முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரணங்கே ஆடல் காணிரோ


    ஆரணங்கே ஆடல் காணிரோ                             
                  வே.ம.அருச்சுணன்  

கல்யாண  விருந்தினில்  களிப்புடனே
       காளையர்  கன்னியரைத்  தேடினரே   
நல்லதொரு   துணையமைய  நலமுடனே 
       நாடினரே நற்குலத்தில்  பெண்ணமைய
வல்லார்  வனிதயர்   வரவேற்றும்     
      வாஞ்யுடன்  வணங்கியும்  அழகுமகள்  
 சொல்லம்பில் கனியமுதம்  சொல்லினும்
       சோர்ந்திடாமல்  சொர்கத்தைத்  தேடினரே...!

முகவடிவில்  மயக்கிடவே முனைப்புடனே
       மூக்குவிழியும்  முன்னிறுத்தி  காட்டுகின்றார்                          
அகம்காண  ஆண்மகனாய் அலைகிறார்
        ஆள்பார்த்தே அழகுமயில் ஆடுகிறாள்
 எகத்தாள  நடையினிலே எழில்பயின்றே
     ஏக்கத்தையே  எளிதாகவே வீசுகிறாள்
சகதர்மினி அமையும்  சமயந்தான்
     சாதனையில்  சமைந்தவர் நீயன்றோ....!



அழகினில் வார்த்திட்ட ஆரணங்கே
     ஆளுமையில் அணையா தெய்வமே    
பழமையைப்  போற்றிடும் பசும்பொன்னே
       பாங்குடனே  பதிவழியை ஏற்பாயே
குழலோசை இனிமையில் குலமுயர்த்த
       கூனிடாமல் குடும்பநலன் கொள்வதிலே
சுழன்றுவரும் வாழ்வினிலே சுகம்காணும்
        சூட்சுமத்தைச் சுளையாய்  சுவைத்திடு...! 





                   



                                                    









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...