முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவிட் 19



                               கோவிட்- 19
2019,சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விடுகிறேன்.வாசல் கதவை ஆவலுடன் திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறேன்! ஹரிராயாவின் காலைப்பொழுது இனிமையுடன் மலர்ந்திருந்தது! விடிந்தும் விடியாததுமாகக் கருக்கலிலேயே கம்போங் புக்கிட் கூடா,ஒருமாத நோம்பிற்குப்பின் விழாக்கோலம் பூண்டிருந்தது!
எனது வீட்டைச் சுற்றியுள்ள பத்து வீடுகளிலும் கழிகள் தாங்கி நிற்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் மத்தாப்புக்குக் கொளுத்தி விளையாடு கின்றனர். குழந்தைகளின் ஆடலும் பாடலும், சிரிப்பொலிகளும்  காலைப்பொழுதை மேலும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டிருந்தன.ஆனந்த கூத்தாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பெற்றோர்களும் உற்சாகமுடன் கலந்து கொள்கின்றனர்.
சிறிய மலை மீது அமைந்திருக்கும் அந்த மலாய் கம்பத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு, வசதி படைத்த ஒருவர் குதிரை வளர்த்து அதன் மீதேறி பயணித்திருக்கிறார். அதன் நினைவாக கம்போங் புக்கிட் கூடா என்று அழைக்கப்பட்டதாகப் பேரப்பிள்ளைகளிடம் தாத்தாக்கள் வேடிக்கையாகக் கூறுவதை நான் பலமுறை என் காதுபடக் கேட்டிருக்கிறேன்.
தோராயிரமாக இங்கு நூறு குடும்பங்கள் இருக்கின்றன. இக்கம்பத்தையொட்டி வங்காளிக் கம்போங், தங்கம்மா கம்போங்,கம்போங் சிடின்,கம்போங் குவந்தான் இன்னும் பல கம்பங்களும் உள்ளன. இங்குள்ள பலர் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இங்குக் குடியேறியவர்கள்.
புக்கிட் கூடா கம்பத்தையொட்டி அமைந்திருக்கும் மலாய்க்காரர்களின் இடுகாட்டைக் காவல் காக்கும் பணியில் அமர்த்தப்பட்ட அஜிஸ் குடும்பமே இங்கு முதலில் குடியேறியதாகக் கூறுகிறார்கள்.அவருக்கு அரசாங்கம் நிலம் வழங்கியிருந்தது.அவரது நிலத்தில் பலர் வீடு கட்டிக்கொள்ள அனுமதியளித்த பேருள்ளம் கொண்டவர் அஜிஸ். குறைந்த எண்ணிக்கையில் சீனர்களும் தமிழர்களும் கூட இக்கம்பத்தில்  குடியேறி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். நாட்டில், 1969 மே 13 இனக்கலவரம் மூண்டவேளையில்கூட  இங்குள்ளோர் அமைதியைக் காத்துள்ளனர்.
மாச்சி...மாச்சி...!” குரல் கேட்டு நான் வாசலுக்கு விரைகிறேன்.பதினாறு வயதே நிறைந்த அஜிஸ் மகள் சலோமா புத்தம் புதிய ஹரிராய உடையில் அழகு தேவதையாக  வட்டமான பெரிய தட்டில்,கெத்துப்பாட்,சாத்தே,ரெண்டாங், குவே தாலாம்,வாஜி இன்னும் பலவிதமான ஹரிராயா உணவுகளைச் சிரித்த முகத்துடன் நிற்கிறாள்.
கொள்கிறேன்.தினம் வந்து போகும் வீடு என்பதால் அழைக்காமலே வீட்டினுள்ளே வந்தமர்கிறாள். சிறிது நேரத்தில் தட்டில் சில மிட்டாய்களை வைத்து மகள் தேவி சலோமாவிடம் தட்டைத் திருப்பிக் கொடுக்கிறாள்.மகளும் சலோமாவும் ஒத்தவயதுடைவர்கள், ஒரே பள்ளியில் பயில்கிறார்கள்.இருவரும் ஹரிராய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டபின்,இன்னும் பல வீடுகளுக்குப் பலகாரம் கொடுக்க வேண்டிய வேலை இருப்பதாகக் கூறி சலோமா விடைபெற்றுச் செல்கிறாள்.அவள் தனது வீட்டை அடையும் வரையில் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக் கம்பத்துக்குக் குடியேறிய போது பிறந்தவள்.அவள் குடும்பத்தில் மொத்தம் நான்கு பிள்ளைகள்.சலோமா குடும்பத்தில்  கடைக்குட்டி.
சலோமா அழகானவள், அன்பானவள், அறிவிலும், படிப்பிலும் முதன்மையானவள்.மகளுடன் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்காக அடிக்கடி வீட்டுக்கு வருவாள்.வரும்போதெல்லாம் அவளுக்கு  வரக்கோப்பியும் தாவா பிஸ்கடுகளையும் தருவேன்.சில வேளைகளில் மசால் வடை,கறிப்பாப் போன்ற பலகாரங்களச் செய்து தருவேன்.அவற்றைச் சலோமா விரும்பிச் சாப்பிடுவாள்.சில வேளைகளில்  காலையில் பள்ளிக்குச் செல்லும் போது இட்டிலி,தோசை செய்து கொடுத்தால் அதனைத் தேங்காய்ச் சட்டினியில் தொட்டு விருப்பமுடன் உண்பாள்.
தீபாவளி அன்று  காலையிலேயே சலோமா வீட்டிற்கு வந்துவிடுவாள்.நமது குடும்ப உறுப்பினர்களில் அவளும் ஒருவளாகவே மாறிவிட்டிருந்தாள்! எங்களோடு சேர்ந்து கொண்டு  வந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறுவாள். அவள் நமது உறவுகளிடம் தமிழில் பேசும் அழகைக்கண்டு அவர்கள் வியந்து போவார்கள் என்றால் பாருங்களேன்! நமது பிள்ளைகளும் சலோமாவைப் போலவே மலாய் மொழியில் பேசுவதைக் கேட்டு நானே ஆச்சரியப்படுவேன். 
தினமும் காலையில் சலோமாவும் மகள் தேவியும் பள்ளிக்கு ஒன்றாக நடந்து   செல்வார்கள்.தொடக்கப் பள்ளி முதலே அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்தனர். ஆரம்பப் பள்ளியும் இடைநிலைப்பள்ளியும் அருகருகே இருந்ததால் அவர்கள்  தொடர்ந்து  நடந்துதே பள்ளிக்குச் சென்று வருவார்கள்.இவர்களைப் பார்த்து கம்பத்தில் சில பள்ளைகளும் அவர்களுடன்  சேர்ந்து கொண்டனர். அவர்கள்  உற்சாகமாகவும்,மகிழ்ச்சியாகவும் பள்ளிக்குச் செல்வது கண்ணுக்கு அழகாகவும் அதே வேளையில் பாதுகாப்பாகவும் இருக்கும்.பெரிய பிள்ளைகளாகிவிட்டிருந்த அவர்களுக்கு    இதுவரையில்  ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை என்பதால்   பெற்றோர்களும் பிள்ளைகளின் பாதுகாப்பு  பற்றிய கவலை  அற்று  இருந்தனர். 
“அம்மா...நான் சலோமா வீட்டிக்குப் போயிட்டு வர்ரேம்மா...” கையசைத்தவாறு வாசலைக் கடக்கிறாள் மகள். மலாய்ப் பாரம்பரிய உடையணிந்து மகள் ஒரு மலாய்ப் பெண்ணாக மாறியிருந்தாள். அவளது மூக்கும் விழியும்  மகளைப் பேரழகியாக நடை பயிலச்செய்கிறது. “பத்திரமா...போயிடு வாம்மா” கையசைத்து மகளை வழியனுப்புகிறேன்.இன்று மாலை வரை சலோமாவின் வீட்டில் ஹரிராயா கொண்டாட்டத்தில் முழ்கிவிடுவாள்!
சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டுச் சலேகா, தீப்புட், நோர்மா ஆகியோர் உணவு தட்டுடன் வீட்டு வாசலில் வரிசைப் பிடித்து நிற்கின்றனர். காலை மணி பத்துக்குள்,அண்டை வீட்டார் அனைவருரிடமிருந்து ஹரிராய உணவுகளும்,பல வகையான பலகாரங்களும் நமது  வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. ஹரிராய  கொண்டாடும் வீடுகளில் கூட நமது வீட்டிலிருக்கும் பலகாரங்கள் இருக்கும் அளவுக்கு இருக்க முடியுமா...சந்தேகமே!
அன்பைப் பரிமாறிக் கொள்ள,தமிழர்கள் மற்றும் சீனர்களிடையே ஹரிராயா  பலகாரங்களைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் புக்கிட்கூடா கம்பத்திற்கு  வந்த நாளிலிருந்தே குடியிருப்பாளர்களிடையே ஏற்பட்டுவிட்டது. இது மக்களிடையே புரிந்துணர்வை வளர்த்துவிட்டிருந்தது!
இமாம் ஹஜி ஹரிப்பின் சூராவில் சிறப்புத் தொழுகையை நிறைவு செய்தபின் வெளியே போடப்பட்டிருக்கும் கூடாரத்தை நோக்கி நடந்து வருகிறார். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக அந்தச் சூராவுவின் இமாம் ஆவார். கம்பத்து இளைஞர்கள் நற்பண்புகளுடன்  தங்கள் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்வதில் அவரது செராமாக்கள் பெரிதும் உதவியுள்ளன. அவருக்கு என்பத்தைந்து வயது என்று யாரும் சொல்ல முடியாது. எப்போதும் சுறுசுறுப்புடன் தமது பணிகளைக் குறைவின்றிச் செய்து வருபவர்.அவர் முன்னாள் மலேசிய இராணுவத்தில் உயர்  அதிகாரியாகப்  பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவரின் இரண்டு மகன்களும் திருமணத்திற்குப் பின் வேறு மாநிலங்களில் வேலை தேடிச் சென்று விடுகின்றனர்.எண்பது வயது நிறைந்த மனைவி மாயாவும் முதுமை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார்.மனைவியின் பிரிவு அவரைப் பெரிதும் பாதித்திருந்தாலும் கம்பத்து மக்களிடையே ஒற்றுமை,நற்பண்புகள் வளர்வதற்கு தனது ஓய்வு நேரத்தைத் தொடந்து அவர் சமயப்பணியில் ஈடுபட்டுவந்தார். கம்பத்து மக்கள் அவருக்குப் பக்கபலமா இருந்தனர்.அதனாலேயே அவர் தெம்புடன் கம்பத்தில் நடமாடி வந்தார். 
தனிகட்டையான அவர் தமது ஓய்வூதியத்தைப் பொருளகத்தில் எடுக்கும்  ஒவ்வொரு மாதமும்   தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று உடல் நலத்தையும் சோதித்துக் கொள்வார். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்வார்.
இமாம் கூடாரத்தில் நுழைகிறார்.கூடியிருந்த கம்பத்து மக்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறுகின்றனர். கம்பத்து மாரிமுத்து, ஆறுமுகம், பெருமாள், வடிவேல்,சோங்,லிம் ஆகியோரும் இமாமுக்கு வாழ்த்து கூறுகின்றனர். முகமலர்ந்து இமாம் அனைவருக்கும் கைகுலுக்கி வாழ்த்து கூறுகிறார்.அவரது கையைக் குலுக்கி முத்தமிடும் இளசுகள் வரிசைப் பிடித்து நிற்கின்றனர்.இமாம் உணவை எடுத்துத் தனது தட்டில் வைத்ததும் ஹரிராயா விருந்து இனிதே தொடங்குகிறது!
2018 ஆம் ஆண்டு நாட்டில் அரசியல் பிரளயம் ஏற்படுகிறது! நடைபெற்று முடிந்த, பதிநான்காம் பொதுத் தேர்தலில் அறுபத்தொரு ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்த  பாரிசான் நேசனல்முன்னாள் பிரதமர் நஜீப் தலைமையிலான  கூட்டணி தோல்வியுற்றதன் விளைவு, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இரண்டாவது முறையாக ஏழாவது பிரதமராகப் பதவி ஏற்கிறார்.அவர் நான்காவது பிரதமராக இருபத்திரண்டு ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்,மீண்டும் பிரதமராக மறுபிரவேசம் செய்தது நாட்டு மக்களிடையே பேரதர்ச்சியை ஏற்படுத்துகிறார்! தொடர்ந்து, அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் கொண்டு வருவார் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்!    
இவரது ஆட்சி சிறப்பாகவே இரண்டாண்டுகள் நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர்,இன்னும் சில அமைச்சர்கள், பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல், இலஞ்சம் பெற்றல் போன்ற பலவிதமானக் குற்றங்களுக்காக உயர் பதவி வகித்த பலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். நாடு மெல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் திடுமென துன் மகாதீர் தனது பிரதமர் பதவியைத் துறந்த மக்களை அதர்ச்சிக் குள்ளாக்குகிறார்.
சில வாரங்கள் நாட்டில் அரசியல் குழப்பங்கள் எழுகின்றன.அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக தான்ஸ்ரீ மொகைதின் யாசின் பதவி ஏற்கிறார்.அவர் பதவி ஏற்ற நேரம்,கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்ற உலக நாடுகளைப் போல் நமது நாட்டிலும் ஏற்பட்டதன் விளைவு, ஊரடங்குக் கட்டுப்பாட்டுகுள் மக்கள் வீட்டுக்குள் அடங்க நேரிடுகிறது!
இந்த ஆட்கொள்ளி நோய் சீனாவிலிருந்து பல நாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகின்றது. இந்நோயினால் நாட்டு மக்களில் நூறுக்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைக் குடித்ததுடன் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர்   பாதிப்புறுகின்றனர்.நாட்டின் சுகாதார அமைச்சின் தீவிரக் கண்காணிப்பாலும் சிறந்த சிகிட்சை முறைகளாலும் தற்போது இந்நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சற்று ஆறுதலாக இருக்கின்றனர்.
இமாம் ஹஜி அரிப்பின் அண்மையில், தலைநகரில் நடைபெற்ற ஒன்றுகூட்டும் நிகழ்ச்சியில் மூன்று நாட்கள் கலந்து கொண்டு வீடு திரும்பிய பின்னர் அவர் மிகவும் சோர்ந்து  காணப்படுகிறார்.இதுநாள் வரையில் அவரிடம் அப்படியொரு சோர்வை கம்பத்து மக்கள் கண்டதில்லை! எனவே, அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சில நாட்களில் ஹரிராயா நாடு முழுவதும் கொண்டாடுவதற்குக் கம்பத்து மக்கள் தயாராகிக் கொண்டிக்கின்றனர். ஹரிராயாவுக்கு, முதல்நாள் இரவு வானொலியிலும்,தொலைக்காட்சியிலும் பிரதமரின் முக்கிய அறிவிப்பு இடம் பெறுகிறது. மக்களிடையே கோவிட்-19 நோயின் பரவல் தொடரரும் நிலையில் இந்த ஆண்டு,வீட்டுக்குள்ளேயே ஹரிராயா கொண்டாடும்படி பிரதமர் மக்களைக் கேட்டுக் கொள்கிறார்! பிரதமரின் இந்த அறிவிப்பால் கம்பத்து மக்கள் அதர்ச்சியும் ஏமாற்றமும் அடைகின்றனர்!
மறுநாள் வழக்கம் போல்,அன்றும் சூரியன் கிழக்கில் எழுகிறான்.கம்பத்து மக்களுக்கு இதுநாள் வரையில் இப்படியொரு ஹரியாராயா அமைந்ததில்லை. மற்றொரு அதர்ச்சியாக புக்கிட்கூடா கம்பத்து இமாம் ஹஜி அரிப்பின் மறைவும் அந்தக் காலைப்பொழுதில் வந்து சேர்கிறது!
 
                                                  முற்றியது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை