முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக....!

புதுக்கவிதை :    புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக...!                                 வே.ம. அருச்சுணன்      அதிர்வையும் அனுபவங்களையும் தந்த 2012 ஆம் ஆண்டே விடை பெறுக பூத்துக் குலுங்கப் போகும் 2013 ஆம் ஆண்டே நம்பிக்கை மலர்களை உள்ளத்தில் நிறைவாய் ஏற்றி வரவேற்பு கூறுகிறோம் வளமான வாழ்வை வஞ்சகமின்றி எனது சமுதாயத்திற்குத் தந்திடுக.....! பட்ட துன்பம் போதும் செமத்தியாய் ஏமாந்தது போதும் மரம் போல் ஏணியாய் நின்றது போதும் துணிவாய் ஏணியில் திடமாய் ஏறி வெற்றி வானில்  பயணிக்க வந்திடுக  புத்தாண்டே....! வாழ்வு தந்த பொன் நாடும் தாய் தந்த செம்மொழியும் உள்ளத்தில் வைரமாய் மின்னிட ஒற்றுமை மக்கள் மனதிலே தேனாய்த் பாய்ந்திட விரைந்து வந்திடுகப் புத்தாண்டே....! நாட்டில் நல்லவைப் பிறந்திட வல்லமை தாராய்ப் பிணக்குகள் இன்றி                                                          ஒருதாய் மக்களாய் ஆட்சிக்கட்டிலில் பேதமின்றி சமமாய்ப் பங்கு தந்து பல்லின மக்களும் மகிழ்ந்திட நிறைவான வாழ்வைத் தந்திடுகப் புத்தாண்டே....! பாசமும் நேசமும் மக்கள

தவம்

   சிறுகதை                  தவம்                                       வே.ம.அருச்சுணன்      இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி , சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார். கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார். “ஏன்பா....அழகு....இப்ப என்னப்பா மணி... ?” “வீட்டுக்கு வந்தா ஏம்மா  உயிரை வாங்கிறீங்க ?” “காலம் கெட்டுக் கிடக்குதப்பா! நேரத்துல வீட்டுக்கு வரக் கூடாதா ? அம்மா தனியாத் தானே இருக்கேன்... ? ” “என்னைப் போன்ற இளம் பிள்ளைகள்.....சனிக்கிழமையிலே சந்தோசமா நண்பர்களோடு இருக்கிறதுலே என்னம்மா தப்பு..... ? ஏம்மா என்னைப் புரிஞ்சிக்க மாட்டுறீங்க....!”  அழகன் கோபப்படுகிறான். “உன் நண்பர்களோடப் போக வேண்டாம்னு அம்மா சொல்லல....பத்து மணிக்கெல்லாம் வீட்டுக்குத்  திரும்பிட்டா....நிம்மதியாப் படுப்பேன்ல....!” “உங்க....நிம்மதியப் பற்றித்தான் பேசுறீங்க....என்னைப் பற்றி கொஞ்சமாவது நீங்க சிந்தித்துப் பேசியிருக்கிறீங்களா..... ? ” “அழகு...நீ என்னோடப் பிள்ளை. உன்னோட சுக  துக்கங்கள்ல எனக்கும் பங்கு இருக்குப்பா...!” “ஆறு நாள் கம்பனியிலே கடுமையான வேலை....! ஓய்வு நா

புத்தாக்கம்

சிறுகதை :                       புத்தாக்கம்                                    12.12.2012                             வே.ம.அருச்சுணன் – மலேசியா         "கண்ணா....! போன வருசம் என்னைக் கவுத்த மாதிரி இந்த                     வருசமும் கவுத்திடாதே!” “எடுத்தேன் கவுத்தேனு பேசுறது சரி இல்ல  கோபி. !” “உன்னோட வாயில இருந்து ‘ கவுத்தேனு ’ என்ற     வார்த்தை உன்னை அறியாமலேயே வந்துடுச்சுப் பாத்தியா.......!” “கெட்டவன் என்றைக்கும் கெட்டவனாதான் இருக்கனுமா என்ன ?” “மனிதனா இருந்தா நீ சொல்ற மாதிரி திருந்த வாய்ப்பு இருக்கு.       ஆனா , நரி குணம் கொண்ட நீ திருந்தி மனிதனா வாழ்வதற்குச் சான்சே இல்ல!” “ சந்தர்பச் சூழ்நிலையாலக் கூடாதவர்களோடுக் கூடி ஏதோ ஓர் உணர்வுல உனக்கு எதிரா  ஒரு தப்புச் செஞ்சிட்டேன் !” “நீ செஞ்சத் தப்புனால அநியாயமாகத் தலைவர் தேர்தல்ல நான் தோற்றுப் போயிட்டேன்.அதனால நான் அடைஞ்ச அவமானம் கொஞ்சம் நஞ்சமில்ல கண்ணா!” “கோபி.....நான் குமாரை நம்பி ஓட்டுப் போட்டதுக்கு , எனக்கு நல்ல பாடம் கிடைச்சது.தேர்தல்ல ஜெயித்தவுடனே , தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் அவன் காற்றில் பறக்கவிட்டுட்ட

கொள்வோம் செல்வாக்கு

ஆச புதுக்கவிதை:           கொள்வோம் செல்வாக்கு                                   வே.ம.அருச்சுணன் – மலேசியா  வாக்கு உன்னைக் காட்டும் நீ  நல்லவனா , கெட்டவனா என்பதை மறைக்காமல் உலகுக்கு சுட்டும் . அருளாளர் அளிப்பார் நல்வாக்கு அதை ஏற்றால் உனக்குச்  செல்வாக்கு. நல்லோர் வழங்கிடும் வாக்கினிலே நன்மைகள் பெருகிடும் உலகினிலே சத்திய வாக்கு நிலைத்தாலே பிறந்திடும்  நித்தம் சுகவாழ்க்கை. வாக்கு அளிப்பது எளிதாகும் அதைக் காப்பது என்றும் அரிதாகும் நியதியை  உணர்ந்து துல்லியமாய்ச் செயல் பட்டால் ஏளனம் உன் வாழ்வில் நிலைக் கொள்ளா. தேர்தல் களத்தில் உன் வாக்குப் பொன் வாக்கு அரசியல்வாதிக்கோ  உயிர் வாக்கு உனக்குத் தருவார் பல வாக்கு தாளம் தப்பாமல் பாடுவார் கடவுள் வாழ்த்து. அறிந்து வாக்களித்தால் அமைந்திடும் நல்லரசு அறியாமை வாக்கால் அமைந்திடும் பேய் அரசு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அதிர்ஸ்ட தேவதையை முறையாய்க் கவனித்துப்பார் அறிவுக்கண்ணைத் திறந்து பார் ஆத்மாவைக் கேட்டுப்பார்   அடுத்துவரும் தலைமுறையை நினைத்துப் பார் நி