முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே


மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு.வே..அருச்சுணன் அவர்களின்                                            வாழ்க்கைக் குறிப்பு

        சிலாங்கூர்,பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு.வே..அருச்சுணன் அவர்கள் கிள்ளானில்1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார்.கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர்.
        ஷாஆலம்,கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்    2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின்,‘ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம்மற்றும் ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளிஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
        1955 ஆம் ஆண்டு மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராகக் கடந்த பதின்மூன்று வருடங்களாக சேவை செய்துவருவதுடன், பள்ளிவாரியக் குழுவிலும்இடம் பெற்று சேவையாற்றி மலேசியாவிலேயே ஒரு முன்மாதிரியான நவீன பள்ளியை அமைப்பதில் முழுமூச்சுடன் இயங்கி வருகிறார்.இவ்வாண்டு மார்ச்சு மாதத்தில் அப்பள்ளி மாணவர்கள் புதிய கட்டிடத்திற்குச் செல்லவிருக்கும் இனிய செய்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று உறுதியாகக் கூறுகிறார்.
        அவரது தலைமையில் இயங்கும், ‘மிட்லண்ட்ஸ் தோட்டப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், ‘ மிட்லண்ட்ஸ் தோட்டத்தின் வரலாற்று மலரைகடந்த 5.5.2001 ஆம் நாள் ஷா ஆலாமிலுள்ள பிரபலமான விடுதியில் பெரிய அரசியல் தலைவர்கள்,மக்கள் தொண்டர்கள் மற்றும் தோட்ட மக்கள் முன்னிலையில் வெளியீடு செய்து ஒரு வரலாற்றுப் பதிவாகும்.இந்நாட்டில் தோட்ட வரலாற்றை நூலாக்கி வெளியீடு செய்த முதல் முன்னாள் மாணவர் சங்கம் என்ற நற்பெயரை ஈட்டியது என்றால் அது மிகையில்லை.
         1961 ஆம் ஆண்டு முதல் எழுத்துலகில் ஈடுபட்டுவரும் இவர் மாணவர் நிலையிலேயே எழுதத் தொடங்கி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.1986ஆம்ஆண்டுதொடங்கி,உறக்கம்கலையட்டும்,ஒருநிரந்தரவரம்,முதல்வாசகி,   தான்மட்டும்,   ஆகிய    நான்கு    சிறுகதைத்       தொகுப்புகளையும்,
சரித்திரம் படைப்போம் என்ற கவிதைத்தொகுப்பு நூல் ஒன்றையும்  2012 ஆம் ஆண்டு வரையில் மொத்தம் ஐந்து நூல்களை வெளியீடு செய்துள்ளார்.தொடர்ந்து நூல் வெளியீடு செய்யும் எண்ணத்தையும் கொண்டுள்ளார்.
         1982 ஆண்டு முதல் கல்வி அமைச்சுக்காகப் பள்ளிப் பாட நூல்கள் எழுதுவதில் ஈடுபட்டு வந்துள்ளார்.பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சி நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.கோலாலம்பூரில் இயங்கி வரும் அஸ்வின் நிறுவனம் மூலமாக சிறுவர்களுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இப்பாடல்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது.மேலும் இப்பாடல்களை மலேசிய வானொலி,மின்னல் எப்.எம்.ஒலி அலை ஆறு  ‘செல்லமே செல்வமே என்ற நிகழ்வில் அவ்வப்போது மாணவர்கள் மனம் குளிர ஒலியேற்றி வருகின்றனர்.
          1976 ஆம் ஆண்டு திருமதி.அஞ்சலை அவர்களைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சிவநேசன்,நலவேந்தன்,தேவேந்திரன் ஆகிய மூன்று ஆண் பிள்ளைகளும் இராஜபிரியா என்ற ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.இவர்கள் அனைவருமம் கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்டவர்கள்.
          சிறுகதை,கட்டுரை,கவிதை,நாவல்,வானொலி நாடகம் ஆகிய துறைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.மலேசிய வானொலி,சிங்கை வானொலிகளுக்கு எழுதிய நாடகங்களும்,சிறுகதைகளும் கைவசம் இல்லாததால் அவற்றை ஆவனப்படுத்த  முடியாமைக்கு மிகவும் வருத்தம் கொள்கிறார்.
          1970 ஆம் ஆண்டுகளில் கிள்ளான் மணிமன்றத்தை அமைத்தவர்களில்  ஒருவராக இவர் இருந்ததுடன்,கிள்ளான் மணிமன்றத்தின் மூலமாக கோலகுபுபாரு,பெர்த்தாக்கில்  மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நடத்திவரும் மூன்று மாத காலத் தலைமைத்துவப் பயிற்சியில்1972ஆம் ஆண்டு கலந்து சிறப்பாகத் தேர்வு பெற்று துடிப்புடன் பொதுச் சேவையாற்றியுள்ளார்.மேலும் இவரது பொது சேவைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது,கிள்ளான் செம்பிறைச் சங்கம் தமிழ்ப்பிரிவு மூலமாக பல ஆண்டுகளாக ஆற்றியச் சேவையைக்குறிப்பிடலாம்.
           உயர்திரு.இர..வீரப்பன் அவர்கள் தலைமையில் இயங்கி வந்த இலக்கியக்கழகத்தில் செயலவை உறுப்பினராகப் பல ஆண்டுகளாகத் தொய்வின்றி இலக்கியத்தொண்டாற்றி வந்ததுடன்,தற்சமயம் உயர்திரு..கு.சண்முகம் அவர்களின்தலைமையில் இயங்கும் மலேசியப் பண்பாட்டு இயக்கத்தில் செயலவை உறுப்பினராகச் சேவையை மேற்கொண்டுள்ளார்.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆயுள் உறுப்பியம் பெற்றுள்ள இவர் இச்சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட எண்ணம் கொண்டுள்ளார்.
         பல்வேறு தமிழ்ப்பள்ளிகளின் அழைப்பை ஏற்று மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை  உரை வழங்கி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவி வருகிறார்.தனது கல்வி மையங்களில் சிலம்பக்கலை,தேக்குவாண்டோ,காற்பந்து ஆகிய பயிற்சிகளை மாணாக்கர்களுக்கு வழங்கிவருகிறார்.
         காற்பந்துவீரரான திரு.வே..அருச்சுணன் அவர்கள் காற்பந்து துறைக்காகத்,
தோட்டத்தில் மிட்லண்ட்ஸ் விளையாட்டு மன்றத்தின்மூலமாக மிட்லண்ஸ் தோட்ட இளைஞர்களுக்குப் பயிற்சிகளை வழங்கியதுடன்,பெரிய அளவில் அறுவர் காற்பந்து’   விளையாட்டுப் போட்டிகளைச் செயலாளர் என்ற முறையில் மிகச்சிறப்பாக
ஏற்பாடு செய்து சிறந்த பரிசுகளை வெற்றியாளர்களுக்கு வழங்க உதவியுள்ளார்.இதன் மூலம் தோட்ட இளைஞர்கள் தீய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கவனித்துக் கொண்டார்.   
       பொங்கல்விழா,தமிழர்திருநாள்,கலைநிகழ்ச்சிகள்  தோட்டத்தில் ஏற்பாடு செய்ததுடன்,நாடகங்களில் நடித்தும் தன் கலைத்திறனைத் நிரூபித்துள்ளார்.பல நிகழ்ச்சிகளை வழிநடத்தும் புகழ் பெற்ற அறிவிப்பாளராகவும் தோட்ட மக்களிடையே வலம் வந்துள்ளார்.   
       தான் வாழ்ந்த மிட்லண்ட்ஸ் தோட்டத்திற்கு நாவலாசிரியர் அகிலன் வந்த போது அவருக்குத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டியதுடன் தக்க  விளக்கங்கள் கொடுத்ததை மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றும்.மேலும் அவர் எழுதிய பால் மரக் காட்டினிலேஎன்ற நாவலிலே தான் அவரிடம் குறிப்பிட்ட சில குறிப்புகளும்  இடம் பெற்றது மகிழ்வைத் தந்ததாகக் குறிப்பிடுகிறார். மிட்லண்ட்ஸ் தோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவல் எழுத ஆவல்  கொண்டுள்ளார் எழுத்தாளர் வே..அவர்கள். தமிழ்நாட்டில் தமிழ்க்குடில் நிறுவனத்தால் தொகுக்கப் பெற்ற நூல் அண்ணாநானூறு/2009.இதில் மலேசியக் கவிஞர்கள் பலர் கவிதை எழுதியுள்ளனர்.அத்தொகுப்பில் கவிஞர் வே..அருச்சுணன் அவர்களின் கவிதையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

        

                                 email: arunveloo@yahoo.com




   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை