முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘வந்தாய், வென்றாய், சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே’

                        ‘ வந்தாய் , வென்றாய் , சென்றாய்                 செழுமைமிகு செர்டாங் முத்தே ’                                                                     வே.ம.அருச்சுணன்  வந்தாய் , வென்றாய் , சென்றாய் நீ எடுத்த அவதாரமா ? உழைப்பு .... உழைப்பு..... உழைப்பவனே உயர்ந்தவன் உலகுக்கு நீ உதாரணம் எல்.முத்து நீ நல்முத்து.........! உயிரும் உடலும் இரத்த வியர்வையில் தொண்டனுக்கும் நேரமுண்டு உண்ண , உறங்க , உல்லாசம் நேரமுண்டு , காலமுண்டு உனக்கோ உறங்கத்திலும் வேலையுண்டு மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்னே உன் நியதி......! பொன்னை விரும்பும் பூமியிலே தன்னை விரும்பும் மனிதனுண்டு உன்னை விரும்பும் பிறவியுண்டு மனிதம் விரும்பும் புத்தன் நீ நல்லோர் சபைதனிலே வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன் மாசற்ற குடும்பத்தலைவன்.........! வாழ்வில் கட்டிடக் கலைஞனாய்ப் பரிணாமத்தைக் கொண்டவனே பிரமிப்பை ஏற்படுத்தியவன் இலக்கியம் படைப்பிலும் திகைப்பை ஏற்படுத்தினாய் அவை என்றும் நிலைக்கும் மலேசிய இலக்கியமாய

அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

                   அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்                                       வே.ம.அருச்சுணன்  - மலேசியா        இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா..........! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்.......! அக்கினி பூக்களாய்க் கருத்துக் கருவூலங்கள் நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய் நாட்டின் தலைமகன் தமிழ் உள்ளங்களின் தவப்புதல்வன் ஆணவம் காணா அறிஞன் மனிதரில் மாமனிதர் மனுக்குலத்தின் பிதாமகன் முத்தானக் கருத்துக்கு மட்டுமே முகம் காட்டும் முகமூடி அணியா நெறியாளன்....! உனது விஞ்ஞானம் இந்திய மண்ணை உயர்த்தியது உனது தமிழ் உணர்வு உலகில் வாழும் தமிழ் இனத்தின் மாண்பை இமையத்தில் வைத்தது......! உன்னை நினைத்தால் நெஞ்சம் புடைக்கிறது நிறைவாகும் கனவால் உள்ளம் குதியிட்டு துள்ளுகிறது யாதும் ஊரே ;  யாவரும் கேளிர் ஐ.நா.சபையில் உனது குரல் தமிழனின் கம்பீரம் தெரிந்தது தேமதுர தமிழோசை

ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை: பாதம் தொட்டு வணங்குவோம்

        ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை:                                            பாதம் தொட்டு வணங்குவோம்                  வே.ம.அருச்சுணன் – மலேசியா  வாழ்வு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாய் மணம் வீச வேண்டுமா ? பூரிப்புடன் வாழ்வில் நடை பயில வேண்டுமா ? அறிவு தந்து உலகை காட்டிய ஆத்மாவை அடி தொட்டு பாதம் வணங்குவோம் ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம். அறிவின் முதிர்ச்சிவே வாழ்வின் வளர்ச்சி ஆய்ந்தால்  பெருவாழ்வு இவை அனைத்தும் தந்த ஆசான் வாழும் வரை வணங்கிடு மறந்தால் அடுத்தப் பிறவி பாவப் பிறவிதான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை குருவின் சொல் அதற்கும் மேல குரு இறைவனின் அவதாரம் வேண்டுமளவு பெற்றுக் கொள் நன்றியுடன் குருவை வணங்குதல் எடுத்த பிறப்புக்குப் பொருண்டு. நானிலம் போற்றும் நல்லாசிரியர் நாட்டுக்குழைப்பவர் என்னாலும் நற்குடிகளைத் நாளும் தருபவர் மாதா , பிதா , குரு , தெய்வம் தவறாமல் வணங்குதல் நமது கடன்களென்போம் மறுத்தல் பாவத்தின் உச்சமென்றோ! புனிதமான ஆசிரியர் தினத்தில் கல்வி தந்த தெய்வங்களை நாட்டுக்கே தலையென்றாலும் மறுக்காமல்

நல்ல காலம்

சிறுகதை :                                             நல்ல காலம்                            27 . 4 .201 5                                  வே.ம.அருச்சுணன் - மலேசியா  ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்திலேயே புதிய ஆண்டில் பயிலவிருக்கும் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கிய நேரம் அது. “என் பிள்ளைங்க இரண்டு பேரையும் இந்தப் பாலர் பள்ளியில சேர்க்கனும் ,  இடம் கிடைக்குமா ஐயா ? ” “முன்கூட்டியே நீங்க வந்ததால உங்க இரண்டு பிள்ளைங்களுக்கும்   படிக்க இடம்  இருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லாம அவர்கள் இருவரும் இங்கே படிக்கலாம்....” “நன்றிங்கையா.என் பெயர் தமிழரசி. பிள்ளைங்க இரண்டு பேரும் இரட்டையர்களா பிறந்தவங்க.அவுங்களுக்கு வயசு நான்காவுது. மூன்றாண்டு பாலர் பள்ளி முடிந்ததும் அவர்கள் இருவரும் அருகிலுள்ள தமிழ்ப்பள்ளியில படிக்கப் போறாங்க.  இதோ..... பிள்ளைங்களோடப் பிறப்புப் பத்திரங்க....பதிவு பண்ணிக்கங்கையா” பிறப்புப் பத்திரங்களைக் கூர்ந்து பார்க்கிறேன்.தழிழகன் ,  தமிழகி நல்ல தமிழ்ப்பெயர்களாகக் குழந்தைகளுக்கு  வைத்திருக்கிறார்களே......! வியப்பாக இருக்கிறதே! மூக்கும் விழியுமா குழந்தைக

கவிதை: மேற்கு சூரியன் முத்தமிடுவான்

  கவிதை:             மேற்கு சூரியன் முத்தமிடுவான்       17.1.2015                                                          வே.ம.அருச்சுணன் - மலேசியா    சிறப்புக்குரிய உலகத்தமிழர் வெட்கம் , மானம் , ரோசம் மிகுந்தவர்கள் நிகரில்லா வாழ்வுக்கு அன்னியோனியமானவர்கள்........!   ஆனால்......! ஆனால்......! மலேசியத் தமிழர்கள் புதிரானவர்கள் புரியாதவர்கள் எவரைப்பற்றியும் கவலைப்படாத நாரதர்கள்..........!   சஞ்சிக்கூலிகளின் வரலாற்றை காற்றில் பறக்கவிடுபவர்கள் பெற்ற தாயை நடுவீதியிலே நிற்கவைத்துக் கரகாட்டம் போடும் தற்குறிகள் மொழி மறந்து இனம் துறந்து சொந்த பணத்தில் சூனியம் வைத்து கொக்கரிக்கும் கழுத்திழந்த சேவல்கள் சுயநலப்பேர்வழிகள்.........!   யார் எப்படி போனால் என்ன தான்மட்டும் வாழ வேண்டும் சாதிச் சுனாமியில் சிக்குண்டு உருகுழைந்து மட்டிகள் சொல் புத்தியோ , சுய புத்தியோ பகுத்தறிவிழக்கும் பிண்டங்கள் வேடம் தரிக்கும் குள்ள நரிகள் பல்லினமும் எள்ளி நகையாடச் செய்யும் கெடுமதியினர்............!   வள்ளுவனை முற்றாய் மறந்தவர்கள் வாழ்வைச் சூதாட்டமாக்கியவ