முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊடக வன்முறை

                           ஊடக வன்முறை                             மலேசியத் தமிழ் ஊடகங்களின் மக்கள் விரோதப் போக்கு   நூலாசிரியர்: இந்நாட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் தோட்டப்புறம் , அங்கு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள் , இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது உடன் பிறப்புகளைப் பற்றிய சோக வரலாற்றை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் நூலாசிரியர் சகோதரர் மு.வரதராசு அவர்கள் எழுதிய நூல்கள் நமக்கு நினைவுக்கு வரும். தோட்டப்பாட்டாளிகள் எதிர் கொண்ட பல்வேறு பிரச்னைகளைக்   கள ஆய்வு செய்து    வெளியிட்ட அவரது நூல்கள்   இந்நாட்டு இந்தியர்கள் , குறிப்பாக தமிழர்களின் இக்கட்டானச் சூழல்களை நமக்குப் படம் போட்டுக் காட்டியுள்ளன.        தோட்டத்தில் பிறந்து வளர்ந்து நூலாசிரியர் , குடும்பச் சூழலால் இளம்வயதிலேயே தோட்டத்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி   பல்வேறு துக்கங்களையும் துயரங்களையும் அனுபவித்த நூலாசிரியர் தன்பட்டறிவை   நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் , மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி , சமூகப் பொருளாதார நிலைகள் குறித்து இதுவரையில் விரிவான ஐந்து நூல்கள் எழ

எழுச்சி

சிறுகதை :                                                                                                                   எழுச்சி                                 வே.ம.அருச்சுணன் “வெள்ளம் ஏறிடுச்சாம்.....! வெள்ளம் ஏறிடுச்சாம்......!” “வெள்ளம்.......எங்க   ஏறிடுச்சு ?   விவரமா........சொல்லு மணியம்....!” “வேற எங்க ஜீவா ....! நம்ம...... தமிழ்ப்பள்ளியிலதான்.....வெள்ளம் ஏறிடுச்சாம்....!” “ நேத்துப் பேஞ்ச செம மழைல.......வெள்ளம் ஏறாம இருக்குமா..... ?”           தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது!           பள்ளியின் முன்னாள்   மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர்.          இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன் , தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘ பிளாஸ்டிக் ’   வாளியில்   அள்ளி   வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி   ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர்.