முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்துகாட்டுங்கள்


புதுக்கவிதை:                வாழ்ந்துகாட்டுங்கள்          14.11.2012
                     வே.ம.அருச்சுணன் - மலேசியா    
பாட்டன் வாழ்ந்த காலம்
சோற்றுக்காகக்
காகங்களாய்ப் பறந்த காலம்
சோறு கண்ட இடம் சொர்கம் என்றே
வெந்ததைத் தின்று மாண்டாரர்
வாழ்வே மாயம் என்றார்
சோறு போட்டவரே தெய்வம் என்றார்.......!

படிப்பென்றால்
அது என்னவென்றே
படுகுஷியாய்க் கேள்விக் கேட்டாராம்
உண்மை அறிந்தபின்
அதுவெல்லாம் நமக்கில்லை என்றே
வெகு தமாஷாகக் கெக்கலித்தாராம்
சோற்றுக்கே வழியைக் காணோமாம்
கெட்டக் கேட்டுக்குப்
படிப்பு ஒன்னுதான் குறைச்சல் என்றாராம்.....!

 ஹ...ஹ....ஹா...!
என்னே அட்டகாசமான வெடிச்சிரிப்பு
கூடிக்கூடிக் கதை அளந்தார்
வெட்டிப்பேச்சில் நிலை மறந்தார்
அடுத்தவன் கதையைக் கூடாரம் போட்டுப்
 கதகதப்பாய்ப் பேசுவதில்
பட்டிமன்றம் வைத்தே
அற்பச் சுகத்தில்
நிலவைத் தொட்டார்.....!

போதுமடா சாமி......
நம்ம  பாட்டன் பூட்டன் கதையெல்லாம்
கேட்டது போதும்
ஏமாளிகளும் கோமாளிகளும்
வாழ்ந்து மண்ணாய்ப் போனதை
நினைவில் நிறுத்தி
வல்லான் வகுத்ததே வழி
என்பதைச் சிந்தையில் புகுத்தி
புதுமையாய்ப் பிழைத்திடுவீர் இளையோரே.......!

நாளைப் பொழுதை
வளமுடன் அமைக்க
திரட்டுகச் செயல் வீரர்களை ஒன்றாய்ப்
புத்தாக்கத்தை உயிரில் நனைத்து
அடுத்தத் தலைமுறை
வாழ வடிவமைப்பீரே.....!

உன்னை நம்பி இருக்குது உலகம்
நன்மை செய்திட இன்றே
முந்திடல் சாலவும் நன்றே.......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...