முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயங்காதே




கவிதை:                மயங்காதே           
                                 வே.ம.அருச்சுணன்

நாட்டுக்கு நல்லது செய்ய
நடுநிலையில் சிந்திக்க
நேரம் வந்துடுச்சு
ஐந்தாண்டுக் கொருமுறை
உன்னைத் தேடி வந்துடுச்சு
இந்நாட்டு தலைவிதி
உன் கைக்கு வந்டுச்சு.......!

உன் பேரன் வாழ்வதற்கு
வகை செயும் கட்சிக்கு
ஓட்டளிக்கும் நேரம் வந்துச்சு......!

வாய்ப்பந்தலுக்கு
விடை கொடுக்கும்
காலம் கனிழ்ச்சிடுச்சு
மதியை அடகு வைக்காமல்
மூவினம் வாழும் பூமியை
தோன்றிட உதவிடும் நேரம்
இப்போது வந்டுச்சு......!
அந்த விடியலுக்கு
விரைந்து கைகொடுப்போம்......!

எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
என்பதை  உணர்ந்து
செங்கோல் எடு
நல்லாட்சிக்கு தயங்காமல் ஆணையிடு.....!

நல்வாழ்வு கண்முன்னே
நம்கையில் இருக்கையிலே
முன்னாள் தலைவர் சொன்னார்
நாளைய தலைவர் சொல்வார்
என்றே பிதற்றாமல்
சரியாக இருக்கட்டும் உன்வாக்கு
நான்னாடு பிறக்கும்
சில நாளில்....!

நீ சரியாக இருந்தால்
இன்று சரியாக முடிவைத்தந்தால்
நாளை மக்கள் மனம் கவரும்
மலேசியாவைக் காண்போம்
வகை செய்ய வாரீர்.....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...