முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

     புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு      2 7 .12.2014                   வே.ம.அருச்சுணன்  பூத்துக்குலுங்கும் புத்தாண்டே வருகவே புதுமைகள் சூழந்தே புண்ணிய பூமியில் புனித வாழ்வைத் தருகவே........! 2014  ஆம் ஆண்டு மனங்கள் குலுக்கின கண்கள் குளமாகி இதயங்கள் சிதறின அந்தக் கணங்கள் மறக்க முடியுமா ? மாயமாகிப்போன விமானம் பீரங்கித் தாக்குதல் வானில் சிதறிய செல்வங்கள் மீண்டும் வருவார்களா நம்மோடு மகிழ்வோடு உறவாடுவார்களா ? அந்த மரணத்துளிகள்  கனவிலும் வேண்டாம் ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........! நம்பிக்கை ஒளிதரும் 2015 ஆம் ஆண்டே நலம் சேர்க்க வாரீர் நாடும் மக்களும் வளம் பெற மலர் தூவி வாழ்த்துக........! தமிழர்கள் இங்கே ஒற்றுமையில் தலைதூக்கி சோதனைகளைப் பொடியாக்கி தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு தமிழ் காக்கும் மொழியினராய் சமயம் வாழ்விக்கும் நல்லோராய் பொருளியலில் காலூண்றி வாழ்தல் வேண்டும்..........! நாட்டுச் சுதந்திரத்தில் தமிழர் பங்கு பெரிதென்போம் நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய் பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்

தீப்பொறி கவிஞரே நீங்களுமா

கவிதை:     தீப்பொறி கவிஞரே நீங்களுமா                         வே.ம.அருச்சுணன்  நாளும் கவிமழை பொழிந்த தீப்பொறியே நீங்களுமா தீடீரென எங்களை விட்டு மறைந்து விட்டீர்.........! என்ன கொடுமை மண்ணின் மணம் பரப்பிய இலக்கிய ஜாம்பவான்களின் மரணித்தல் தொடர்கதை தானோ.........! சிறுகதை மன்னன் மு.அன்புச்செல்வன் நாவலாசிரியர் ப.சந்திரகாந்தம் தேன்சுவைக் கவிஞர் சீனி நைனா புதுமைக்கவிஞர் பொன்.நாவலன்  தீப்பொறியாரே மனம் வலிக்கிறது மறைவை ஏற்க மறுக்கிறது.....!   மரபுக்காகவே பிறப்பெடுத்து நற்கவி பல புனைந்தீர் மரபை மீறும் கவிஞரைச் சுட்டெரிக்கும் தீப்பொறியே மரபுக்கவிதை தள்ளாடும் வேளையிலே மண்ணை மறந்து விண்ணை நோக்கி நெடும் பயணம் சென்றதேனோ........! தீப்பொறியாய் சொற்கள் வெடித்தாளும் யாருக்கும் தீங்கிழைக்கா பிள்ளை மனம் உனக்கு மணிக்கவிஞர் படைதனை நாட்டில் திரட்டிவிட்டாய் உன் பணிதனைத் தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர் நிறைவான உந்தன் பணிக்கு வணங்கி நிற்போம்...........! கோம்பா ஆறு கவிதை உன் முகவரி கூறும் உந்தன் நெரிதனை உலகம் ஏற்கும் கவிதனில் மூழ

தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்

     தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்                                                     வே.ம.அருச்சுணன் நினைக்கும் போதே இனிக்கும் தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை உள்ளத்தைக் கிள்ளிச் செல்கிறது............! உலகில் இந்துகளை ஒன்றிணைக்கும் மந்திரச் சொல் தீபாவளி ஏழையும் பணக்காரனும் துயர் மறந்து உற்றார் உறவினர் மனம் திறந்து பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து மங்களத் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்............! அன்று தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம் இன்று பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம் நன்னாளிலும் சிதறுண்டு போனோம் வேற்றுமையில் தொடராய்த் தமிழினம் கண்மூடிச் செல்வது பல்லின நாட்டில் நமக்கு இழப்புகள் மிகுதியாய்க் கைகோர்க்கும்............! இருள் மறைந்து ஒளிதரும் சீர்மிகு திருநாளில் தமிழினம் எழுச்சிக் கொள்ளட்டும் சகோதரத்துவம் மீண்டும் வீருகொண்டு எழட்டும் ஒற்றுமையாய்த் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.............! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்போம் தமிழர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து காட்டுவோம் மனதில் உறு

வானிலே தீப ஒளி

சிறுகதை:            வானிலே தீப ஒளி              8.10.2014                                   வே.ம.அருச்சுணன்  ஏர் ஆசிய விமானம் மேடான் பொலோனிய அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிறது. காலை எட்டு முப்பதுக்கு அது தன்   பயணத்தைத் தொடங்கவிடும். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கடைசி நேரப் பயணிகளில் ஒரு சிலர் பரபரப்புடன் விமானத்தினுள்  நுழைகின்றனர். அழகு தேவதைகளாகப் பவணி வந்து கொண்டிருந்த பணிப்பெண்கள் இனிய முகத்துடன் வரவேற்று அவர்களுக்குரிய இருக்கைகளில் அமர்த்துகின்றனர். “ஹல்லோ.......மலர் ஹவ்வார் யூ ?” “ஒ........மேரி சோங்...........! ப்பைன் தெங்கியூ” காலியாக இருந்த பக்கத்து இருக்கையில் அமர்கிறாள் மேரி சோங். மலர்விழியும் மேரி சோங்கும் ஒரே பல்கலைக்கழகத்தில்தான்  மருத்துவம் பயில்கின்றனர். எனினும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது குதிரைக் கொம்புதான். “ஹப்பி தீபாவளி.........!” “தெங்கியூ...........!” புன்னகைக்கிறாள் மலர். நாளை மலரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு மறக்காமல் வாழ்த்து கூறிய தோழியை மனதுக்குள் எண்ணி மகிழ்கிறாள்.வேற்று நாட்டில் இருக்கும் போதுதான் மல
சிறுகதை:            வானிலே தீப ஒளி              8.10.2014                  வே.ம.அருச்சுணன் - கிள்ளான் ஏர் ஆசிய விமானம் மேடான் பொலோனிய அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிறது. காலை எட்டு முப்பதுக்கு அது தன்   பயணத்தைத் தொடங்கவிடும். இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கடைசி நேரப் பயணிகளில் ஒரு சிலர் பரபரப்புடன் விமானத்தினுள்  நுழைகின்றனர். அழகு தேவதைகளாகப் பவணி வந்து கொண்டிருந்த பணிப்பெண்கள் இனிய முகத்துடன் வரவேற்று அவர்களுக்குரிய இருக்கைகளில் அமர்த்துகின்றனர். “ஹல்லோ.......மலர் ஹவ்வார் யூ ?” “ஒ........மேரி சோங்...........! ப்பைன் தெங்கியூ” காலியாக இருந்த பக்கத்து இருக்கையில் அமர்கிறாள் மேரி சோங். மலர்விழியும் மேரி சோங்கும் ஒரே பல்கலைக்கழகத்தில்தான்  மருத்துவம் பயில்கின்றனர். எனினும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது குதிரைக் கொம்புதான். “ஹப்பி தீபாவளி.........!” “தெங்கியூ...........!” புன்னகைக்கிறாள் மலர். நாளை மலரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு மறக்காமல் வாழ்த்து கூறிய தோழியை மனதுக்குள் எண்ணி மகிழ்கிறாள்.வேற்று நாட்டில் இருக்கும் போதுதான் மலேசியரிட