முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக....!





புதுக்கவிதை:   புத்தாண்டே புதுவாழ்வைத் தந்திடுக...!
  
                           வே.ம. அருச்சுணன்    
அதிர்வையும் அனுபவங்களையும் தந்த
2012 ஆம் ஆண்டே விடை பெறுக
பூத்துக் குலுங்கப் போகும் 2013 ஆம் ஆண்டே
நம்பிக்கை மலர்களை
உள்ளத்தில் நிறைவாய் ஏற்றி
வரவேற்பு கூறுகிறோம்
வளமான வாழ்வை வஞ்சகமின்றி
எனது சமுதாயத்திற்குத் தந்திடுக.....!

பட்ட துன்பம் போதும்
செமத்தியாய் ஏமாந்தது போதும்
மரம் போல் ஏணியாய் நின்றது போதும்
துணிவாய் ஏணியில் திடமாய் ஏறி
வெற்றி வானில்  பயணிக்க
வந்திடுக  புத்தாண்டே....!

வாழ்வு தந்த பொன் நாடும்
தாய் தந்த செம்மொழியும்
உள்ளத்தில் வைரமாய் மின்னிட
ஒற்றுமை மக்கள் மனதிலே
தேனாய்த் பாய்ந்திட
விரைந்து வந்திடுகப் புத்தாண்டே....!

நாட்டில் நல்லவைப் பிறந்திட
வல்லமை தாராய்ப்
பிணக்குகள் இன்றி                                                         
ஒருதாய் மக்களாய்
ஆட்சிக்கட்டிலில்
பேதமின்றி சமமாய்ப் பங்கு தந்து
பல்லின மக்களும்
மகிழ்ந்திட நிறைவான
வாழ்வைத் தந்திடுகப் புத்தாண்டே....!


பாசமும் நேசமும் மக்களிடம் பல்கிட
பல்லின மக்கள் சகிப்புடனே வாழ்ந்திட
வந்திடுக புத்தாண்டே.....!

                           முடிவு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...