முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலக்கு

சிறுகதை :                இலக்கு                                     வே.ம.அருச்சுணன் - மலேசியா                சங்ககால இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டத்தோ இனியனுக்கு , குறுஞ்சி நிலத்தின் கூறுகளாகக் காணப்படும் மலையும் மலையைச் சார்ந்த இடமும் மிகவும் பிடிக்கும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் பயின்று தமிழின் இனிமையைக் கண்டவர்.அதன் எதிரொலியாக அவரது வாழ்க்கையும் இயற்கையோடு இரண்டரக் கலந்தவொன்றாகிவிட்டது.         மலைச்சரிவில் அமைந்துள்ள தனது இரட்டை மாடி வீட்டின் ‘ பல்கனி ’ யில் நின்றவாறு இளஞ்சிவப்பில் காணப்படும் காலைச் சூரியனின் உதயத்தைப் பார்த்து இரசிக்கிறார். வெள்ளாடைப் போர்த்தி நிமிர்ந்து  நிற்கும் மலைகளின் எழிலான தோற்றம் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைகிறது. பச்சைச்செடிகளும் , கொடிகளும் ,   பூத்துக்குலுங்கும் அழகிய வண்ண மலர்களும் , பறவைகளின் ஒலிகளும் , பறந்து செல்லும் வண்ணத்துப் பூச்சிகளின் அழகும் , பறவைகளின் ஒலியும் , பூச்சிகளின் ரீங்காரமும் காலைப் பொழுதும் அவருக்கு  உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன!       பள்ளிப்பருவ

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தமிழ்ப்போராளிகள்

புதுக்கவிதை:             தமிழ்ப்போராளிகள்                               வே.ம.அருச்சுணன் – மலேசியா பன்னிரண்டு  வயதினிலே கடின  உழைப்பாலே யூ.பி.எஸ்.ஆர்  தேர்வில்  ஏழு  ஏக்கள்  பெற்று அரிய  சாதனைப்  படைத்தாய் தமிழ்  அன்னை  உன்னை மனம்  நிறைவுடன்  வாழ்த்தும்.....! தாய்மொழியைக்  காக்க  வந்த இளம்  தமிழ்ப்போராளியே நீ  எதிர்கொண்ட  முதல்  சோதனையிலேயே வெற்றித் திலகத்தைச்  சூட்டிக் கொண்டாய் இனி  வெற்றிகள்   உன்னைத்  தழுவட்டும் தடையின்றி  சாதனைகள்  தொடரட்டும்......! உன்  வெற்றியால் தமிழ்மொழி    ஆலமரமாய் இந்நாட்டில்   செழித்து  வளரும் தமிழர்  உள்ளங்களில்   செம்மொழியாய்   அரியணையில்  அமரும் ஓங்கி  நிற்கும்  தமிழ்ப் பள்ளிகள் அடுத்த  தலைமுறைக்கும் தமிழனின் புகழுரைக்கும்......! தமிழ்  சோறு  போடுமா...... ? என்போருக்கு  தமிழ்  எப்போதுமே உயிர்  கொடுக்கும் தமிழனின்  அடையாளத்தை  உலகுக்கு உரக்கக்  கூறும்.......! தமிழை  மறந்தோன் தாயை   மறந்தவனாவான் தமிழை   இகழ்ந்தவன்   தாயை    இகழ்ந்தவனாவான் தமிழ்ப்போராளியே இனி  உன்னால்  மட்டுமே   தமிழ் 

எங்கள் பூமியை மாசு படுத்தாதே....!

எங்கள்  பூமியை  மாசு  படுத்தாதே.....!        வே.ம.அருச்சுணன்  கொடுங்கோலனே , நீ அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.....! உரிமைக்காகப் போராடிய ஆன்மாக்களை அநியாயமாகக் கொன்று தீர்த்தாயே புத்தம் பரவிய நாட்டின் தலைமகனா நீ.... ? மனிதத்தன்மையற்றவனே நீ விரைவில் அழிவாய் இது தமிழர்களின் சாபம் பாவியே.....ஈனனே.....! எங்கள் பூமி  புண்ணிய பூமி அத்துமீறி நுழைந்தால் எங்கள் பூமித்தாய் உன்னை அழித்துவிடும்.....! எங்கள் புண்ணிய பூமியில் உன் கால்பட்டு புனிதப் பூமியைப் பாழ்படுத்தாதே...! இது தொடக்கம்தான் உலகில் நீ  எங்கு சென்றாலும் தமிழ் விந்துக்கள் உன்னை சுட்டெரிப்பர்.....! உலகில் நீ இருக்கும் வரை மரண பயத்தால் உன் மண்டை வெடிக்கும்......! அரசன் அன்று  கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் இந்த  நியதி உன் வாழ்வில்  நடப்பது நிதர்சனமான உண்மை.....! உயிரை ஒய்யாரமாகக்  குடித்தவனே நீ உருகுழைந்து  போவாய் இது சத்தியம்...!      arunveloo@yahoo.com

அதிர்ஷ்ட தேவன்

சிறுகதை :               அதிர்ஷ்ட தேவன்           14.11.2012                        வே.ம. அருச்சுணன் – மலேசியா  “குடியிருந்த வீட்டையே … ! ச்சே.....நீயெல்லாம் ஒரு மனுசனா .?” “ இல்ல வேந்தன்.....!” “என்ன இல்ல … ?” வேந்தன் கடுப்பாகிப் போகிறான். “...............” “செய்யிறதையும் செஞ்சுப்புட்டு … . இப்ப நல்லவனா நடிக்கலாமா ?” “சுயநினைவிலையா செஞ்சேன்.....!” “முகிலன்.......நீ செய்தது மன்னிக்க முடியாதக் குற்றம்...!” “அன்றைக்குக் கொஞ்சம் ‘ தண்ணீ ’  ஓவராப் போயிடுச்சு....!” “ நெருப்பு வெச்சது நீ குடியிருந்த  வீட்ட....!” “...................!” “தொட்டுத் தாலிக்கட்டிய மனைவி.........என்னதான் தப்புச் செஞ்சிருந்தாலும்........!” “அதற்குப் போயா மனுசன் குடியிருக்கிற வீட்டைக் கொளுத்துவாங்களா.... ?”          ஆறு மாதச் சிறைவாசத்திற்குப் பின் ,   பார்க்கச் சென்ற முகிலனை வறுத்தெடுத்தான் வேந்தன்! அவனது கடுஞ்சொற்களால்  முகிலன் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.          முகிலன் தன் மனைவி சுசிலாவைக் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டான்.அன்னியோன்னியமாகவே இருவரும் வாழ்கின்றனர்.மனை
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு “சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.     

வாழ்ந்துகாட்டுங்கள்

புதுக்கவிதை:                 வாழ்ந்துகாட்டுங்கள்          14.11.2012                      வே.ம.அருச்சுணன் - மலேசியா     பாட்டன் வாழ்ந்த காலம் சோற்றுக்காகக் காகங்களாய்ப் பறந்த காலம் சோறு கண்ட இடம் சொர்கம் என்றே வெந்ததைத் தின்று மாண்டாரர் வாழ்வே மாயம் என்றார் சோறு போட்டவரே தெய்வம் என்றார்.......! படிப்பென்றால் அது என்னவென்றே படுகுஷியாய்க் கேள்விக் கேட்டாராம் உண்மை அறிந்தபின் அதுவெல்லாம் நமக்கில்லை என்றே வெகு தமாஷாகக் கெக்கலித்தாராம் சோற்றுக்கே வழியைக் காணோமாம் கெட்டக் கேட்டுக்குப் படிப்பு ஒன்னுதான் குறைச்சல் என்றாராம்.....!   ஹ...ஹ....ஹா...! என்னே அட்டகாசமான வெடிச்சிரிப்பு கூடிக்கூடிக் கதை அளந்தார் வெட்டிப்பேச்சில் நிலை மறந்தார் அடுத்தவன் கதையைக் கூடாரம் போட்டுப்   கதகதப்பாய்ப் பேசுவதில் பட்டிமன்றம் வைத்தே அற்பச் சுகத்தில் நிலவைத் தொட்டார்.....! போதுமடா சாமி...... நம்ம  பாட்டன் பூட்டன் கதையெல்லாம் கேட்டது போதும் ஏமாளிகளும் கோமாளிகளும் வாழ்ந்து மண்ணாய்ப் போனதை நினைவில் நிறுத்தி வல்லான் வகுத்ததே வழி என்பதைச் சிந்த