முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உயிர்க் கொல்லி கொரோனாவே

கவிதை :            உயிர்க் கொல்லி கொரோனாவே                                 வே.ம.அருச்சுணன்  உயிர்க்கொல்லி   கொரோனாவே   ஏன்வந்தாய் ?        ஊரையழிப் பதுனக்கு   சுகம்தருமா   மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால்        மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ ? பொறுப்பற்ற     அற்பர்களின்   செயல்தனிலே        போர்தனில்   வீழ்வதுபோல் அழிகின்றாரே மறுப்பேதும்   கூறாமலே   மாள்கின்றாரே         மாமணியாய்ப்   பிறந்ததன்   பயன்யாது ?   உன்பொல்லா   குணத்தாலே   உலகமினி        உருப்படியாய்   இருக்காதென   மனிதகுலமும் நன்றேயினி   வாழ்தலும்   இயலாதென்றே        நாதியற்றே   மடிதல்தகுமா கொரோனாவே... ? உண்மையாய்   உனைத்தீர்த்திட   கூடுகின்றார்      உறுதிபடவே   கூறுகின்றார் நனிசிறந்த கண்ணான   மருந்தாலே   உனைவீழ்த்த      ஊக்கமுடனே இளையோரே எழுகின்றார்....!          E-mail: arunveloo03@gmail.com.                                                     

வனவாசம் போகும் கனவு

சிறுகதை:                   வனவாசம் போகும் கனவு                                                        வே.ம.அருச்சுணன்   அழகிய அந்த மலர் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களைப் பார்த்து மெய்மறந்து   இரசித்து கொண்டிருக்கிறேன். ஆனால் , அருகில் அமர்ந்திருக்கும் பூவை எதையோ தீவிரமாகச் சிந்திப்பது போல வேறு திசையை நோக்கி மௌனமாக அமர்ந்திருக்கிறாள்! “பூவை...என்ன மூடியா இருக்கே... ?” “புதுசா என்ன சொல்லப்போறேன்....எல்லாம் நம்ம கல்யாண விசியம்தான்...!” “அதான்....சொல்லிட்டேனே பூவை....! என்னோட கனவு முதல்ல நிறைவேறன பிறகுதான்....மற்ற விசியங்கள் எல்லாம்!” வழக்கமான என் பதிலால் , முகம் வாடிப்போன பூவை கோபமுடன் அங்கிருந்து புறப்படுகிறாள்! மறுநாள் நான் வேலையில் மும்முறம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.   ஆனால் , நேற்று மாலை பூங்காவில் பேசிக்கொண்டிருக்கையில் , பூவை கோபித்துத்து கொண்டு போனது என் மனதில் நெருடலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது! அதனால் என்னவோ வேலையில் கவனம் செலுத்து முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்! மனம் ஒருநிலையில் இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது.   யாருக்காகவும் நான் என் வாழ்

எழுத்தாளன்

கவிதை:       எழுத்தாளன்       24.3.2020           எழுத்துலகின் வேந்தனாய் எழுதுபவன்        ஏக்கமுறும்   எழுத்தாலே மிஞ்சுபவன் இழுக்கிலா இலக்கியத்தின் இனிமையாலே              ஈடுயிலா இமயமாய் நிலைப்பவன்   எழுச்சிகள் ஊட்டிடும்     எண்ணங்களாலே              ஏற்றமுறவே      எந்நாளும்   வாழ்வதற்கு   அழுத்துகின்ற குறையெலாம் அறிவறிந்தே                 ஆக்கமுடனே அழகுவாழ்வும் தருவானேன்...!        வே.ம.அருச்சுணன் ,

ஆரணங்கே ஆடல் காணிரோ

     ஆரணங்கே ஆடல் காணிரோ                                                      வே.ம.அருச்சுணன்    கல்யாண   விருந்தினில்   களிப்புடனே        காளையர்   கன்னியரைத்   தேடினரே    நல்லதொரு    துணையமைய   நலமுடனே          நாடினரே நற்குலத்தில்   பெண்ணமைய வல்லார்   வனிதயர்     வரவேற்றும்            வாஞ்யுடன்   வணங்கியும்   அழகுமகள்     சொல்லம்பில் கனியமுதம்   சொல்லினும்         சோர்ந்திடாமல்   சொர்கத்தைத்   தேடினரே...! முகவடிவில்   மயக்கிடவே முனைப்புடனே        மூக்குவிழியும்   முன்னிறுத்தி   காட்டுகின்றார்                            அகம்காண   ஆண்மகனாய் அலைகிறார்         ஆள்பார்த்தே அழகுமயில் ஆடுகிறாள்   எகத்தாள   நடையினிலே எழில்பயின்றே      ஏக்கத்தையே   எளிதாகவே வீசுகிறாள் சகதர்மினி அமையும்   சமயந்தான்      சாதனையில்   சமைந்தவர் நீயன்றோ....! அழகினில் வார்த்திட்ட ஆரணங்கே      ஆளுமையில் அணையா தெய்வமே     பழமையைப்   போற்றிடும் பசும்பொன்னே        பாங்குடனே   பதிவழியை ஏற்பாயே குழலோசை இனிமையில் குலமுயர்த்த        கூனிடாமல் குடும்பநலன் கொள்வதிலே

உலகம்

உலகம் நல்லோரின் சொல்தனை ஏற்பீரே       நாளுமே வாழ்விலே உயர்வீரே     வல்லமை மிகுந்திடும் உலகினரே     வாழ்க்கைப் பயணத்தில் வெல்வீரே சொல்லின் செல்வராய்ச் சிறப்பீரே         சோடையின்றி ஏற்றமுடன் செல்வீரே   எல்லாரின்   வாழ்வையும்   காப்பீரே       ஏக்கமின்றி   எந்நாளும் வாழ்வீரே. வே.ம.அருச்சுணன் (அறுசீர் விருத்தம்)