தழுவிய வேளையில் 16 பேர் கடுமையாகக் காயமுற்றனர்.கடந்த 17 ஆண்டுகளில் மிக மோசமானதாகக் கூறப்படும் இந்த கொடூர விபத்துக்குப் பேருந்து ஓட்டுனரின் பொறுப்பற்ற நடவடிக்கையும் அடாவடித்தனமும்தான் காரணங்களாகக் கூறினாலும் ஈடு இணையற்ற மனித உயிர்கள் இழந்து துடிக்கும் துயரம் தொடர்கதையாகிப் போவதுதான் வேதனையின் உச்சமாகக் கருத வேண்டியுள்ளது.
மேலும் இதுபோன்ற துயரச்சம்பவங்களுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்கும் பேருந்து நிறுவனங்களை மிகுந்த இல்லாபத்தில் நடத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளுக்கு,முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்  செல்வச் சீமான்களுக்குத் துணைபோவதுதான் தாங்கிக்கொள்ள முடியாத வேதனையாக இருக்கிறது, தொடரும் துயரங்களும் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.    
 அண்மைய காலமாக விரைவு உல்லாசப் பேருந்து விபத்துகளால்,உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் உயிழப்புகள் ஏறுமுகமாக இருப்பதுடன்,பொது வாகனங்களைப் பயன்படுத்தும்படி மக்களை வலியுறுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையும் கேலிக்கூத்தாகிவிட்டது.
2009 ஜோகூர்,பாகோவுக்கருகில் நடைபெற்ற இரட்டை மாடிப் பேருந்தால்,பத்து பயணிகள் இறந்தனர்,2010 கேமரன் ஹலண்ட்ஸ்,சிம்பாங் பூலாய் விபத்தில் 28 தாய்லாந்து சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.அதே ஆண்டில் கெந்திங் செம்பா விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்ததுடன் 39 பேர்காயமுற்றனர்.சபா,கோத்தா கினபாலு,கம்போங் மோயோக் கருகில் நடந்த விபத்தில் 4 சபா சிறைச்சாலை அதிகாரிகள் இறந்தனர்.சிம்பாங் அம்பாட்,டோல் சாவடிக்கருகில் நடைபெற்ற சாலை விபத்தில் 13 பேர் இறந்தனர்.2011 ஆம் ஆண்டு புருணை தம்பாருலி-ரானாவ் சாலை விபத்தில் மரத்தில் மோதிய பேருந்து இரண்டாக பிளந்தது.இதில் 7 பேர் இறந்ததுடன் 9 பயணிகள் காயமுற்றனர்.எதிரும் புதிருமாக பேருந்தும்  நீண்ட லாரியுடன் மோதிக் கொண்டதில் தந்தையும் மகனும் இறந்ததுடன்,5 பயணிகள் கடுமையான காயங்களுக்குள்ளாயினர். 2012 இல் கெந்திங் ஹலண்ட்ஸ்சுக்குச் செல்லும் வழியில், கோலாலம்பூர்-காராக் 4.5 கி.மீ. நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் 2 இந்தியச்சுற்றுப்பயணிகள் இறந்த வேளையில் 22 பயணிகள் காயமுற்றனர்.2013 பிப்ரவரி 25 இல் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலைவிபத்தில்,இந்தோனேசிய பெண்ணும் இரண்டு ஆண்களும் பலியாயினர்.
இப்படி நாளும் பொது வாகனங்களால் ஏற்படும் பெரும் விபத்துகள் பெருகியே வருகின்றன.விபத்துக்கான உண்மைக் காரணங்களை அரசாங்கம் துரிதமாகக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கையில் இறங்குவதாகத் தெரியவில்லை. மக்களின் துயரங்கள் விடுபடும் சூழலும் கண்ணுக்குப் புலனாகவில்லை.விபத்து நடைபெற்ற சமயத்தில் அமைச்சர்கள் சொல்லும் பல உறுதி மொழிகள் சில தினங்களில் மறைந்து போய்விடுகின்றன.பேருந்து நடத்துனர் மீது தகுந்த நடவடிக்கைகள் இல்லாமலேயே போக்குவரத்து அமைச்சும் அதன் அமலாக்க அதிகாரிகளும் பொது மக்களின் மன உணர்வுகளுக்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் சாக்குப் போக்குகளைச் சொல்லித்தப்பித்துக் கொள்வது முறையன்று. தவறிழைப்போருக்குத் எதிராகத் பாரபட்சமின்றித் தகுந்த நடவடிக்கைகளைத் துரிதமாக  எடுத்துப்  பயணிகளின் உயிர்களைக் காப்பதுப் பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.
சுற்றுப் பயணிகள் நாள்தோறும் உலப்புகழ் பெற்றுத் திகழும் கெந்திங்மலைக்குப் படையெடுக்கும் உள்ளூர்,வெளியூர் சுற்றுப்பயணிகள் பயமின்றி பயணிக்க விசாலமான சாலைகளும்,விபத்துகளை ஏற்படுத்தும் மரண வலைவுகளை நேர்படுத்துவதுடன்,அனுபவமிக்க ஓட்டுனர்கள் பேருந்தைச் செலுத்த அனுமதிக்க வேண்டும்.மேலும்,சாலையில் வேகக் கட்டுப்பாட்டைக் கவனிக்க அதிகாரிகள் இருபத்து நான்கு மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.வாகனங்கள் புதியதாகவும் நல்ல நிலையில் இருப்பதையும் அதிகாரிகள் கண்காணிப்பதுடன்,சாலையைப் பயன் படுத்தும் அனைவருக்கும் வழிகாட்டிகளாகவும்திகழ்பவர்களாகவும்இருக்கவேண்டும்.மலையின்அடிவாரத்திலிருந்து மலை உச்சிவரையிலும் வாகனங்கள் பாதுகாப்புடன் சென்று அடைவதையும்,பின்னர் மலை உச்சியிலிருந்து அடிவாரத்தைப் பாதுகாப்பாக வாகனங்கள் அடைவதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பாக,போக்குவரத்து அமைச்சு சிறந்த சேவைகளை மக்களுக்கு ஆற்ற உடன் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
பெரிய பேருந்துகளில் மக்கள் பயணிப்பதைவிட,வேன்கள் போன்ற சிறிய வாகனங்களில் பயணம் மேற் கொள்வது சிறந்த பாதுகாப்பாக இருக்கும்.விபத்துகள் பெருமளவில்  ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட பயணிகள் இருக்கையில் அமர்ந்தவாறு வசதியாகப் பயணிக்கலாம்.குறைந்த கட்டணத்தில் நிறைவானப் பயனைச் சுற்றுப்பயணிகள் அடையலாம்.சாலைப்பாதுகாப்பு அதிகாரிகளும் வாகனங்களை எளிதில் கண்காணிப்பதுடன்  தேவையான உதவிகளையும் வாகன ஓட்டுனர்கள் எளிதில் வழங்க இயலும். சிறிய வாகனங்களைப் பராமரிக்கும் செலவும் ஓட்டுனர்களுக்குக் குறையும் மேலும் அதிகமான ஓட்டுனர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிட்டும்.உள்ளூர் மக்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கும் வேலைகளைச் செய்ய சம்பந்தப்பட்ட பேருந்து  நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்,சாலைப்போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் இதனை அணுக்கமாகக் கவனிப்பது அவசியமாகும்.மக்களின் தேவைகளை உதாசினம் செய்யும்,பேருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.தவறிழைக்கும் நிறுவனங்களுடன் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது.
பேருந்து நடத்துனர்கள்,மலேசிய மக்களின் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.மலாய்க்காரர்கள் மட்டுமே நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருப்பதுக் கூடாது. குறிப்பிட்ட ஒரு இனத்தின் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் நிறுவனங்களில் பல குளறுபடிகள் நிகழ்வதற்கு வழிகோலும்.நாட்டின் வளப்பத்தை அனைத்து இனங்களும் அனுபவிக்க  அரசு வழிவிட வேண்டும். நாட்டின் மீது பற்றும் பாசமும் ஏற்படுவதற்கும் பொருளாதாரப் பலம் பல்லின மக்களிடையே சம அளவில் இருப்பது நாட்டின் மேம்பாட்டையும் மேலும் வலுபெறச் செய்யும்.அரசின் தொலை நோக்கினால்,பேருந்து பயணிகள் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியடனும் நாட்டை வலம்வரட்டும்!  


                                    முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...