முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வன்மங்கள் மறுத்திடுவீர்

                               வன்மங்கள் மறுத்திடுவீர்                                                                      வே.ம.அருச்சுணன்  மக்கள் தொண்டை மகேசன் தொண்டறிக       மாசற்ற அரசியல் கொள்வீர்     நக்கல் குணத்தால்   நாளை ஓட்டுதல்        நாளும்    நாடும்   கெடுவீர்.....!   வழிகள்   பலவுண்டு   உண்மை அறிந்திடுக      வாழும்   போதே   செய்வீர் அழியும் எண்ணங்கள்   தொலைத்திடு       ஆறலும் அறிவும்   தந்திடுவீர்.......! துணிவும் உண்மையும் மனதில் நிறுத்துக         தூய்மையும் துடிப்பும் அடைவீர் பணிவும்   பாசமும்   அணைத்தே செல்கவே       பாவமும்    துன்பமும்   கானல்நீர்.......! பகட்டால்   வாழ்வில்   கேடுகள்   குறைத்திடுக       பண்பாளர்    நெறிதனில்    செல்வீர் சுகதுக்கம் வருவதே   இயற்கையே   புரிந்திடுக                சூதாட்டம் களைந்தே   வாழ்வீர்......! வன்மங்கள்   கூடிட்ட இந்நாளை உணர்ந்திடுக         வாழ்வினை பொன்னாய் ஏற்றிடுவீர்........!                 

பூங்காற்றாய் வந்திடுமே

                             பூங்காற்றாய் வந்திடுமே                (அறுசீர் விருத்தம்)             வே.ம.அருச்சுணன்  பல்லினம்             கொண்டிந்த        நாட்டில       நற்சுவை      உணவுக்கு            பஞ்சமில எல்லையிலா       மகிழ்ச்சியும்        மறையில      ஏற்றமும்       நாளுமே             குறையல எல்லோரும்        விரும்பிடும்        வகையில       எளிதாய்      மலிவான          விலையில நில்லாமல்          உண்பதும்         துறக்கல        நீடிக்கும்      போக்கும்          விலங்கல.....!       நல்லுணவு          நாசிலெமா         கண்டாலே       நாக்கில்       எச்சில்               ஊறிடுமே கல்லாரும்          கற்றோரும்         அதனை        காலம்         கரையுமுன்            உண்பார் எல்லார்               மகிழ்வும்              மிஞ்சிடுவார்        ஏற்றமிகு    விலையிலும்         உருசிப்பார் நில்லாது           அறுசுவை            வேண்டுவார்          நீடிக்கும்       சுவைக்கே           ஏங்கிடுவார்....! செந்தீயாய்          நெத்திலிச்         சம்பலும்      

தி.மு. கழகதின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் எழுத்தாளர் வே.ம.அருச்சுணன்

எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் இலக்கிய வட்டம்

எழுத்தாளர் வே.ம அருச்சுணன் அவர்களின்  வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடில் எழுத்தாளர் துரைராஜுடன் பேராசிரியர் குமரன் அவர்களுடன்..... எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் நீதிபதியாக தேர்ந்தெடுத்த சிறுகதைகளை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்  2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தொகுப்பாக  வெளியிட்டது.... மான்புமிகு இந்திய தூதருடன் 9/10/2016 இல் மலாயா பல்கலைகழகத்தின் பேரவைக் கதைகள் போட்டி நீதிபதியாக பணியாற்றியதற்கு துன் சாமிவேலு அவர்களால் சிறப்பிக்கப்பட்டார். முன்னாள் துணைச் சுகாதாரத்துறை  அமைச்சர் டான்ஸ்ரீ குமரன் அவர்களுடன் முன்னாள் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர்  டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம்  அவர்களுடன்.....  மதிப்புமிகு ASP தெய்வீகன் அவர்களுடன் தமிழக எழுத்தாளர் மாலன் மற்றும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுடன் தமிழக எழுத்தாளர் சுப்பிரபாரதிமணியன் நூல் வெளியீட்டில்....  எழுத்தாளர் வே.ம.அருச்சுணன், முனைவர் ரெ.கார்த்திகேசு மற்றும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜே

எழுத்தாளர், ஆசிரியர் திரு.வே.ம.அருச்சுணன் அவர்களை முன்னாள் மாணவர்களால் கவுரவிக்கப்படுகிறார்.

காப்பார் தமிழ்ப்பள்ளி முன்னாள்  மாணவர் சங்கம்                PERSATUAN BEKAS PELAJAR SJK TAMIL KAPAR                                      "மகுடம் சூட்டுவோம்"                                                  மலேசியா                                                    10 / 8 / 2019 எழுத்தாளர், ஆசிரியர் திரு.வே.ம.அருச்சுணன் அவர்களை முன்னாள் மாணவர்களால் கவுரவிக்கப்படுகிறார்.

தீபாவளி சிறுகதை: தேடிய தருணம் ஓடி வருக

மலேசிய நாளேடு தமிழ் மலரில்  தீபாவளி சிறப்புச்  சிறுகதையாக வெளியீடு கண்டது   ,2019                               தேடிய தருணம் ஓடி வருக                                                    வே.ம.அருச்சுணன் இளங்கதிரவனின் ஒளி எங்கும் வியாபித்துக்கொண்டிருக்கிறது. இதமான அந்த காலை வேளையில் , இளையோர் மட்டுமின்றி முதியவர்களும் மிகுந்த சுறுசுறுப்புடன் மண்டபத்திற்குள் நுழைகின்றனர். உள்நாட்டினர் மட்டுமின்றி பல வெளிநாட்டவர்களும் முகமலர்ச்சியுடன் அன்பொழுக பல்வேறு மொழிகளில் உரையாடி மகிழ்வுடன் நடந்து செல்கின்றனர். அவர்களோடு நானும் மனைவியுடன்   சென்று எங்களுக்குரிய இருக்கையில் அமர்கிறோம். மண்டபத்திற்கு வெளியே பிரேத்தியமாக அமைக்கப்பட்டிருக்கும் அகன்ற திரைக்கு முன் , மண்டபத்திற்கு உள்ளே நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டுகளிக்க குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும்   கூடியிருக்கின்றனர். வெளியில் சில்லென்று வீசிய காற்றை விட , மண்டபத்தினுள் குளிர் இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே மனைவிக்கு உடல் நடுங்கத் தொடங்குகிறது! மனைவி சேலை முந்தானியால் உடம்பை இழுத்து மூடிக்கொள்கிறாள்.இது போன்ற நிகழ்ச்