முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவிட் 19

                               கோவிட்- 19 2019 , சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விடுகிறேன்.வாசல் கதவை ஆவலுடன் திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறேன்! ஹரிராயாவின் காலைப்பொழுது இனிமையுடன் மலர்ந்திருந்தது! விடிந்தும் விடியாததுமாகக் கருக்கலிலேயே ‘ கம்போங் புக்கிட் கூடா , ஒருமாத நோம்பிற்குப்பின் விழாக்கோலம் பூண்டிருந்தது! எனது வீட்டைச் சுற்றியுள்ள பத்து வீடுகளிலும் கழிகள் தாங்கி நிற்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் மத்தாப்புக்குக் கொளுத்தி விளையாடு கின்றனர். குழந்தைகளின் ஆடலும் பாடலும் , சிரிப்பொலிகளும்   காலைப்பொழுதை மேலும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டிருந்தன.ஆனந்த கூத்தாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பெற்றோர்களும் உற்சாகமுடன் கலந்து கொள்கின்றனர். சிறிய மலை மீது அமைந்திருக்கும் அந்த மலாய் கம்பத்தில் , பல ஆண்டுகளுக்கு முன்பு , வசதி படைத்த ஒருவர் குதிரை வளர்த்து அதன் மீதேறி பயணித்திருக்கிறார். அதன் நினைவாக ‘ கம்போங் புக்கிட் கூடா ’ என்று அழைக்கப்பட்டதாகப் பேரப்பிள்ளைகளிடம் தாத்தாக்கள் வேடிக்கையாகக் கூறுவதை நான் பலமுறை என் காதுபடக் கேட்டிருக்கிறேன். தோராயிரமாக இ

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜாலான் பத்து தீகா லாமா ’ பிரதான சாலையில் தோழியுடன் வீட்டை நோக்கி வேகமாய் நடக்கிறேன். ‘ கிள்ளான்- கோலாலம்பூர் கம்பனி பஸ் ’ வெள்ளை சிவப்பு நிறத்தைக் கொண்டது. கிள்ளானிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு எங்களைக் கடந்து செல்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை , காலை முதல் இரவு பதினோரு மணி வரை   அப்

பொங்குகவி நெடுமாறன்

பொங்குகவி நெடுமாறன் ************************************ பாப்பாவின் பாவலராம் பைந்தமிழ்க் காவலராம் தீப்பார்வை பாராத தெள்ளுதமிழ் நாவலராம் ! மூப்பிலும் குழந்தைகள் முன்னேறப் பாடிடுவார்! யாப்பறிந்தே மலையத்தில் பாப்புனையும் முரசவராம் ! பூப்போன்ற உளங்கொண்டார் பொங்குகவி நெடுமாறன் ! காப்பியமாய்க் களஞ்சியத்தை கனிவோடு வழங்கியவர் ! நாப்பொழியும் தமிழெல்லாம் நயம்மிக்கப் பண்ணாகும் ! கோப்பையின் மதுநாணும் கோமகனார் கவிகண்டே ! ******************************** எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் 14.1.2021. (14.1.2021 "பாப்பாவின் பாவலர் "முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளாகும்.)