முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் இந்நாட்டு மன்னர்கள்



புதுக்கவிதை:        நாம் இந்நாட்டு மன்னர்கள்     
                வே.ம.அருச்சுணன் - கிள்ளான்

வரலாற்றைத் தொலைத்துவிட்டோம்
வாழ்ந்ததை மறந்துவிட்டோம்
ஏமாளியாய் இருந்துவிட்டோம்
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
பொறுப்பற்றத்  தலைவர்களால்
படுகுழியில் தள்ளப்பட்டோம்.....!

கல்வி பெறத்தவறியதால்
முட்டாளாய் ஆகிவிட்டோம்
பல காலம் இருளிலே இருந்ததாலே
கருத்துக் குருடர்களாய் வாழ்ந்து விட்டோம்
படுமோசமாய் வாழ்வில் வீழ்ந்து விட்டோம்
தன்னிலை மறந்து
உண்ணும் சோற்றிலே மண்ணை
வாரிப் போட்டுக் கொண்டோம்......!


வஞ்சகத் தலைவர்களால்
வாழ்வைத் தொலைத்து விட்டோம்
சந்ததிகள் கருகிக் காணாமல் போய்விட்டோம்
நயவஞ்சகர்களின் கால் பிடித்து ஏமாந்து விட்டோம்
பிறரிடம் குட்டு வாங்கினோம்  
பிறர் ஏளனப் பேச்சால் உடல் குறுகினோம்
போதும் போதும் போதும்
இனி ஏமாந்ததுப் போதும்.....!

இனி மனிதனாய் வாழக்கற்றுக் கொள்
தலைவன் உனக்கு  இனி எவருமில்லை
உனக்கு நீயே தலைவன்
எவருக்கும் நீ அடிமையில்லை
சுயமாய்  வாழ உறுதிக்கொள்
வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றுக் கொள்
சேர்ந்து வாழக் கற்றுக்கொள்
அனுபவம் உனக்குச் செங்கோல்
அது வாழ்வு தரும் மந்திரக் கோல்.....!

நல்லாட்சி  மலர்வதற்கு
சொல்லாட்சி தந்திடுக

நீதியான ஆட்சிதனைத்
துணிவாய்த் தேர்ந்திடுக
கபட நாடகம் போடுவோரை
வேரோடுச் சாய்த்திடு……!

அரை நூற்றாண்டு
கண்ணீரில் மிதந்தது போதும்
தமிழர்கள் இரண்டும் கெட்டவர்கள் என்ற
கெட்டப் பெயரைப் போக்கி
அறிவார்ந்த சமூகமாக
ஓட்டு மூலம் காட்டிடுக.....!

பொன்னான ஆட்சிக்குப்  போடு ஓட்டு
பொல்லாத  ஆட்சிக்கு    வைத்திடு வேட்டு
நம்மை கிள்ளுக்கீரையாக எண்ணுவோரை  
புறம் தள்ளுவோம்
வஞ்ச எண்ணத்தை விதைக்கும்
மகா துரோகிகளைத் தூக்கி எறிவோம்
மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும்
ஊழல் பேர்வழிகளைக் களையெடுப்போம்.....!

நாட்டின் வளங்களைக் கையப்படுத்தி
இனங்களிடையே பிரிவை ஊட்டும்
சுயநலப் பேர்வழிகளை ஒழித்திடுவோம்
நம் நாடு அமைதிப் பூங்காவாக
மீண்டும் உருமாற்றம் பெறுவதற்கு
அணிதிரள்வோம் அரக்கர்களை அழிப்போம்.....!

விவேகமாக வாக்களிப்போம்
வளமான நாட்டை உருவாக்குவோம்
இனியாவது தமிழர்கள் இங்கு
இனமானத்துடன் வாழ்வோம்......!            

                           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...