முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூங்காற்றாய் வந்திடுமே


                             பூங்காற்றாய் வந்திடுமே              
(அறுசீர் விருத்தம்)          வே.ம.அருச்சுணன் 


பல்லினம்          கொண்டிந்த      நாட்டில
      நற்சுவை    உணவுக்கு         பஞ்சமில
எல்லையிலா     மகிழ்ச்சியும்       மறையில
     ஏற்றமும்      நாளுமே           குறையல
எல்லோரும்       விரும்பிடும்       வகையில
      எளிதாய்     மலிவான         விலையில
நில்லாமல்         உண்பதும்        துறக்கல
       நீடிக்கும்     போக்கும்         விலங்கல.....!     

நல்லுணவு        நாசிலெமா       கண்டாலே
      நாக்கில்     எச்சில்             ஊறிடுமே
கல்லாரும்        கற்றோரும்       அதனை
       காலம்      கரையுமுன்        உண்பார்
எல்லார்           மகிழ்வும்           மிஞ்சிடுவார்
       ஏற்றமிகு   விலையிலும்      உருசிப்பார்
நில்லாது         அறுசுவை         வேண்டுவார்  
      நீடிக்கும்     சுவைக்கே        ஏங்கிடுவார்....!

செந்தீயாய்        நெத்திலிச்       சம்பலும்
      சேர்ந்தே     கணவாய்க்       குழம்பும்
செந்நிறத்து      பொரித்தக்        கோழியும்
வெந்திட்ட                கோழிமுட்டை     அவியலும்
   வேண்டியளவு        தேங்காய்ச்          சோற்றுடன்
குந்தகமின்றி            தே தாரே          உறிஞ்சலுடன்
         கூச்சலின்றி      வயிற்றுக்குள்      தள்ளுகிறார்.....!

இரும்பாய்ப்              பன்னெடுங்          காலமும்
         ஈர்ப்பாய்         உண்ணும்            வேளையிலே
பெருமளவில்           உடலிலே             உபாதைகள்
         போராய்த்      தொடங்கும்           கணத்திலே
கருத்திழந்து         கண்டபடி                உண்பதாலே
          காசைக்      கொடுத்தே            துயர்பெற்றே
வருந்துதல்           ஏற்புடையச்             செயலாமோ
      வாழ்வதற்கு    மட்டுமுண்               நலம்காண்பார்.....!  

கொடியநோய்        தரும்வயிறே           மூலமே
        கேடுவரும்     உணவுகள்             தள்ளுவோமே  
நெடியவாழ்வு         பூங்காற்றாய்           வந்திடுமே
         நோயற்ற      வாழ்வுமே              கூடிடுமே
மடியாத                 உடல்நலம்            வந்திடுமே         
       மாண்டிடும்      காலம்நிதம்           நீண்டிடுமே
குடியுயர்ந்திட          கோடிநன்மை        செய்வோமே   
         கூடிமகிழ      காலனும்              வாழ்த்திடுமே.....!
          


குப்பைகள்               போடுமிடமாய்       வயிற்றினை       
     கூடியமட்டும்        செய்யாமல்           மனிதனாய்த்       
தப்புகள்                  இனியும்                கொள்ளாமல்
        தாயுள்ளம்       கொண்டவுயர்        மனத்தாலே
ஒப்பிலா                  செயலாலே           பேரின்பம்
        ஓயாமல்         முயற்சிகள்             செய்வீரே
தொப்பை                வயிற்றைத்            துறப்பில்புதுத்
       தோற்றம்         பெற்றேநீ               மகிழ்வீரே......!

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...