முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்படித்தான்

சிறுகதை:                                              அப்படித்தான்                                                  வே.ம.அருச்சுணன்  பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும்   யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை , அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன் , காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக   பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள , பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை   இரசித்தவாறு நடந்து செல்லும் அவர் , அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகிறது.அவரின் முகத்தில் என்றுமில்லா பதற்றமும் இறுக்கமும் தெரிந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான்   அவர் அப்பள்ளிக்கு   தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். துணைத்தலைமையாசிரியர் பிரியா அப்போது அறையினுள் நுழைகிறார். ” வணக்கம் சார்” இருக்கையில் அமர்கிறார். “வணக்கம் டீச்சர்........” கணினியை இயக்கியவாறு.

இனிய கனவுகள்

சிறுகதை:                        இனிய கனவுகள்                                 வே.ம.அருச்சுணன் – கிள்ளான் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்றாலும் வழக்கம் போலவே அகிலா காலையிலேயே எழுந்துவிட்டாள். கணவர் அமுதன் மகள் கண்மணி மட்டும் சற்று நேரம் கழித்து   படுக்கையிலிருந்து எழுவார்கள். காலை மணி ஒன்பது ஆகியிருந்தது.கண்மணி மட்டும் இன்னும் படுக்கைவிட்டு எழவில்லை.அவள் எழும்போது எழட்டுமே. அதற்குள் வேலையை முடிப்பதில் அகிலா சுறுசுறுப்பாகிப்போகிறாள் அகிலா. “காலை வணக்கம்” என்று கூறியவாறு கணவர் சமையலறையை நோக்கி வருகிறார். வழக்கத்திற்கு மாறாக கணவர் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டார். “ காலை வணக்கம்.....! அட... காலையிலேயே எழுந்துட்டிங்களே ....? என்ன விசியம் ? வெளியே எங்கும் போகனுமா ? ” சந்தேகம் மேலிடக் கேட்கிறாள். “அகிலா.... இன்னைக்கு உன்னோடு சேர்ந்து நானும் சமையல் செய்யலாமுனு நினைக்கிறேன்.....!”   கணவர் சிரிக்கிறார் “நல்ல விசியம்தானே......வாங்க , வாங்க.....! ஒரு அசிஸ்டன் எனக்குக் கிடைச்சதுல   மகிழ்ச்சிதான்” அகிலா வாய்விட்டுச் சிரிக்கிறாள். வானொலியைக் கேட்டுக் கொண்டு வேலைகளைச் செய்வதில் அ