முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் தோட்டம் (புது கவிதை )



புதுக்கவிதை:                  எங்கள் தோட்டம்       
                வே.ம.அருச்சுணன் – மலேசியா 

நான் பிறந்த தோட்டம்
அன்று தேனாய் இனித்தது
அங்கு வாழ்ந்தவர்கள்
யதார்த்தவாதிகள்
நேர்மை மிக்கவர்கள்
அன்பின் பிறப்பிடங்கள்
 கர்ணனின்  ஆத்மாக்கள்
அகிம்சம் பேசும் மகாத்மாக்கள்
நீதியைப் போற்றும் மனுநீதிச்சோழன் பரம்பரைகள்......!

ஓங்கி நிற்கும்
இரப்பர் மரங்களின் பசுமையை
நீரோடைகளின் தூய்மை
சலசலக்கும் குளிர்ந்த நீர்
நீரிலே நீந்தி மகிழும் மீன்கள்
ஆற்றிலே நீச்சலடிக்கும் இளசுகள்
வெள்ளத்தில் கட்டு மரங்களின் சாகசப் பயணம்.......!
கோவில் திருவிழாக்கள்
தோட்டத்தைப் பவனிவந்து
அருள் வளங்கும் மாரியம்மன்
பக்திப் பரவசத்தில் மக்கள் கூட்டம்......!

இரண்டு தமிழ்ப்படங்களை
ஒரே இரவில் பார்த்து
மறுநாள் தோட்டமே
உறக்கத்தில் மூழ்கிப்போகும்
இனிய நாள் தூக்க நாள்
மக்களுக்குப் பொன்னாள்…….!



விளையாட்டு மைதானத்தில்
மாலை வேளையிலே
இளைஞர்களின் வீரவிளையாட்டுகள்
பருவ மங்கைகளின்
மீன்விழிப்பார்வைகள்
கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு
ஏங்கி நிற்கும்
காளையர்களின் உற்சாகக் கூட்டம்
இருமனங்கள் இணைந்தபின்
மணமேடை கண்டு
பெரியோர்களின் ஆசியில்
வாழ்வைத் தொடங்கும்
இளைஞர் கூட்டம்
பார்த்து மகிழும் காட்சி பரவசமன்றோ.....!
இடுகாடு  இருந்த இடத்திலே
கேளிக்கை மையங்கள்
உலகமே இடுகாட்டில்
ஓடியாடி விளையாடி  மகிழுது......!

நம்பத்தான் முடியவில்லை
நாம் வாழ்ந்த பூமி
கண் முன்னாடியே
கண நேரத்தில்
மாயமாகிப் போய்
வரலாறு
மறந்துவிட்டதே......!
   
நான் வாழ்ந்த தோட்டம் இன்று
அடிச்சுவடே
இல்லாமல் போனது
கண்கள் இரத்த ஆறாகிப் போய் விட்டதே.....!

அந்தநாள்
மீண்டும் வருமா
இனிய தென்றல் மீண்டும் வீசுமா......?

                                    முடிந்தது

      e-mail:  arunveloo @ yahoo.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...