முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ப்போராளிகள்


புதுக்கவிதை:             தமிழ்ப்போராளிகள்                    
         வே.ம.அருச்சுணன் – மலேசியா
பன்னிரண்டு  வயதினிலே
கடின  உழைப்பாலே
யூ.பி.எஸ்.ஆர்  தேர்வில்  ஏழு  ஏக்கள்  பெற்று
அரிய  சாதனைப்  படைத்தாய்
தமிழ்  அன்னை  உன்னை
மனம்  நிறைவுடன்  வாழ்த்தும்.....!

தாய்மொழியைக்  காக்க  வந்த
இளம்  தமிழ்ப்போராளியே
நீ  எதிர்கொண்ட  முதல்  சோதனையிலேயே
வெற்றித் திலகத்தைச்  சூட்டிக் கொண்டாய்
இனி  வெற்றிகள்   உன்னைத்  தழுவட்டும்
தடையின்றி  சாதனைகள்  தொடரட்டும்......!

உன்  வெற்றியால்
தமிழ்மொழி    ஆலமரமாய்
இந்நாட்டில்   செழித்து  வளரும்
தமிழர்  உள்ளங்களில்   செம்மொழியாய்  
அரியணையில்  அமரும்
ஓங்கி  நிற்கும்  தமிழ்ப் பள்ளிகள்
அடுத்த  தலைமுறைக்கும்
தமிழனின் புகழுரைக்கும்......!

தமிழ்  சோறு  போடுமா......?
என்போருக்கு  தமிழ்  எப்போதுமே
உயிர்  கொடுக்கும்
தமிழனின்  அடையாளத்தை  உலகுக்கு
உரக்கக்  கூறும்.......!

தமிழை  மறந்தோன்
தாயை   மறந்தவனாவான்
தமிழை   இகழ்ந்தவன்  
தாயை    இகழ்ந்தவனாவான்
தமிழ்ப்போராளியே
இனி  உன்னால்  மட்டுமே   தமிழ்  வாழும்.....!

நெஞ்சை  உயர்த்திக்காட்டு
தமிழ்ப்பால்   உண்டோன்
உலகை   ஆளப்பிறந்தவன்   என்பதை
ஞானத்தால்  உணர்த்திடு.....!

உன்  வெற்றிக்கு  வித்திட்ட
மாதா,பிதா,குரு,தெய்வம்
ஆகிய  நால்வரை  மறவாமல்  வணங்கிடு
அகிலம்  உன்னை   வாழ்த்திடும்.........!

                                       *******************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...