முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தலும் மலேசிய மக்களும்

கட்டுரை:         தேர்தலும் மலேசிய மக்களும்          1.5.2013                                  வே.ம.அருச்சுணன் - மலேசியா  நாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல்   5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால்     அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள்.      இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று , மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி ? இது அநியாயம்

மயங்காதே

கவிதை :                    மயங்காதே                                              வே.ம.அருச்சுணன் நாட்டுக்கு நல்லது செய்ய நடுநிலையில் சிந்திக்க நேரம் வந்துடுச்சு ஐந்தாண்டுக் கொருமுறை உன்னைத் தேடி வந்துடுச்சு இந்நாட்டு தலைவிதி உன் கைக்கு வந்டுச்சு.......! உன் பேரன் வாழ்வதற்கு வகை செயும் கட்சிக்கு ஓட்டளிக்கும் நேரம் வந்துச்சு......! வாய்ப்பந்தலுக்கு விடை கொடுக்கும் காலம் கனிழ்ச்சிடுச்சு மதியை அடகு வைக்காமல் மூவினம் வாழும் பூமியை தோன்றிட உதவிடும் நேரம் இப்போது வந்டுச்சு......! அந்த விடியலுக்கு விரைந்து கைகொடுப்போம்......! எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை   உணர்ந்து செங்கோல் எடு நல்லாட்சிக்கு தயங்காமல் ஆணையிடு.....! நல்வாழ்வு கண்முன்னே நம்கையில் இருக்கையிலே முன்னாள் தலைவர் சொன்னார் நாளைய தலைவர் சொல்வார் என்றே பிதற்றாமல் சரியாக இருக்கட்டும் உன்வாக்கு நான்னாடு பிறக்கும் சில நாளில்....! நீ சரியாக இருந்தால் இன்று சரியாக முடிவைத்தந்தால் நாளை மக்கள் மனம் கவரும் மலேசியாவைக் காண்போம் வகை செய்ய வாரீர்

நாம் இந்நாட்டு மன்னர்கள்

புதுக்கவிதை:          நாம் இந்நாட்டு மன்னர்கள்                        வே.ம.அருச்சுணன் - கிள்ளான் வரலாற்றைத் தொலைத்துவிட்டோம் வாழ்ந்ததை மறந்துவிட்டோம் ஏமாளியாய் இருந்துவிட்டோம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் பொறுப்பற்றத்   தலைவர்களால் படுகுழியில் தள்ளப்பட்டோம்.....! கல்வி பெறத்தவறியதால் முட்டாளாய் ஆகிவிட்டோம் பல காலம் இருளிலே இருந்ததாலே கருத்துக் குருடர்களாய் வாழ்ந்து விட்டோம் படுமோசமாய் வாழ்வில் வீழ்ந்து விட்டோம் தன்னிலை மறந்து உண்ணும் சோற்றிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டோம்......! வஞ்சகத் தலைவர்களால் வாழ்வைத் தொலைத்து விட்டோம் சந்ததிகள் கருகிக் காணாமல் போய்விட்டோம் நயவஞ்சகர்களின் கால் பிடித்து ஏமாந்து விட்டோம் பிறரிடம் குட்டு வாங்கினோம்   பிறர் ஏளனப் பேச்சால் உடல் குறுகினோம் போதும் போதும் போதும் இனி ஏமாந்ததுப் போதும்.....! இனி மனிதனாய் வாழக்கற்றுக் கொள் தலைவன் உனக்கு   இனி எவருமில்லை உனக்கு நீயே தலைவன் எவருக்கும் நீ அடிமையில்லை சுயமாய்   வாழ உறுதிக்கொள் வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றுக் கொள் சேர்ந்து வாழக் கற்றுக